Thursday, January 19, 2012









வேட்டை திரை விமர்சனம்:

வேட்டை நன்றாக விட்டிருக்கிறார்கள் குறட்டை..!

இதற்கு மேல் இந்த படத்தை பற்றி எழுதவும் முடியாது..எழுதினால் உங்களால் படிக்கவும் முடியாது..நன்றி!

Thursday, October 27, 2011

ஏழாம் அறிவு- திரை விமர்சனம்

ஏழாம் அறிவு - கருத்துக்கள் நிறைய இருந்தாலும்,
கமர்ஷியல் கலவைகள் சரியில்லை!

படத்தின் நிறை குறைகளை அலசிப் பார்ப்பதற்கு முன்... ஏழாம் அறிவு படத்தில்... பக்கத்து நாட்டுல என்ன நடந்தது, வீரம் வீரம் என்று சொல்லி என்ன செய்தோம்... கடைசியாக எல்லோரும் செத்தது தானே மிச்சம் என்று ஸ்ருதி சொல்ல... வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் இருக்கு... ஒரு நாட்டோடு ஒன்பது நாடுகள் மோதுவது வீரமல்ல, துரோகம்! என்று சூர்யா பேசும் வசனம் இதயத்தில் இடியாய் பாய்கிறது. இந்த வசனத்தை தைரியமாக உணர்வோடு படத்தில் வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஒரு சல்யூட்!



படத்திற்கு வருவோம்... தற்காப்புக் கலையான குங்ஃபூவில் சிறந்து விளங்குவது சீனா. இந்த கலையை சீன மக்களுக்கு கற்றுக் கொடுத்தவர் புத்த மதத்தை தழுவிய போதி தர்மர் என்பவர். இதில் ஆச்சரியம் என்ன என்றால் போதிதர்மர் ஒரு தமிழர்.

பாரம்பரிய கலைகளை நாம் மறந்துவிட்டோம்... ஆனால் ஒரு தமிழன் கற்றுக்கொடுத்த கலை அறிவை வைத்தே தமிழர்களுக்கு ஆப்பு வைக்க துணிந்து விட்டான் சீனாக்காரன்... இந்த சிக்கலை எப்படி சமாளிக்கபோகிறோம் என்ற கற்பனைக் கலவையே ஏழாம் அறிவு.

கி.பி 6ஆம் நூற்றாண்டில் துவங்குகிறது கதை. பல்லவர்கள் காலத்தில் தான் தென்னிந்தியாவில் புத்த மதமும் தழைத்தோங்கியது. தென் இந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான பல்லவ வம்சத்தை சேர்ந்தவர் ‘போதி தர்மர்’ (போதிதர்மராக அறிமுகமாகிறார் சூர்யா). அச்சமயத்தில் புத்த மதத்தை தழுவிய போதி தர்மர், மகாயான புத்த மதத்தையும் கலை, மருத்துவம், எதிரில் இருப்பவரை தன் வயப்படுத்தும் வர்மக்கலை போன்ற கலைகளை பரப்புவதற்காக சீனாவிற்கு பயணம் மேற்கொள்கிறார் போதி தர்மர்.

போதிதர்மர் சீனா சென்றிருந்த நேரம், சீனா பயங்கரமான தொற்று வியாதியால் பாதிக்கப்படுகிறது. அதில் இருந்து சீன மக்களை காப்பாற்றுகிறது போதிதர்மரின் மருத்துவம். இதனால் அப்பகுதி மக்களால் தெய்வமாகவே வணங்கப்படுகிறார் போதிதர்மர். அப்பகுதி மக்கள் எதிரிகளால் தாக்கப்படும் போதும் தன் வர்மக் கலைகளை பயன்படுத்தி மக்களை காப்பாற்றுகிறார்.

சாவூலின் குங்ஃபு என்ற தற்காப்பு கலையை சீன மக்களுக்கு கற்றுக்கொடுக்கிறார். கலை, மருத்துவம் என அனைத்திலும் சிறந்து விளங்கியவர் போதிதர்மர். அவர் மீண்டும் தன் தமிழகம் திரும்ப விருப்பப்பட்ட போதும், போதிர்மரின் உயிர் சீன மண்ணில் பிரிய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் விருப்பியதால் அவர்கள் கொடுத்த விஷம் கலந்த உணவை உண்டு அங்கேயே தன் உயிரை விடுகிறார் போதிதர்மர்.

