Monday, November 15, 2010

ஆ.ராசாவை பற்றி ....

"2ஜி ஸ்பெக்ட்ரம்' : வளர்ந்த கதை :

2007 மே 18 : தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக பதவி ஏற்றார்.

ஆகஸ்ட் 28 : டிராய் (மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) அமைப்பு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான சந்தை விலை நிர்ணயம் உள்ளிட்ட பரிந்துரைகளை தொலைத்தொடர்பு அமைச்சக ஒப்புதலுக்கு அனுப்பியது.

ஆகஸ்ட் 28 : ராஜா தலைமையிலான மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் டிராயின் பரிந்துரைகளை அடியோடு நிராகரித்தது. மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக 2001ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட அதே நடைமுறையை பின்பற்ற முடிவு செய்தது. அதாவது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் சந்தை விலையாக ஜூன் 2001ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட விலையை நிர்ணயம் செய்வதோடு, முதலில் வருபவருக்கே முன்னுரிமை அளிப்பது என்ற நடைமுறையை பின்பற்ற முடிவு செய்தது. 2001ம் ஆண்டில் 40 லட்சம் மொபைல்போன் சந்தாதாரர்கள் இருந்தனர். ஆனால் 2007 முதல் 2008ம் ஆண்டு வரையிலான காலத்தில், மொபைல் போன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 35 கோடியாக உயர்ந்திருந்தது. இதனால் 2001ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட விலையை வசூலித்ததால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில்தனியார் நிறுவனங்கள் பெருமளவில் பயனடைந்து அரசுக்கு வரவேண்டிய நிதி வராமல் பெரும் நஷ்டம் ஏற்பட காரணமாக இந்த முடிவு அமைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

செப்டம்பர் 20-25 : "யூனிடெக்', "லூப்', "டாடாகாம்' மற்றும் "ஸ்வான்' ஆகிய நிறுவனங்கள், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு உரிமத்தை பெற்றன. இதில் "யூனிடெக்' மற்றும் "ஸ்வான்' ஆகிய இரு நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறையில் எந்தவித முன் அனுபவமும் இல்லாத நிறுவனங்கள். இவை அமைச்சர் ராஜாவுக்கு வேண்டப்பட்ட நிறுவனங்கள் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.

2007 டிசம்பர்: இவ்விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சக அதிகாரி ராஜினாமா செய்தார், அப்போது, தொலைத்தொடர்புத்துறை அமைச்சக செயலாளர் ஓய்வு பெற்றுவிட்டார். "ஸ்வான்' நிறுவனத்திற்கு லைசென்ஸ் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரு அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டனர். இதன்மூலம் "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு எளிதாக நிறைவேறியது.

2008 ஜனவரி 1-10: அமைச்சர் ராஜா சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது முன்னாள் செயலாளராக பணியாற்றிய"சித்தார்த்தா பெகுராவை', தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் செயலாளராக நியமித்தார். பின்னர் தொலைத்தொடர்பு அமைச்சகம் 10 நாட்களில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுக்கான ஒன்பது லைசென்ஸ் உரிமங்களை வழங்கியது. மேலே குறிப்பிடப்பட்ட நான்கு நிறுவனங்களும் ஒதுக்கீடு பெற்றன.

செப்டம்பர்-அக்டோபர்: "ஸ்வான்' நிறுவனம் தனது 45 சதவீத பங்குகளை "எட்டிசேலட்' என்ற ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்த நிறுவனத்துக்கு ஏறத்தாழ 4,200 கோடி ரூபாய்க்கு விற்றது. யூனிடெக் நிறுவனம் தனது 60 சதவீத பங்குகளை டெலினார் என்ற நார்வே நாட்டு நிறுவனத்துக்கு 6,200 கோடி ரூபாய்க்கு விற்றது. தொலைதொடர்புத் துறை லைசென்சை 1,661 கோடி ரூபாய் மட்டுமே செலவழித்து "யூனிடெக்' நிறுவனம் வாங்கியிருந்தது. டாடா டெலிசர்வீசஸ் தனது 26 சதவீத பங்குகளை டோகோமோ என்ற ஜப்பான் நிறுவனத்துக்கு 13, 230 கோடி ரூபாய்க்கு விற்றது.

