Saturday, May 28, 2011

பயபுள்ள நம்பிக்கையை விட்ற கூடாது..!

எவ்வளோ பண்றோம்… இத பண்ண மாட்டோமா…’ என்று தமிழகத்தின் விடிவெள்ளி சொன்ன பொன்மொழி, வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு உன்னத தத்துவம். எப்படி? இந்த தன்னம்பிக்கை கொடுக்கும் கதையை படிங்க…

பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள்.. ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். கருப்பு கோட், நீல சட்டை, புள்ளி போட்ட டையுடன் எல்லாவற்றையும் கவனித்தப்படி ஒரு
பக்கத்தில் உட்கார்ந்திருந்தார், நம்ம கந்தசாமி.

உள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார். வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார். பிறகு, நன்றி தெரிவித்தார். சிக்கீரம் முடிக்கணும், சிம்பிளா வைக்கணும்ன்னு முடிவு பண்ணினார்..

முதலில் தொழில்நுட்ப அறிவை சோதிக்க வேண்டும் என்று விரும்பி ஒரு கேள்வி கேட்க நினைத்தார். எப்படியும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் டெக்னாலஜி தெரிந்துதான் வந்திருப்பார்கள். அதனால், இப்படி கேட்டார்.

“உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா தெரியும்? தெரியாதவர்கள் மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.”

2000 பேர் இடத்தை காலி செய்தார்கள்.

நம்ம கந்தசாமிக்கும் ஜாவா தெரியாதுதான். இருந்தும் போகலையே!

“இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல. எதுக்கு போய்கிட்டு? என்னத்தான் நடக்குது பார்ப்போம்” என்றபடி அங்கேயே இருந்து விட்டார்.

அடுத்த கேள்வி, “உங்களில் யாரெல்லாம் நூறு பேருக்கு மேல் ஆட்களை நிர்வகித்து இருக்கிறீர்கள்? அவர்கள் மட்டும் இருக்கலாம்.”

இன்னொரு 2000 வெளியே கிளம்பியது.

கந்தசாமி - “நான் ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாதே? என்ன செய்யலாம்? சரி, அடுத்த கேள்வியை கேட்கலாம்.”

இன்னும் ஆயிரம் பேர் இருக்கிறார்களா? என்று நினைத்துக்கொண்டு பில் கேட்ஸ் கேட்டார், “மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து…”.

சொல்லி முடிக்கும் முன்பே, 500 இருக்கைகள் காற்று வாங்கியது.

”அதையெல்லாம் படிக்க நமக்கு எங்க நேரம் இருந்தது?” பெருமூச்சுவிட்டபடி பில் கேட்ஸையே பார்த்து கொண்டிருந்தார், கந்தசாமி.

ஐரோப்பிய மொத்த கண்டத்திற்கு முழுமையான தலைமை பதவியாச்சே? கண்டம் முழுக்க சுற்ற வேண்டி இருக்குமே? எத்தனை மொழிகள் தெரிந்திருக்கும் என்று பார்ப்போம் என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

“உங்களில் யாருக்கெல்லாம் செர்போ-க்ரோட் மொழி தெரியும்?” - செர்போ-க்ரோட், உலகில் அரிதாக பேசப்படும் மொழி.

இப்ப, அரங்கில் இரண்டே பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் யாரென்று உங்களுக்கு தெரியும்.

அது, “எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?” என்ற நினைப்பில் நம்ம கந்தசாமி.

ஆனாலும், மனசுக்குள் பயம்தான். மூன்று பேரும் ஒரு வட்ட டேபிளை சுற்றி உட்கார்ந்தார்கள். இருவரையும் பார்த்தார், பில் கேட்ஸ்.

டிக் டிக்… டிக் டிக்… டிக் டிக்…

“ஏன்ப்பா, இப்படி பார்க்குற? சீக்கிரம் ஏதாவது கேளுப்பா… ” - மனசுக்குள் கந்தசாமி.

”இப்ப, நீங்க ரெண்டு பேர் தான் இந்த மொழி தெரிந்தவர்கள் இருக்குறீர்கள். செர்போ-க்ரோட் மொழியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பற்றி, அதன் தொழில்நுட்ப திறன் பற்றி விவாதம் செய்யுங்க.”