பையோ வார் ( உயிர் போர் ) பற்றிய விஷயங்களை நம் தமிழ்படமான ‘ஈ’ படத்தில் பார்த்திருப்போம். ஏழாம் அறிவு படத்தில் இந்தியாவை தாக்க சீனா ரெட் என்கிற பையோ வார் பிளானில் இறங்குகிறது. அதன் தொடக்கமாக சீனாவை சேர்ந்த டோங்லி ( படத்தின் வில்லன் ) என்றவன் தமிழ்நாட்டுக்கு வருகிறான்.


அரவிந்த் ( சூர்யா ) சென்னையில் நடக்கும் பாம்பே சர்க்கஸ் கம்பனியில் வேலைபார்க்கும் சர்க்கஸ் கலைஞர். சர வெடியாக வெடிக்க இருந்த ‘ரிங்க ரிங்கா’ பாட்டு ஊசி வெடியாக மாறிவிட்டாலும்... அதில் சூர்யாவின் சாகசங்களும், அதைவிட மற்ற சர்க்கஸ் கலைஞர்களின் சாகசங்களும் பலே!

ரெட் ஆபரேஷனை தமிழகத்தில் தொடங்க டோங்லி வந்துவிடுகிறான். வந்ததும் அவனது முதல் வேலை, சுபாவை (ஸ்ருதிஹாசன்) கொலை செய்வதுதான். ஏன்?

மறபியல் பொறியாளராக சுபா (ஸ்ருதிஹாசன்). பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்தவர் போதிதர்மர். இப்போது உலகில் பல விளங்க முடியாத நோய்கள் வர தொடங்கிவிட்டது. போதிதர்மரின் டி.என்.ஏ.வை எடுத்து ஆராய்ச்சி செய்து, அதே விதமான டி.என்.ஏ-வை போதிதர்மரின் பரம்பரையில் யாருக்காவது இருக்கும். போதிதர்மரின் டி.என்.ஏ.வை இவருக்கு பொருத்தினால், போதிதர்மரின் கலை, மருத்துவ அறிவு மீண்டும் உலகத்துக்கு கிடைக்கும் என்பது தான் சுபாவின் ஆராய்ச்சி. (இந்த டி.என்.ஏ மேட்டர் Assassin's Creed என்ற ஆங்கில படத்தில் இருந்து உருவப்பட்டதாகவே சொல்லப்படுகிறது...)

சுபாவின் ஆராய்ச்சி விஷயங்களை காசு வாங்கிக்கொண்டு சீனாவுக்கு தெரியப்படுத்துபவர் சுபாவின் பேராசிரியர் ரங்கராஜன்... இந்த சகுனி வேலையால் தான் வில்லன் டோங்லி தமிழ்நாட்டுக்கு வந்து புது வைரஸ் கிரிமியை பரப்பியதோடு... சுபாவை கொல்ல முயர்ச்சி செய்கிறான். போதிதர்மர் பரம்பரையில் வந்தவர் சர்க்கஸ் கலைஞராக இருக்கும் அரவிந்த். அரவிந்தை வைத்து அவருக்கும் தெரியாமலே ஆராய்ச்சியை தொடர்கிறார் சுபா.

சுபாவின் பழக்கத்தை காதலாக எடுத்துக்கொண்டு, அது இல்லை என்ற பின் ரெயில்வே ட்ராக்கில் யம்மா யம்மா சோகப்பாட்டுப் பாடி பின் ஆராய்ச்சியின் முக்கியத்துவம் தெரிந்து சுபாவுக்கு ஒத்துழைப்பு தருகிறார் அரவிந்த்.

போதிதர்மரின் திறமைகள் திருப்பவர... விளைவுகளை சந்திக்கிறான் வில்லன் டோங்லி!

படத்தின் முதல் பாதியில் பல பிரம்மாண்ட காட்சிகளோடு, நாம் அறியாத பல தகவல்களை சொன்னாலும்... பார்வையாளனுக்கும் படத்துக்கும் ஏதோ ஒருவித சம்பந்தம் இல்லாமலே போய்விடுகிறது.

முதல் பாதியில் பழையகால சீன கிராமத்தை காண்பிக்க உழைத்தவர்களுக்கு சபாஷ்! போதிதர்மரால் காப்பாற்றப்படும் சிறுமியின் சிரிப்பும் அதன் பின்னணி இசையும் இதம். சூர்யாவின் வர்மக்கலை வித்தைகளும் ஹீரோயிஸம் கலந்ததாகவே பிரம்மிப்பூட்டியது.