இந்த பங்குகளை யூனிடெக், ஸ்வான் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் 70,022.42 கோடி ரூபாய்க்கு விற்று பயனடைந்தன. ஆனால் தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு 10,772.68 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்டது. இதனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒன்பது "2ஜி' உரிமத்தில் மட்டும் 60,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் ஜனவரி, 2008ம் ஆண்டு வரையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மொத்தமாக 2001ம் ஆண்டு விலை நிர்ணயத்தின்படி 122 லைசன்ஸ் வழங்கி உள்ளது.

நவம்பர் 15 : மத்திய தலைமை விஜிலென்ஸ் கமிஷன் அமைச்சர் ராஜாவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இது தொடர்பான தனது விரிவான அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியது.

2009 அக்டோபர் 21 : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. இந்த முறைகேடு தொடர்பாக நவம்பர் 29, 2008 , அக்டோபர் 31, 2009 , மார்ச் 8, 2010 , மார்ச் 13, 2010 ஆகிய தேதிகளில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி கடிதங்களை எழுதி உள்ளார்.

2010 ஏப்ரல் 12 : சுப்ரமணிய சுவாமி டில்லி ஐகோர்ட்டில் "ரிட்' மனு தாக்கல்.

அக்டோபர் 29 : மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.,க்கு "2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில், மந்தமாக செயல்படுவதாக கூறி சுப்ரீம்கோர்ட் தனது கண்டனத்தை தெரிவித்தது. "இதேபோன்ற நடைமுறையை தான் அனைத்து வழக்கிலும் கடைப்பிடிப்பீர்களா', என்று சுப்ரீம்கோர்ட் கேள்வி எழுப்பியது.

நவம்பர் 10: மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகம், மத்திய நிதி அமைச்சகத்திடம் இதுதொடர்பான அறிக்கை ஒன்றை சமர்பித்தது. அந்த அறிக்கையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகள் பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இதனால் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 11: மத்திய அரசு சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில் "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்தவித முறைகேடும் நடைபெற வில்லை எனவே இதுகுறித்து சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை என்று தெரிவித்தது.

நவம்பர் 14: ராஜா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

ராஜா: வாழ்க்கைக் குறிப்பு :

பெயர்: ஆ. ராஜா

பிறந்த இடம்: பெரம்பலூர்

தந்தை: எஸ்.கே.ஆண்டிமுத்து

தாயார் : சின்னப்பிள்ளை

பிறந்ததேதி: 1963 அக்டோபர் 5.

கல்வி தகுதி: பி.எஸ்.சி., மற்றும் எம்.எல்.,

மனைவி : எம்.ஏ.பரமேஸ்வரி

குழந்தைகள்: மகள் மயூரி

கட்சி: தி.மு.க.,

தொகுதி: நீலகிரி

வகித்த பதவிகள்: 1996ல் பெரம்பலூர் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி., ஆனார். 1999 லோக்சபா தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஊரக வளர்ச்சி துறை அமைச்சரானார். பின்னர் குடும்ப நலம் மற்றும் சுகாதார அமைச்சராக பதவி வகித்தார்.

2004 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று ( 2004 மே 23 - 2007 மே 17,) மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரானார். பின்னர் 2007 மே 18ல் மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக பொறுப்பேற்றார். கடந்த 2009 மே 31ல் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இரண்டாவது முறையாக மீண்டும் பொறுப்பேற்றார்.

கட்சித் தலைமையிடத்தில் அவருக்கு இருந்த செல்வாக்கால், வட்டார அளவில் செல்வாக்குப் பெற்றிருந்த அவர், மத்திய அமைச்சராகும் அளவுக்கான தகுதியை குறுகிய காலத்தில் பெற்றார். இலக்கியத்தில் ராஜாவுக்கு இருந்த திறமைதான் கட்சித் தலைவர் கருணாநிதியிடம் அவர் நெருக்கமாகக் காரணமாக அமைந்தது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளில் அவருக்கு நெருக்கடி இருந்த போதிலும், கட்சித் தலைமையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்

நன்றி :தினமலர் நாளிதழ்

Friday, August 20, 2010

சிறுகதை


பஞ்ச தந்திரம்:




அர்த்தனாரி வயிற்றில் கத்தியை சர்..ரென இறக்கினான் இளங்கோ.பலூன் போல இருந்த அவரது வயிற்றில் ரத்தம் பீய்ச்சி அடித்துக் கொண்டிருந்தது.அவரது மனைவி கூச்சல் போட்டு கதற ஊரே அலறலோடு அர்த்தனாரி வீட்டு முன்பு ஆஜராகியிருந்தது. ஐவரும் ஓட்டம் பிடித்தோம்..நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை..இளங்கோ அவரை சாக அடிக்க துணிவானென..சும்மா இருந்த நான் பொழுது போக்க வந்து இப்படி மாட்டுவோமென கனவிலும் நினைக்கவேயில்லை.. * * * * * நான்கு காக்கிகள் படபடவென உள்ளே வந்தனர்..இன்ஸ்பெக்டர் அமைதியாக அர்த்தனாரியை நோட்டமிட்டார்.அண்டர்வேரின் கயிறு வேட்டியை தாண்டி தொங்கி கொண்டிருந்தது.இரவிலும் கூட தலை சீவி விட்டு படுப்பவர் போல..தலை கலையாமல் இருந்தது..கயிற்று கட்டிலின் வழியே அரை டம்ளர் அளவுக்கு ரத்தம் ஒழுகியிருந்தது. குறைந்தது மூன்று குத்தாவது குத்தியிருக்க வேண்டும்..வயிற்றின் அளவு அவ்வாறு சொன்னது..முட்டி கொண்டிருந்த வயிற்றின் மீது..ரத்தம் உறைந்து போய் காணப்பட்டது..ஆனால், மனிதன் மிகவும் ஃசாப்ட்டான உடம்பு என்பதால் உடனே செத்திருக்க கூடும்.சுற்றிலும் பார்த்த இன்ஸ்பெக்டர்.. தலையை புரட்டி..புரட்டி அழுது கொண்டிருந்த அர்த்தனாரியின் மனைவியை பார்த்தார்.‘‘ஹே..ஹே....ஹேய்..அது தடயம்மா..உங்க ரேகை பதியக்கூடாது..அழாதீங்கம்மா...கவலை படாதீங்க..கான்ஸ்டபிள் கூட்டத்தை கலைங்க.. கிராமம்னாவே இது ஒரு பிரச்னை.. எதுனா கூட்டம் அநியாத்துக்கு சேர்ந்திடுது..நகரம்னா..வரவே பயப்படுவாங்க..ம்....!’’‘‘அம்மா உங்க பேரு..’’‘‘ மல்லிகாங்கய்யா..’’‘‘கொலை நடந்தப்ப நீங்க எங்க இருந்தீங்க...?!’’‘‘ நானும் என் மகளும் உள்ளே படுத்துப்போம்..அவரு வெளியே படுத்துக்குவாருங்க...கதவு இருக்கு, சாத்திக்குவோம்..திடீர்னு படபடன்னு யாரோ நிறைய பேர் வர மாதிரி சத்தம் கேட்டுச்சு..அப்புறம் சடார்னு ஒரு வித்தியசமான ஆம்பளை குரல் கத்தறமாதிரி சவுண்ட்..எனக்கு ஈரக்கொலையெல்லாம் நடுங்கிடுச்சு..வெளியே வந்து பார்க்கறப்போ அஞ்சு பேர் திடு திடுன்னு ஓடினாங்க..அவங்க முகம் கூட சரியா தெரியலைங்கய்யா..!’’ அதற்கு மேல் மல்லிகாவால் பேச முடியவில்லை..மயங்கி சரிந்தாள்..‘‘பாப்பா உன் பேரு..?’’‘‘ரோகினி சார்..’’‘‘என்ன படிக்கிறீங்களா..?!’’‘‘ஆமா..பி.இ...விவேகானந்தாவுல...’’‘‘அப்பாவுக்கு யாராவது எதிரி உண்டுங்களா.. தெரியுமா?’’‘‘அவருக்கு கடன் கொடுக்கும், வாங்கும் பழக்கம் கிடையாதுங்க..மத்தபடி அஞ்சு பட்டுத்தறி ஓடுது..இதுல எதிரி வர சான்ஸே இல்லை..!’’ முகம் அவளுக்கு வீங்கியிருந்தாலும் தெளிவாக பேசினாள்.அப்ப என்னவா இருக்கும்..கோல்ட் ப்ளாக் சிகரெட்டை ஜீப்பின் மீது தட்டியவாறே வாயில் வைத்தார் இன்ஸ்பெக்டர்...‘இப்பவெல்லாம் கிராமத்துல கூட பொசுக்கு பொசுக்குன்னு போட்டுறானுங்க....வந்தவங்க நகையோ..பணமோ எடுக்க வரலன்றது உறுதியா தெரியுது..கொலை பண்ண வந்திருக்காங்க...கச்சதமா முடிச்சிட்டு போயிட்டானுங்க.. அந்த பொண்ணு மேல எவனாவது ஆசைப்பட்டிருப்பானோ..ச்சீ..சீ..காதலுக்காக பொண்¬ணை வேணா கொலைப் பண்ணுவான்..அவங்க அப்பனை எதுக்கு பண்ணனும்..? ‘எஸ்...எஸ்...அந்த மல்லிகாவுக்கு எவனாவது கள்ளக்காதலன் இருக்கானான்னு விசாரிக்கனும்?!’ * * * * *
