Tuesday, July 6, 2010

களவாணி திரை விமர்சனம்



மதிப்பெண் :






களவாணி திரை விமர்சனம்:
இன்றைய காலக்கட்டத்தில் காமெடி மட்டுமே ஜெயிக்கும் என அநியாயத்துக்கு இறங்கி வேலைப்பார்த்திருக்கிறார்கள் இந்த களவாணி பயல்கள்! சுப்ரமணியபுரம் , நாடோடிகள்,பருத்திவீரன், வெண்ணிலா கபடிக்குழு போன்ற படங்களின் பாணியை பார்த்தால் கிராம காமெடிகளை அச்சு அசலாக திரையாக்கி விட்டு ,க்ளைமாக்ஸை சினிமா பாணியில் வைத்து ரசிகர்களின் மூக்கில் சளியை வரவழைத்தார்கள். ஆனால், இந்த களவாணி படத்தில் விஜய் டிவியின் லொள்ளு சபா, சன் டி.வியின் சூப்பர் 10, போன்ற நிகழ்ச்சிகளை வைத்தும், சினிமாக்கள் காலங்காலமாய் செய்ததை நேரடியாக கிண்டலடிக்காமல், மறைமுகமாக சொல்லி ஜெயித்தும் இருக்கிறார்கள். சரி, விமர்சனத்துக்கு வருவோம்! ( ..அப்போ இன்னும் ஆரம்பிக்கவே இல்லையா..!)

ஸ்கூல் போகும் சிறுமிகளை சைட் அடிக்கிறார் ஹீரோ. (பதினொன்னாம் வகுப்புன்னா சிறுமி தானய்யா..) அதில் ஒரு சிறுமி மாட்டிக் கொள்ள, லவ்வோ லவ். இந்த சிறுமி ஹீரோயினின் அண்ணனுக்கும், ஹீரோவுக்கும் ஏற்கனவே பகை. அதனால் வழக்கம் போல கைப்பிடிப்பதில் சிக்கல். அதையும் தாண்டி புனிதமான காதலை எப்படி ஜெயிக்க வைக்கிறார்கள் என்பது தான் கதை.

ஊரில் ரவுடியாக காட்டிக் கொண்டு திரியும் ஹீரோ... கலவரம் நடக்கும், ரத்தம் சிதறும் என்று எதிர் பார்க்கையிலும் எதுவுமே நடக்காமல் உதாறான களவானியாகவே சிரிக்க வைக்கிறார். வில்லன்களுக்கு டாடா சுமோ கொடுத்தாலும், ஹீரோவை காட்டும் போது அம்பாஸிடரில் வருவது ..அப்பாடா படத்தில் இந்த காரை பார்த்து எவ்வளவு நாளாச்சு என்று தோன்றுகிறது.

நண்பர்கள், பஞ்சாயத்தாக வரும் கஞ்சா கருப்பு என எல்லாவற்றிலும் சிரிப்பு இருந்தாலும், வில்லன் சாமி மாலையை கழட்டி வைத்து விட்டு அடிப்பதும், பிறகு மாலையை மாட்டிக் கொள்வதும் தான் அநியாயத்துக்கு சிரிக்க வைக்கிறது. கூடுதலாக சிரிக்க வைப்பது வில்லனின் காமெடியான முகம். 'ஆடிப் போயி ஆவணி வரட்டும், அவன் டாப்பா வருவான்!' என ஹீரோவின் அம்மா சரண்யா சொல்லும் போதெல்லாம், போரடிக்காமல் சிரிக்க வைத்திருப்பது இயக்குனரின் சாமார்த்தியம்! ஹிட்டாகாத பாடல்களை போடுவதை விட சும்மா இருக்கலாம் என நினைத்திருப்பார்கள் போல, அதனால் பாடல்கள் அவ்வளவாக இல்லை எனபது கூடுதல் நிம்மதி. ஹீரோவுக்கு அப்பாவாக வரும் இளவரசின் பாத்திரம் மிக அற்புதம். கடைசி வரை களவானி கதாபாத்திரத்தை மட்டுமே பிடித்துக் கொண்டு பயணிப்பது நல்ல விஷயம். பாசமாக நெஞ்சுறுகி பாராட்டி சீராட்டி வளர்க்கும் மகளை எவனோ ஒருவன், பேசி மடக்கி இழுத்துக் கொண்டு போவதை தமாஷாகவோ, தாறுமாறாகவோ படத்தில் ஹீரோவின் கேரக்டருக்கு சப்போர்ட் ஏத்துவது போல காண்பிப்பது நல்லதல்ல!