ஆனால் முதல் பாதியில் சூர்யாவுக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் இருக்கிற ரொமான்ஸ் காட்சிகள் எம்.ஜி.ஆர் காலத்து பழைய ஸ்டைல். அந்த யானை சவாரி ரொமான்ஸ் காட்சி புதுசு. காதல் தோல்வி என்று யம்மா யம்மா பாடலில் சூர்யா உருகி உருகி பாடுகிற அளவுக்கு அதற்கு முன்பு இருந்த காதல் காட்சிகள் உருக்கமானதாக அமையவில்லை என்பதே உண்மை.


முதல் பாதியிலும் க்ளைமாக்ஸ் காட்சி தவிர்த்தும் ஹிப்னாடிஸம் ( நோக்கு வர்மம் - எதிரில் இருப்பவர்களை தன் வசம் வசீகரப்படுத்துவது ) என்கிற கலையை வைத்துதான் சண்டை போடுகிறார் வில்லன். ஹிப்னாடிஸம் கலையை உணர்ந்தவர்களாகவே இருந்தாலும், அதை படமாக்கிய விதம் எதோ காமெடித்தனமாகவே இருக்கிறது.

இரண்டாம் பாதியில் லாரி முதல் கார், ஆட்டோ எல்லாம் ரவுண்டுகட்டி பறப்பது தயாரிப்பாளரின் பர்ஸை காலி செய்ததைத் தவிர பிரம்மாண்டம் எதுவும் இல்லை... வீடியோ கேம்ஸ் தான் நினைவுக்கு வருகிறது.

தமிழ் மொழியை குரங்கு என்று ஒருவர் சொல்லிவிட அவரை வார்த்தைகளால் விளாசும் காட்சிக்கு வந்த அபாரமான கைதட்டல், இன்னும் நாம் உணர்வுள்ள தமிழர்களாய் இருக்கிறோம் என்பதை நிரூபிக்கிறது. வெள்ளைக்காரன் இங்க வந்து நம்மை அடிமைப்படுத்தினான், இப்போ நாம அங்க போய் அடிமையாய் இருக்கிறோம் என்ற வசனங்கள் நச்! வசங்களோடு நில்லாமல் ஸ்ருதிஹாசனின் நடிப்புக்கும் கைதட்டல்! வில்லனிடம் போனில் கண்ணீர்விடும் காட்சியில் ஸ்ருதி பின்னிட்டார்.

வில்லன் நடிகர் ஜானி ட்ரி, பார்வையில் மிரட்டுகிறார். க்ளைமக்ஸ் காட்சியில் தான், நிமிர வைக்கிறார் இயக்குனர். பீட்டர் ஹென் அசாத்தியமான சண்டைக்காட்சியாகவே அதை உருவாக்கி இருக்கிறார். அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி விழுது.

ரவி கே.சந்திரனின் ஷாட்டும் ஆண்டனியின் கட்டும் இயக்குனர் சொன்ன சொல் கேட்டிருக்கிறது என்றே சொல்லலாம். இன்னும் என்ன தோழா... பாடலை வீணடிப்பார்கள் என்பது எதிர்பார்த்த விஷயம். நல்லவேளை படத்தின் பின்புலத்தில் வைத்து மகிழ்ச்சி. ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் முன்னந்தி சாரல்..., யம்மா யம்மா..., அவருக்கே உரிய மெலடி ஸ்டைல். ஓரிரு பாடல்கள் அவர் படத்தின் பாடல்களை அவரே ரீமிக்ஸ் செய்தது போல ஒரு உணர்வு.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படங்கள், கருத்துக்களை கமர்ஷியல் கலவையோடு சொல்வது போலவே இருக்கும். இதில் கருத்துக்கள் நிறைய இருந்தாலும், கமர்ஷியல் கலவைகள் சரியில்லை. இந்தக் கூட்டணியில் இன்னொரு கஜினியை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே!

எவ்வளவு எதிர்பார்த்தாலும் அதைவிட மேலே மேலே மேலே இருக்கும் என்று சொன்னார் இயக்குனர். உண்மையை சொன்னால் அவர் சொன்னதை வைத்து எதிர்பார்த்ததைவிட படம் கொஞ்சம் கீழே தான்!

நன்றி - நக்கீரன்.com

Saturday, June 18, 2011

அன்று- ஆனந்த விகடனும் ஜெயமோகன் கட்டுரையும்!