இந்த கொலைக்கு இரண்டு மணிநேரம் முன்பு..
ஊருக்குள் ஒட்டியிருந்தாலும் அது தனியான தென்னந்தோப்பு..இருபது தென்னை மரங்கள் இருக்கும். எங்கள் ஊர் மக்கள் அங்கேதான் காலை, மாலை வேளைகளில் ஒதுங்குவார்கள்.அருகிலேயே ஒரு பாழடைந்த தொட்டி..இரண்டு மாமரம்..அவ்வப்போது திரியும் பாம்புகள்..அந்த பாழடைந்த தொட்டி மீது அமர்ந்து சிகரெட்டை பற்ற வைப்பதே தனி சுகம் . அவ்வப் போது கணேஷ் பீடி! .ரோகினியை தூக்க திட்டம் தயாராகி கொண்டிருந்தது.
‘‘டேய்..உனக்கு அவதான் சரியான ஜோடி..நீ படிச்ச அஞ்சாம் க்ளாஸ் படிப்புக்கு, தறி ஓட்ற இடத்துலேயே, அதுவும் அந்த ஓனர் மகளே கிடைப்பான்னு நான் கனவுல கூட நினைக்கலடா..’’
‘‘உனக்கு அதிர்ஷ்டம்டா..எங்கேயோ மச்சமிருக்கு..!’’
‘‘அவளை இன்னைக்கு ராத்திரிக்கு தூக்கறோம்..வந்தா ரோகினி..இல்லைன்னா அவ தாவணி..!’’ஐடியா கொடுத்த சகாக்களை தன் தாடியை சொறிந்தவாரே ஒரு மார்க்கமாக பார்த்தான் இளங்கோ.
‘‘அவளுக்கு ஓ.கே தான்டா.. என்ன அவ அப்பனை பார்த்தா தான் பயமா இருக்கு.. அதுவும் அவன் வயிறு...’’
‘‘என்னடா மடையா பேசற..வயித்த பாத்து எவனாவது பயப்படுவானா? உன் ஆளு கர்ப்பமானா கூட தான் வயிறு பெருசா இருக்கும்..நீ பயப்படுவியா என்ன?!’’ பிரபு அவன் தோள் மீது கை வைக்க.. ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டியது போல சலிப்பு தட்டியது இளங்கோவுக்கு.
இந்த ஆட்டங்களை பார்த்து கொண்டிருந்த நான் மௌனமாகவே இருந்தேன்.
அவள் ஆறாம் க்ளாஸ் போகும் போதிலிருந்தே இளங்கோவுக்கு ரோகினி மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதாம்! என்னவென்றே புரியாமல் அந்த சுகமான சுமையை அனுபவித்து கொண்டிருந்திருக்கிறான் படுபாவி... அவள் ஒன்பதாவது போகும் போது இளங்கோவை பார்த்து ‘களுக்..’கென்று சிரித்து தொலைத்தாளாம்..அதிலிருந்து மெல்ல லவ் டெவலப் ஆகிவிட்டதாம்.. அவ்வப்போது தென்னந்தோப்பு பக்கம் ஒரு மாலை பொழுதில் ஒதுங்கும் போது சொல்வான்..அது வயிற்றை கலக்கும் நேரமாக இருந்தாலும், பலபேருக்கு வயிறு எறியும்.
ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறேன்... எனக்கும் அவள் மீது நான்காம் க்ளாஸிலிருந்தே புரியாத ஒரு ஈர்ப்பு.. நான் தயங்கி தயங்கி லவ்வை சொல்லும் போது அவள் எட்டாம் வகுப்பு. அப்போதே இளங்கோவை காதலிப்பதாக என்னிடம் சொல்லிவிட்டாள். ஆனால், அவனிடம் அந்த ‘களுக்’ காட்டியது ஒரு வருடம் கழித்து தான்.இப்ப நாலு வருஷம்னு அந்த லவ் சீனியாரிட்டியோடு ஸ்டார்ங்கா இருக்கு. தரி கெட்ட பயலுக்கு..தறி முதலாளி எவனாவது பொண்ணை தருவானா..? அதான் கூட்டிக்கிட்டு ஓட திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்..இந்த விஷயத்தில் எனக்கு ஈடுபாடு இல்லையென்றாலும் சுவாரஸ்யமாக இருப்பதால் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்.‘‘அவளும் அவ அம்மாவும் உள்ளே படுத்துக்குவாங்க..’’‘‘உன் பொண்டாட்டியும்..உன் மாமியாரும்னு சொல்லு..!’’ இது பன்னீர். ரணகளத்திலும் ஒரு குதூகலம்!‘‘சரிடா..வெளியே அந்த குண்டன்....உள்ளே போகனும்னா அவனை தாண்டி தான் போகனும் வேற வழியேயில்லை..இடது பக்கம் தறி கொட்டாய்..