கந்தசாமி அமைதியாக, பக்கத்தில் இருந்த இன்னொருத்தனை பார்த்தார். சின்ன வயசுக்காரன். நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு உட்கார்ந்திருந்தான். மூளைக்காரன் போல!

கந்தசாமி ஆரம்பித்தார்.

மெதுவாக, ”தம்பிக்கு எந்த ஊரு?” - கேட்டது தமிழில்.

“தூத்துக்குடி பக்கம். நீங்க?……

Tuesday, May 17, 2011

அழகர்சாமியின் குதிரை: திரை விமர்சனம்.

அழகர்சாமியின் குதிரை:

ஒரு சிறுகதையை திரைக்கதையாக கொண்டு வரும் போது, நாடகத்தனமோ சிறுகதை தனமோ இருக்கக் கூடாது.
ஒரு குதிரை, மற்றும் குதிரைக்காரன், பெண் , ஊர் , திருட்டு என சிறுகதை வடிவத்தை அப்படியே திரையிட்டால் படத்தை யாரால் பார்க்க முடியும். மிகவும் கடுப்படித்தது. கதையை எழுதிய பாஸ்கர் சக்திக்கும் இயக்கிய சுசீந்தரனுக்கும் கடுமையான கண்டிப்புக்கள். காசு கொடுத்து உட்கார்ந்த எனக்கு தானே தெரியும் வேதனை.
மற்றபடி கதையை சொல்லி மதிப்பெண் இடுவதற்கு ஒன்றுமில்லை. நன்றி!

Saturday, May 7, 2011

அன்று !


வீரப்பன்!



கர்நாடக மாநிலம், சாம்ராஜ் மாவட்டத்தில் அமைந்துள்ள கோபிறந்தத்தை சொந்த ஊராகக் கொண்ட வீரப்பனின் உடல், அவரது மனைவியின் ஊரான தமிழ்நாடு, மூலக்காடு கிராமத்தில் அவரது மனைவி,வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன்,சகோதரி முனியம்மா மற்றும் பிள்ளைகள் வித்யாராணி,பிரபா ஆகியோர் முன்னிலையில் புதைக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் நடந்தேறியுள்ளன.

வீரப்பனின் சொந்த ஊரில் பாதுகாப்பு குறைவாக இருப்பதாகவும், பெருந்திரளான மக்கள் கூட்டம் கூடியிருந்ததாகவும் தெரிவித்திருந்த காவற்துறையினர், வீரப்பனின் உடலை அங்கு கொண்டு செல்ல அனுமதி மறுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அவரது மனைவியின் சொந்த ஊரான மூலக்காடு பகுதியில் உடலை எரிப்பதற்காக எடுத்துச்சென்ற போதும், அவரது உறவினர்கள் மற்றும் அரசியல் பிரமுகரின் தலையீட்டால் அவரது உடல் புதைக்கப்பட்டுள்ளது.

தனது சொந்த ஊரில் வீரப்பனை இறுதியாக அவரது 15 வயதில் ஒரு தடவை பார்த்திருப்பதாக அந்த ஊரைச்சேர்ந்த இருவர் கூறியுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினரின் கெடுபிடிகள் காரணத்தால் வீரப்பன் தனது சொந்த ஊருக்கு செல்வதை தவிர்த்து வந்துள்ளார்.

எனினும்,வீரப்பனுக்கு ஆதரவானவர்கள் என்ற போர்வையில் இவ்வூரைச் சேர்ந்த பலரை அதிரடிப்படையினர் அடித்தே கொன்றிருப்பதாக ஊரைச் சேர்ந்தவர்கள் சாட்சியளித்துள்ளனர்.

ஊர் சம்பந்தப்பட்ட எந்தவொரு பிரச்சினையையும் ஆள்வைத்து முடிவெடுப்பதே வீரப்பனின் வழக்கமாக இருந்ததாக அவரோடு பணியாற்றிய முன்னாள் சகா கோவிந்தன் கருத்து தெரிவித்திருக்கும் அதே வேளை,

அதிரடிப்படையினரின் கெடுபிடிகளுக்குப் பயந்து வீரப்பனின் இழப்பினால் ஏற்பட்டிருக்கும் துயரத்தை மக்கள் மறைத்துக் கொண்டுள்ளதாகவும் ஊடகம் ஒன்றின் பேட்டியின் போது தெரிவித்துள்ளார்.