எழுத்தாளர் ஜெயமோகனின் வலைப்பூ தான் இலக்கிய வட்டாரத்தின் சமீபத்திய பரபரப்பு. சர்ச்சைக்கும் ஜெயமோகனுக்கும் அப்படி ஒரு பந்தம். 'கருணாநிதி இலக்கிய வாதியே இல்லை!' என்பது தொடங்கி, 'பெரியார், தமிழ்ப் பண்பாடு பற்றிய ஆரம்ப அறிவுகூட இல்லாதவர்!' என்பது வரை ஜெயமோகனின் தடாலடி ஸ்டேட்மென்ட்கள் பிரபலமானவை. 'இனிமேல் எழுதுவதில்லை' என அறிவித்துவிட்டுக் கொஞ்ச நாள் ஒதுங்கி இருந்த ஜெயமோகன், வலைப்பூ தொடங்கி எழுத ஆரம்பித்ததும் வெடிக்கத் தொடங்கிவிட்டது சர்ச்சை சரவெடி!
'தொப்பி'
அவர் இரு லேகியங்களைத் தவறாமல் உண்பதுண்டாம். ஒன்று, தங்க பஸ்பம்; நிறம் மங்காமல்இருப்பதற்காக. இன்னொன்று, சிட்டுக்குருவி லேகியம்; வீரியத்துக்காக! ஆண் சிட்டுக் குருவிகள் எந் நேரமும் பெண் புடைசூழ இருக்குமாம். ஆயிரக்கணக்கில் ஆண் சிட்டுக் குருவிகளைக்கொண்டு செய்யப்படும் சிட்டுக் குருவி லேகியம் சாப்பிடுவதால், எம்.ஜி.ஆர். வெளிப்புறப் படப்பிடிப்பில் இருந்தால் அவரை மொய்க்கும் பெண் சிட்டுக் குருவிகளை விரட்ட தலைக்கு மேல் வலையைக் கட்டி ஜஸ்டின் தலைமையில் ஒரு குழு தயாராக இருக்குமாம். வதந்திதான்.

'எங்களூரில் காந்தாராவ், கிருஷ்ணா போன்ற தெலுங்கு நடிகர்களுக்குத்தான் செல்வாக்கு. குலசேகரத்தில் இரண்டே தியேட்டர்கள்; ஒன்றில் மலையாளப் படம் என்பதால், எம்.ஜி.ஆர். வேறு வழியில்லாமல் ரசிக்கப்பட்டார். செல்லப் பெயர் தொப்பி. அவர் முதுமையை மறைக்க முகத்தின் மீது பச்சைப் பப்படம் ஒட்டுவதாக கணியான் சங்கரன் சொல்லி எங்க ளூரில் பரவலாக நம்பப்பட்டது. ஆகவே, பச்சைப் பப்படம் என்ற பேரும் சில இடங்களில் புழக்கத்தில்இருந்தது.

லேகியத்தின் பலன்களை நாம் சினிமாவிலும் பார்க்கலாம். எம்.ஜி.ஆர். காதல் காட்சிகளில் மூன்று வகை நடிப்புகளை வெளிப் படுத்துவார். நெளிந்து நின்று கீழு தட்டைக் கடித்து அரைப் புன்னகை யுடன் மேலும் கீழும் பார்ப்பது... கதாநாயகியின் பின்னால் வந்து நின்று அவள் இரு புஜங்களிலும் பிடித்து சரேலென்று ஒரு பக்கமாக விலக்கி கேமராவைப் பார்த்து உதட்டைச் சுழிப்பது. இடையை ஒசித்து ஒசித்துச் செல்லும் (ஷாட் முடிந்த பின் சரோஜாதேவிக்கு இடுப்பில் எண்ணெய் போட்டு சுளுக்கு எடுப்பார்களாமே!) கதா நாயகிக்குப் பின்னால் துள்ளி ஓடுவது... இதைத் தவிரவும் பல சிட்டுக் குருவித்தனங்கள்!

எம்.ஜி.ஆர். தமிழ்ப் பண்பாடு தவறுவதில்லை. (இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பளை) பாட்டில் கதாநாயகியைப் புல் தரையிலும் மணலிலும் போட்டு புரட்டி எடுத்து, மெல்லிசான சேலை உடுத்திருந்தாளென்றால் மழையில் நனையவைத்து, கேமரா பக்கவாட்டில் இருக்கிற தென்றால் முந்தானையைப் பிடித்து இழுத்து, உதட்டைக் கடித்தபடி பின்னால் துள்ளி ஓடி இடை பிடித்து இழுத்து அணைத்து, அவள் கால்கள் நடுவே காலை நுழைத்து ராமன் வில்லை வளைப்பது போல வளைத்து, அவளைப் பூச்செடி களுக்குப் பின்னால் இட்டுச் சென்று, இரு பூக்களை ஒன்றோ டொன்று உரசவைத்து, பாறை மேல் படுக்கவைத்து, மேலேறிப் படுத்து நாஸ்தி செய்தாலும், பாட்டு இல்லாதபோது பண்பாக 'அதெல்லாம் கையானத்துக்கு அப்பம். நீ இப்ப வீத்துக்கு போ!' என்றுதானே அவர் சொல்கிறார்.