அது தனி..எல்லாபக்கமும் தடுப்பு உண்டு.. அங்கெல்லாம் போகவே முடியாது..போகவும் தேவையில்லை..இப்ப இவனை தாண்டனும்..அவ்வளவுதான்..!’’‘‘டேய் உன் மாமனார்..நல்லா தூங்குவாரா? உஷாரான பார்ட்டியா?’’ இது பிரபு.‘‘எவனாவது வெளிநாட்டுக்காரன் புடவை எடுக்க வந்தா..நல்லா காசு கிடைக்கும். அதுல தண்ணியை போட்டுட்டு ஒன்னுக்கு வரது கூட தெரியாம தூங்குவான்..’’‘‘அப்ப இன்னைக்கு எவனோ வெள்ளைக்காரன் வந்ததா சொன்ன.. நல்லா தூங்குவான்..பொண்ணுக்கும் சொல்லிட்ட.. போவோம்..கதவை தட்டுவோம்..பொண்ணு வரும்..அலேக்கா கூட்டிட்டு வருவோம்..சுப்ரமணியர் கோயில்ல வச்சு தாலியை கட்டுவோம்..நாளைக்கு இந்நேரம் உனக்கு மொத ராத்திரி..ஓகே..’’‘‘ ஓகே..ஓகே..’’ எல்லோரும் தலையை ஆட்டினார்கள். நானும் தான்!
அர்த்தனாரி ஒண்ணும் பெரிய பணக்காரன் இல்ல..அவன் பூசணினா..இவன் தர்பூசணி! அப்புறம் என்ன... கேட்டா பொண்ணை கொடுத்துட்டு போறான்..சும்மா..ஓடறோம்..நடக்கறோம்னு சொல்லிக்கிட்டு..இவன் முதலாளியாம்..அவன் தொழிலாளியாம்..தமிழ் சினிமா ஆரம்பிச்ச காலத்திலிருந்து இது ஒரு பிரச்னைடா..திருந்த மாட்டேன்றாங்க.. சரிவிடு..அறிவுரை சொன்னா..நம்மள முட்டாள் பையன்னு என் அப்பனையும் சேர்த்து வாருவானுங்க...வாயை மூடிக்கிட்டு நடக்கறதை பார்ப்போம்..
* * * * *இன்ஸ் விசாரிக்க துவங்கினார்..மல்லிகாவின் மேலேயே சந்தேகம் வந்தது.‘‘ஊருக்குள் யாருய்யா பெரிய மனுஷன் வாங்கய்யா..’’‘‘அய்யா..நானு.. என் பேரு மாணிக்கம்..’’‘‘இந்த கொலையை பத்தி ஏதாவது உனக்கு தெரியுமா?!’’‘‘ நீங்க மல்லிகாவை சந்தேகப்படறதா சொன்னாங்க..அவ தங்கமான பொம்பளைங்க..குழாயடியில கூட இது வரைக்கும் சண்டை போட்டிருக்க மாட்டா..வாயில்லா பூச்சி..கொல்ற அளவுக்கு துணிச்சலெல்லாம் அவளுக்கு கிடையாது..’’ மாணிக்கம் ஸ்டெயிட்டாக விஷயத்துக்கு வந்தததும் வாயடைத்து தான் போனார் இன்ஸ்பெக்டர். ஆனால், காட்டிக் கொள்ளவில்லை..‘‘அவங்க உனக்கு எதாவது சொந்தமா..?’’‘‘மாமன் பொண்ணுங்க..’’‘அப்ப செல்லாது..செல்லாது..’ன்னு நாட்டாமை கணக்கா பேச முடியாது..ஏன்னா கிராமத்துல சொந்தங்க தான் சுத்தி சுத்தி இருப்பாங்க..‘‘அய்யா..இன்னைக்கு ஒரு வெள்ளைக்காரன் பட்டு புடவை எடுக்க வந்தான்.. இருபதாயிரம் ரூபா புடவையை பத்து அதிகம் வச்சு தள்ளி விட்டதுல..அவனுக்கும் இவனுக்கும் வாய்த் தகராறு முத்தி போச்சு..ஆனா, இது தொழில்ல சகஜம்..அவன் ஒருவேளை..?!’’‘‘யோவ்..வெள்ளைக்காரனுக்கு கொலை செய்யலாம் தோணாது.....துப்பாக்கி தான் தெரியுமில்ல..’’‘‘அய்யோ..அவன் கொன்னுருக்க மாட்டான்..ஆளு வச்சு..நடத்திருந்தா..’’‘‘உனக்கு நல்ல மூளைன்னு பாராட்டபோறதில்லை.. ஒழுங்கா பதிலை சொல்லலைன்னா..‘நீதான்’னு ஈஸியா கேஸை முடிச்சிடுவேன்..’’‘‘.........................’’‘‘இங்கே எத்தனை பேரு தறி போட்டிருக்காங்க?!’’‘‘நான் நான்கு தறி..அப்புறம் அவரு தான்..விவாசாயிங்க வாழுற பூமியில நாந்தேன்யா முதன் முதலா தறியே போட்டு ஊரை டெவலப் பண்ணேன்..அப்புறம் தான் அர்த்தனாரியே..!’’கொலை ஆகியிருக்கிற இடத்தில் கூட தன்னை விளம்பர படுத்திக்கொள்ளும் மாணிக்கத்தை பார்த்து லேசாக இன்ஸ்பெக்டருக்கு டென்ஷன் தலை தூக்கியது.‘‘பொண்ணு ரோகினி எப்படி?!’’