வீரப்பனின் இளைய மகள் பிரபா இது தான் முதற் தடவையாக தனது தந்தையின் முகத்தை நேரடியாக பார்த்திருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இனியாவது எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள் என்று வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தமிழக காவற்துறையினருக்கு உருக்கமான வேண்டு கோள் ஒன்றினை விடுத்துள்ள போதும்,

வீரப்பனின் மனைவிக்குச் சொந்தமான பணம்,சொத்துக்களை முடக்கி வைத்தும் அவர்களை பின்தொடர்ந்து அவர்கள் வாழ்க்கையினை இழுபறி நிலையில் வைத்திருக்கும் தமிழக காவற்துறை இது பற்றி முன்னேற்றகரமான எந்தெவொரு அறிக்கையையும் வழங்கவில்லை.

இதே வேளை, வீரப்பனின் குடும்பத்தாருக்கு எந்த வித நிவாரணமோ,இழப்புகளோ வழங்கப்படமாட்டாது என்று தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • -2004 ஆம் ஆண்டு வெளியான செய்தி


Thursday, May 5, 2011

அன்று.!

டாக்டர் பிரகாஷ்


டிசம்பர் 2001, அகமதாபாத்தில் நடந்து முடிந்த ஆர்த்தோபீடிக் கான்பரன்ஸில் கலந்துகொண்டு திரும்பி இருந்தேன். முந்தின நாள் இரவு அங்கு ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கினேன். இந்தப் பக்கம் என் மனைவி, அந்தப் பக்கம் நான், நடுவில் என் ஏழு வயது மகள்.

காலை 8.30 மணிக்கு என்னுடைய விமானம் சென்னையில் தரையிறங்கியது. முந்தின நாள் இரவு தான் நான் என் குடும்பத்தோடு கழிக்கும் கடைசி இரவு என்பது அப்போது எனக்கு தெரியாது.

ஆஸ்பத்திரியை நோக்கி காரை ஓட்டிக் கொண்டிருந்தேன். இன்று தான் என்னுடைய க்ளினிக்கில் கடைசியாக பேஷண்டுகளை பார்க்கப் போகிறேன் என்பதையும் உணரவில்லை. போன வாரம் செய்து முடித்த இடுப்பு எலும்பு மாற்று ஆபரேஷன் தான் நான் இறுதியாக ஆபரேஷன் தியேட்டரில் செய்த சிகிச்சை என்பதையும் அறியவில்லை. அதற்கு நான் எவ்வளவு பாடுபட்டு உரு கொடுத்திருந்தேன் தெரியுமா?

மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தபோது இனிமேல் அதற்கு வாய்ப்பே வராது என்று கனவிலாவது நினைத்துப் பார்த்திருப்பேனா? அடுத்த சில வருடங்களுக்கு காரின் ஸ்டீயரிங் வீலை பிடிக்கப் போவதில்லை என்பது தெரியுமா?

போலிஸ் அவிழ்த்துவிட்ட கதைகளை கேட்ட என் மனைவி என்னோடு எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்து விட்டார். விவாகரத்துக்கு விண்ணப்பித்தார். சம்மதித்தேன். கடந்த ஐந்தாண்டுகளில் என் மகளை ஒரு முறை கூட பார்க்கவே இல்லை. நீண்ட தலைமுடியோடு அழகான பெண்ணாக வளர்ந்து விட்டாள் என்று சொல்லக் கேள்வி.

எப்போதும் வேலை, வேலை என்று அலையும் என்னைப் போன்ற ஒருவனால் ஜெயிலில் எப்படிப் பொழுது போக்க முடியும்? கிடைத்த நேரத்தை எல்லாம் எழுதுவதில் செலவிட்டேன். 37 ஆயிரம் பக்கங்களில் 80 புத்தகங்களை எழுதிவிட்டேன்…

- டாக்டர் பிரகாஷ், 12.04.2006