எம்.ஜி.ஆர். படத்தில் பாடல்கள் அர்த்தமுள்ளவை. 'ஆண்ட வன் உலகத்தின் முதலாளி... அவனுக்கு நானொரு தொழி லாளி!' அப்படியென்றால் ஏமாற்றலாம். கூலி கேட்டு வையலாம். போஸ்டர் ஒட்டி நாறடிக்கலாம். இது இப்போ தைய சிந்தை. அன்றெல்லாம் பாட்டு புரிவதில்லை. 'தம்பீ நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று...' காஞ்சி என்றால் என்ன? தொடுவட்டியில் வாங்கின சாணித்தாள் பாட்டுப் புத்தகத்தில் பொதுவாகப் பிழைகள் அதிகம். ஆகவே, உள்ளூர் தமிழறிஞரான நான் அதைக் 'கஞ்சியிலே' என்று திருத்தினேன். அப்படியானால் 'படித்தேன்' தவறுதானே? குடித்தேன் என்று ஆக்கியபோது, சுமாராக வந்தது. தேவாசீர்வாதம் புலவர், ''அது செரிதேண்டே மக்கா..! கஞ்சித் தலைவன்னுகூட ஒரு பழைய படம் வந்திட்டுண்டு. ஏழைகளுக்கு அமிருதம்லா கஞ்சி? பதார்த்தகுண சிந்தாமணியிலே என்ன சொல்லியுருக்குண்ணாக்க...'' என்றார்.
எம்.ஜி.யாரின் பேச்சு வேறு எங்களுக்குப் புரிவதில்லை. தீப்பொறி ஆறுமுகம் மேடையில் சொல்லும் நகைச்சுவை ஒன்று உண்டு. ஆசிரியர்கள் போராட்டம் நடந்தபோது, அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்த எம்.ஜி.ஆர். சொன்னாராம்... 'உங்களுக்கெல்லாம் பைப்பு இருக்கு. பம்பு இல்லை.' ஆசிரியர்கள் திக்பிரமை அடித்துப்போய், பேச்சுவார்த்தை முறிந்தே போயிற்று. தலைவர் சொன்னது, 'படிப்பு இருக்கிறது, பண்பு இல்லை' என்று. அதேபோல காதல் வசனங்கள்... ''கமலா, நீ என்னைத் தப்பா புழிஞ்சுக்கிட்டே (அடிப்பாவி) என்னைக் கயமை அய்க்குது. எங்கம்மாவுக்கு நான் ஒரு சத்தியம் செஞ்சு குதித்திருக்கேன்.'' பொன்மொழிகளும் சிக்க லானவை... 'தேய்ஞ்சு செஞ்சா தவழு. தேயாம செஞ்சா தப்பு!' தப்புக்கு தவழ வேண்டாம், பெஞ்சு மேல் ஏறினால் போதுமா? 'அம்மா அப்பி சொல்லாதீங்கம்மா! தை செஞ்சு அப்பி சொல்லாதீங்க. உங்க மகன் ஒருநாளும் அப்பி செய்ய மாட்டான்.' எங்களூரில் அப்பி என் றால், சின்னப்பிள்ளை கொல்லைக் குப் போவது என்றொரு பொருள் உண்டு.

ஆனால், ஒரு ஆச்சர்யம் எனக்கு காத்திருந்தது. இருபதாண்டுகளுக் குப் பின்னால் என்னால் இப்போது ஒரு பழந்தமிழ்ப் படத்தைக்கூடப் பத்து நிமிடம் பார்க்க முடியவில்லை. ஆனால், எம்.ஜி.ஆர். படங்களை பெரும்பாலும் கடைசி வரை பார்க்க முடிகிறது, அம்புலிமாமா கதை படிக்கும் ஆர்வத்துடன்! திரைக்கதை பற்றிக் கற்ற பின், இந்த இரண்டாண்டுகளில் கச்சிதமாகத் திரைக்கதை அமைக்கப்பட்ட படங்கள் என்று கணிசமான எம்.ஜி.ஆர். படங்களைப் பற்றி எண்ணத் தோன்றுகிறது. தமிழில் எடுக்கப்பட்ட மிகச் சிறந்த வணிகத் திரைக்கதை 'எங்க வீட்டுப் பிள்ளை' தான்!'