‘‘அந்த பொண்ணு..ஐம்பது கிலோமீட்டர் தள்ளி இருக்கிற..காலேஜுக்கு போகுது..நல்ல பொண்ணு..நல்லா படிக்கும்.எந்த வம்பு தும்புக்கும் போகாது..’’‘‘அப்புறம் எப்படிய்யா...?!’’‘‘வியாபாரம் நல்லா ஆச்சுன்னா.. அர்த்தனாரி பட்டை சாராயம் தான் அடிச்சுட்டு படுப்பான்..அதுல எதுனா பிரச்னை இருக்குமோங்கய்யா?!’’சி.பி.ஐ. ரேஞ்சுக்கு மாணிக்கம் சொன்னாலும், இன்ஸ§க்கு எதுவும் பிடிபடவில்லை..யோசித்தவாறே ஜீப்பில் ஏறி பறந்தார்.
* * * * *நான் ஓ..வென அழ ஆரம்பித்து விட்டேன். பிரபு, பெருமாள், பன்னீர் மூன்று பேரின் முகமும் வாடியிருந்தது.‘‘என்னடா இப்படி பண்ணிட்ட..?!’’ என அடிக்கவே பாய்ந்து விட்டான் பெருமாள்.‘‘என்னடா சம்பளம் எதாவது ஏத்தி தரமாட்டேனு சொல்லிட்டானா..இப்படி போட்டுட்ட..!’’ இது பிரபு.‘‘பொண்ணை தூக்குடான்னா..அவங்க அப்பனையே தூக்கிட்டியேடா..நாயே..’’பன்னீர்.‘‘சும்மா நிறுத்துங்கடா, நான் தான் பொம்பள வெறியில அப்படி பண்ணிட்டேன்..நீங்களாவது தடுக்க கூடாதா? சரிவிடு..தொப்பையன் இருந்து என்ன பண்ணப்போறான்..சாகட்டும்..அவன் செத்தாதான் நல்லதாகவே நடக்கும்..அதேபோல அந்த ரோகினியை நான் கல்யாணம் பண்ணிக்கற மாதிரி இல்ல..நம்ம மேல எவனுக்கும் சந்தேகம் வராது..அமைதியா போய் படுங்க..மத்தத காலையில பேசிக்கலாம்..!’’ என சாதாரணமாக இளங்கோ சொன்னது..ஏதோ அவன் திட்டம் போட்டு கொன்றது போலவே எனக்கு தோன்றியது.எல்லோரும் பேஸ்த் அடித்து போயிருந்தோம்..இளங்கோ சடாரென வீட்டை நோக்கி புறப்பட்டு விட்டான்.நாங்கள் நால்வரும் நல்ல நிலையில் இல்லை..தொட்டிக்குள் வைத்திருந்த பீடியை பார்த்தேன்..இருந்தது..அதை பற்ற வைத்துக்கொண்டே..தலையில் அடித்துக் கொண்டு நடந்தேன்..மூவரும் என்னுடனே இளங்கோவை ஆரம்பகாலங்களில் அவன் செய்த குற்றம் முதல் சொல்லி திட்டிக் கொண்டே வந்தனர்.நான் இந்த கொலையை செய்யவில்லையென்றாலும், காலையில மோப்ப நாய் வருமே..அது கரெக்டா காட்டி கொடுத்துடுமே..என்ன பன்றது..அநியாயத்துக்கு ஒரு ஜீவன் மாட்டிக்கிச்சே..அய்யோ கடவுளே..எனக்கு வயிற்றை கலக்கியது..யாருக்கும் தெரியாமல் மிளகாய் பொடியை வீட்டில் முன்பு தூவிவிட்டு..நன்றாக போர்த்தி படுத்துக் கொண்டேன்..தூக்கம் வரவில்லை..புரண்டேன்..அந்த கொலையே ஞாபகத்தில் வந்தது.கண்ணீர் வர.., அமைதியாக அழுது கொண்டே தூங்கி விட்டேன்.காலையில் அம்மாதான் எழுப்பி காபி தந்தாள்.‘‘டேய் விஷயம் தெரியுமா..போலீஸ்ல இளங்கோவை பிடிச்சுக்கிட்டு போயிட்டாங்கடா..’’அந்த காபி எனக்கு விஷம் போல இருந்தது.‘‘அவனே சரண்டர் ஆகிட்டானாம். கொலை பண்ணது அவன் தானாமே..’’நான் வாய் பேசவில்லை..கோர்ட்டுக்கு இளங்கோ வந்தான்.முகமெல்லாம் வீங்கி இருந்தது.நாங்கள் நால்வரும் மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டோம்..படுபாவி..மாட்டி விட்ருவானோ..என்னடா பண்ணி தொலைக்கிறது..எனக்கு பன்றி காய்ச்சல் வந்தது போலவே பயம்..இளங்கோ முழித்த முழியே சரியில்லை..எனக்கு தெரியும்..அவன் இப்படி முழித்தாலே ஏதோ விவகாரமாகத்தான் பேசுவான்..ம்.. பார்ப்போம்..இளங்கோ நீதிபதி முன் பேசத் தொடங்கினான்.‘‘அய்யா.. எங்கம்மாவோட.... ஒருநாள்... அர்த்தனாரி...கட்டி...’’ இளங்கோ அழ ஆரம்பித்தான்.


Wednesday, August 18, 2010

ரிலாக்ஸ் டைம்!





நானும் நண்பர் இளங்கோவும் அவ்வப்போது திருவிளையாடல் நாகேஷ், சிவாஜி போல பேசிக்கொள்வது உண்டு. அப்படி ஒருநாள் நான் நாகேஷாய் கேள்விகள் கேட்கவே, அவர் பெரிய பதில் சிவாஜியாய் மாறிய கதைதான் கீழே...!

இந்த காலத்தில் மனிதனை விட மிஷினுக்குத் தான் மதிப்பு அதிகமாமே உண்மையா?
உண்மைதான்!
கடந்த வாரம் சென்னையில் திருவள்ளுவர் வேஷம் அணிந்து, போராட்டம் செய்த முரளிதரன் என்பவரை, போலீஸ் கைது செய்தது. காரணம் என்னவென்றால், 1330 குறளுக்கும் இவர் நடனம் மூலமே விளக்கம் அளிப்பாராம். அதை கோவை செம்மொழி மாநாட்டில் நடத்தி காட்ட விரும்பியுள்ளார். அனுமதி கிடைக்கவில்லை. உடனே, விருந்தினர் மாளிகைக்கு எதிரே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கிறார். கைது செய்து புழல் சிறையில் அடைத்தது போலீஸ்! ஆனால்,அதே நாளில் சென்னை பல்கலைகழக மணிக்கூண்டில் உள்ள பழமை வாய்ந்த கடிகாரத்தில் மணிக்கொரு முறை குறளும், விளக்கமும் வருமாறு செட்டப் செய்து துவக்கி வைத்தது தமிழக அரசு. இப்ப சொல்லுங்க எதுக்கு மதிப்பு அதிகம்!