'திலகம்'

'...சிவாஜியை எங்களூரில் ஆசாரிமார் தவிர்த்துப் பிறருக்குப் பிடிக்காது. வேறு யாருக்காவது பிடித்திருந்தாலும் மதிப்பான நாயர், நாடார் பட்டங்களை இழக்க விரும்பாமல் அமைதி காத்தார்கள். பொதுவாக முக்கியக் கட்டங்களில் பாடித் தொலைக்கிறவர் என்ற குற்றச்சாட்டு பரவல். தங்கை கல்யாணமாகிப் போகும் நேரம் வாசலில் டாக்ஸி காத்திருக்க, விருந்தினர் பஸ்ஸைப் பிடிக்கும் அவசரத்தில் நிற்க, பாசம் பீறிட அவர் பாடுவார். நெஞ்சடைக்கப் பாடாமல் சாக மாட்டார். அன்றெல்லாம் சிவாஜிக்கு காஸ்ட்யூம் அமைக்கும்போதே கக்குவதற்கு கால் லிட்டர் சிவப்பு மையும் தயாராக வைத்திருப்பார்கள்.

சிவாஜி படங்களின் நகைச் சுவையின் உச்சம் சண்டைக் காட்சிகள்தான். 'அவன்தான் மனிதன்' என்ற படத்தில் அவர் சண்டைக் காட்சியில் நடித்த போது, நாக்கைக் கடித்தபடி கையை வெடுக் வெடுக் என்று முன்னால் நீட்டிப் பின்னால் இழுப்பார். 'வைக்கோலு பிடுங்கு கான்' என்று அப்பி தாமோதரன் சொல்ல, அது சிவாஜி பட சண்டைக்கான சொல் ஆகியது. 'சுண்டன் படம் எப்பிடி மச்சினா? நாலு வைக்கோலு இருக்குலே... அதுகொள்ளாம், சிரிக்கவகையுண்டு! பின்ன கடசீ ஸீனிலெ மசி துப்பி சாவுதாரு. அங்கினயும் மனசு தெறந்து சிரிக்கிலாம். ஒருமாதிரி கொள்ளாம் கேட்டியா?'...

உச்சம் 'திரிசூலம்'. அதில் மூன்று நடிப்பு. இரு கதாபாத்திரங்கள் முழுக்க முழுக்க நகைச்சுவை. கிழ சிவாஜிக்குப் பக்கவாட்டில் பார்த்தால் தலைகீழ் தேங்காய்மூடி போலத் தெரியும் தாடி. அவர் கே.ஆர்.விஜயாவை பிரிந்திருப்பார். பிரிவுத் துயர் தாங்காமல் தினம் இரண்டு லார்ஜ் ஏற்றிக்கொண்டு (சிவாஜி காங்கிரஸ்காரர் ஆதலினால் படத்தில் இக்காட்சியைக் காட்ட மாட்டார்கள். ஊகம்தான்!) சாட்டையால் தன்னைத்தானே பளார் பளார் என அடிப்பார். அப்போது எதிர் பார்க்கப்படுவது போலவே உதடுகள் துடிக்கும், கன்னம் அதிரும்...

உச்சகட்ட நடிப்பு... 'பகைவர் களே ஓடுங்கள், புலிகள் இரண்டு வருகின்றன...' என்ற வரிக்கு சின்ன சிவாஜி காட்டும் சைகைதான். தமிழ் நடிப்புலகில் அதற்கு ஈடு இணை ஏதுமில்லை. 'தென்னாட்டு மார்லன் பிராண்டோ' என்று சிவாஜியை இதன் பொருட்டே சொன்னார்கள் என்று நினைக்கிறேன்.

-2008 பிப்ரவரி மாதத்தில் மிகவும் பரபரப்படைந்த கட்டுரை இது. சினிமா வட்டாரம், எழுத்துலகம், பத்திரிகைகள் என அல்லோலகல்லோலப்பட்டது, இக்கட்டுரை.

Friday, June 10, 2011

கொடுமைடா கோவிந்த சாமி!




இதை நிதானமா படிங்க..உங்க கருத்தை தவறாம பதிவு செய்யுங்க!
கள்ளகாதலுக்கு தடையாக இருந்த கணவரை, கள்ளகாதலன் துணையுடன் கழுத்தறுத்து கொன்ற மனைவியை போலீஸார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், கொளத்தூர் அடுத்த வெடிக்காரனூரை சேர்ந்த கணபதி மகன் கூலி தொழிலாளி கோவிந்தன் (37). இவரது மனைவி லட்சுமி. நேற்று முன்தினம் காலை தன் வீட்டு கட்டிலில் கழுத்து அறுப்பட்ட நிலையில் கோவிந்தன் பிணமாக கிடந்தார். கொலை தொடர்பாக விசாரணை நடத்திய கொளத்தூர் இன்ஸ்பெக்டர் சக்ரபாணி (பொறுப்பு) தலைமறைவாக இருந்த கோவிந்தன் மனைவி லட்சுமியை நேற்று கைது செய்து விசாரணை நடத்தினார். லட்சுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமிக்கும் கள்ள தொடர்பு இருந்துள்ளது. அதை பழனிச்சாமி உறவினர் குழந்தை கவுண்டர் கண்டித்துள்ளார். அதனால், 2008ல், கள்ள காதலுக்கு தடையாக இருந்த குழந்தை கவுண்டரை லட்சுமி, பழனிச்சாமி இருவரும் கொலை செய்து, பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி அணையில் வீசி விட்டனர். விசாரணை நடத்திய போலீஸார் லட்சுமியையும், பழனிச்சாமியையும் கைது செய்தனர்.
ஜாமீனில் வெளிவந்த பழனிச்சாமியை மற்றொரு கோஷ்டியினர் கொலை செய்தனர். அதனால், குழந்தை கவுண்டர் கொலை வழக்கில் லட்சுமி விடுதலை செய்யப்பட்டார்.
அதன் பின்னர் லட்சுமிக்கு, வெடிக்காரனுரை சேர்ந்த ராஜாராம் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதை கணவர் கோவிந்தன் கண்டித்துள்ளார். எனவே, குழந்தை கவுண்டரை கொலை செய்தது போல, கள்ள காதலுக்கு தடையாக இருந்த கணவர் கோவிந்தனையும் கொலை செய்ய லட்சுமி முடிவு செய்தார். கடந்த 7ம் தேதி இரவு ராஜராமை, தன் வீட்டுக்கு அழைத்து வந்தாள் லட்சுமி. அப்போது கோவிந்தன் குடி போதையில் கட்டிலில் தூங்கி கொண்டிருந்தார். வீட்டினுள் சென்ற லட்சுமி தூங்கி கொண்டிருந்த கோவிந்தனின் இரு கால்களையும் கெட்டியாக பிடித்து கொண்டாள். ராஜாராம் அங்கிருந்த அரிவாளை எடுத்து வந்து கோவிந்தன், கழுத்தை ஆட்டை அறுப்பது போல அறுத்து கொலை செய்துள்ளார். கோவிந்தன் இறந்தது உறுதி செய்த பின், இருவரும் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர். மேற்கண்ட தகவல் விசாரணையில் தெரியவந்தது. லட்சுமியை நேற்று சிறையில் அடைந்த போலீஸார்,தலைமறைவாக உள்ள லட்சுமியின் கள்ள காதலன் ராஜாராமை தேடி வருகின்றனர்.

Tuesday, June 7, 2011


தினமலருக்கு நன்றி!


Saturday, May 28, 2011

பயபுள்ள நம்பிக்கையை விட்ற கூடாது..!

எவ்வளோ பண்றோம்… இத பண்ண மாட்டோமா…’ என்று தமிழகத்தின் விடிவெள்ளி சொன்ன பொன்மொழி, வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு உன்னத தத்துவம். எப்படி? இந்த தன்னம்பிக்கை கொடுக்கும் கதையை படிங்க…

பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள்.. ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். கருப்பு கோட், நீல சட்டை, புள்ளி போட்ட டையுடன் எல்லாவற்றையும் கவனித்தப்படி ஒரு
பக்கத்தில் உட்கார்ந்திருந்தார், நம்ம கந்தசாமி.

உள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார். வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார். பிறகு, நன்றி தெரிவித்தார். சிக்கீரம் முடிக்கணும், சிம்பிளா வைக்கணும்ன்னு முடிவு பண்ணினார்..

முதலில் தொழில்நுட்ப அறிவை சோதிக்க வேண்டும் என்று விரும்பி ஒரு கேள்வி கேட்க நினைத்தார். எப்படியும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் டெக்னாலஜி தெரிந்துதான் வந்திருப்பார்கள். அதனால், இப்படி கேட்டார்.

“உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா தெரியும்? தெரியாதவர்கள் மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.”

2000 பேர் இடத்தை காலி செய்தார்கள்.

நம்ம கந்தசாமிக்கும் ஜாவா தெரியாதுதான். இருந்தும் போகலையே!

“இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல. எதுக்கு போய்கிட்டு? என்னத்தான் நடக்குது பார்ப்போம்” என்றபடி அங்கேயே இருந்து விட்டார்.

அடுத்த கேள்வி, “உங்களில் யாரெல்லாம் நூறு பேருக்கு மேல் ஆட்களை நிர்வகித்து இருக்கிறீர்கள்? அவர்கள் மட்டும் இருக்கலாம்.”

இன்னொரு 2000 வெளியே கிளம்பியது.

கந்தசாமி - “நான் ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாதே? என்ன செய்யலாம்? சரி, அடுத்த கேள்வியை கேட்கலாம்.”

இன்னும் ஆயிரம் பேர் இருக்கிறார்களா? என்று நினைத்துக்கொண்டு பில் கேட்ஸ் கேட்டார், “மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து…”.

சொல்லி முடிக்கும் முன்பே, 500 இருக்கைகள் காற்று வாங்கியது.

”அதையெல்லாம் படிக்க நமக்கு எங்க நேரம் இருந்தது?” பெருமூச்சுவிட்டபடி பில் கேட்ஸையே பார்த்து கொண்டிருந்தார், கந்தசாமி.

ஐரோப்பிய மொத்த கண்டத்திற்கு முழுமையான தலைமை பதவியாச்சே? கண்டம் முழுக்க சுற்ற வேண்டி இருக்குமே? எத்தனை மொழிகள் தெரிந்திருக்கும் என்று பார்ப்போம் என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

“உங்களில் யாருக்கெல்லாம் செர்போ-க்ரோட் மொழி தெரியும்?” - செர்போ-க்ரோட், உலகில் அரிதாக பேசப்படும் மொழி.

இப்ப, அரங்கில் இரண்டே பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் யாரென்று உங்களுக்கு தெரியும்.

அது, “எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?” என்ற நினைப்பில் நம்ம கந்தசாமி.

ஆனாலும், மனசுக்குள் பயம்தான். மூன்று பேரும் ஒரு வட்ட டேபிளை சுற்றி உட்கார்ந்தார்கள். இருவரையும் பார்த்தார், பில் கேட்ஸ்.

டிக் டிக்… டிக் டிக்… டிக் டிக்…

“ஏன்ப்பா, இப்படி பார்க்குற? சீக்கிரம் ஏதாவது கேளுப்பா… ” - மனசுக்குள் கந்தசாமி.

”இப்ப, நீங்க ரெண்டு பேர் தான் இந்த மொழி தெரிந்தவர்கள் இருக்குறீர்கள். செர்போ-க்ரோட் மொழியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பற்றி, அதன் தொழில்நுட்ப திறன் பற்றி விவாதம் செய்யுங்க.”

கந்தசாமி அமைதியாக, பக்கத்தில் இருந்த இன்னொருத்தனை பார்த்தார். சின்ன வயசுக்காரன். நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு உட்கார்ந்திருந்தான். மூளைக்காரன் போல!

கந்தசாமி ஆரம்பித்தார்.

மெதுவாக, ”தம்பிக்கு எந்த ஊரு?” - கேட்டது தமிழில்.

“தூத்துக்குடி பக்கம். நீங்க?……

Tuesday, May 17, 2011

அழகர்சாமியின் குதிரை: திரை விமர்சனம்.

அழகர்சாமியின் குதிரை:

ஒரு சிறுகதையை திரைக்கதையாக கொண்டு வரும் போது, நாடகத்தனமோ சிறுகதை தனமோ இருக்கக் கூடாது.
ஒரு குதிரை, மற்றும் குதிரைக்காரன், பெண் , ஊர் , திருட்டு என சிறுகதை வடிவத்தை அப்படியே திரையிட்டால் படத்தை யாரால் பார்க்க முடியும். மிகவும் கடுப்படித்தது. கதையை எழுதிய பாஸ்கர் சக்திக்கும் இயக்கிய சுசீந்தரனுக்கும் கடுமையான கண்டிப்புக்கள். காசு கொடுத்து உட்கார்ந்த எனக்கு தானே தெரியும் வேதனை.
மற்றபடி கதையை சொல்லி மதிப்பெண் இடுவதற்கு ஒன்றுமில்லை. நன்றி!