கேள்வி: தாங்கள் ரசித்த சமீபத்திய காமெடி?
பதில்: எஸ்.ஏ.சந்திரசேகரன் கதை,திரைக்கதை,வசனம் தயாரிப்பில் வரப்போகும் படம் 'வெளுத்துக்கட்டு"இந்தப் படத்தின் பிரிவியூ ஷோவை பார்த்த விஜய், தனது அப்பா சந்திரசேகனை கட்டிப்பிடித்து..'அப்பா கலக்கிட்டீங்க..' என்று பாராட்டினாராம்..இதை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சந்திரசேகரன் பெருமையாக சொல்லிக் கொண்டார்.என்னவோ போங்க..!

? ராமாதாஸும் விஜயகாந்தும் ஒரே கூட்டணியில், இருப்பது போல ஒருநிலை வந்தால் முதலில் என்ன பேசிக் கொள்வார்கள்?
பதில்: மன்னிச்சூசூ..!
?பத்திரிகையாளர் கருணாநிதியும், பத்திரிகையாளர் சோவும் அநியாயத்துக்கு எழுத்துப்போர் நடத்துகிறார்களே..அதற்கு ஸ்பெஷல் காரணம் ஏதாவது உண்டா?
எனக்கு தெரிந்து ஒரே காரணம் தான். கருணாநிதி- முரசொலியில் தன்னைத்தானே புகழ்ந்துக் கொள்வார். அதற்கு உதாரணங்கள் பல.சோ-துக்ளக்கில் தன்னை தானே இகழ்ந்துக் கொள்வார்.உதாரணமாக துக்ளக் ஆரம்பித்த முதல் இதழில் (1970 ஆம் ஆண்டு)அட்டைப்படம் இப்படி வந்திருந்தது.ஒருக் கழுதையும் மற்றொரு கழுதையும் பேசிக் கொள்கின்றன. முதல் கழுதை-" சோன்னு ஒரு ஆளு புத்தகம் ஆரம்பிச்சிருக்கானாமே..!"அதற்கு மற்றொரு கழுதை " அப்ப நமக்கு நல்ல தீணி தான்னு சொல்லு!"
எப்பூடி!
சென்னையில் உள்ள தெருக்களின் பெயர்கள் எல்லாம் தமிழிலேயே பெயர் மாற்றம் செய்யப் போகிறார்களாமே?
இப்படித்தான்..எல்லா விஷயத்துலேயும் தமிழ் இருக்கனும் என்று, ராமதாஸ் விளம்பரத் தட்டியெல்லாம் வைத்து தமிழை பரப்பினாரு.ஆனால், எம்.பி தேர்தலில் எல்லா இடங்களிலும் தோற்றார்.இப்போ தி.மு.க இதை செய்கிறது. என்ன நடக்குமோ பார்க்கலாம்.( கவலை படாத தம்பீ..சொல்லிட்டம்ல பேரை மாத்த மாட்டாங்க)

Monday, August 16, 2010

2011 சட்டமன்ற தேர்தல் கருத்து கணிப்பு




கூட்டணியை பொறுத்து வெற்றி அமையும் என்பதும் சும்மா! பணத்தை வாரிவிடும் அளவை பொறுத்து வெற்றி அமையும் என்பதும் சும்மா..! இன்றைய நிலையில் தி.மு.கவுக்கு படித்தவர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு இருக்கிறது என்பது உண்மை. வாரிசுகளை அநியாயத்துக்கு இறக்கிவிட்டு குடும்பத்துக்காக சொத்துக்களை சுருட்டிக் கொள்கிறது..என்கிற படித்தவர்களின் மனநிலை தி.மு.கவின் வாக்கு வங்கியை பெருமளவு சரிய வைக்கும். கலர் டி.வி.,அரிசி ,என கிராம மக்களின் வாக்குகளை தி.மு.க கணிசமாக பெறும் என்றாலும் அ.தி.மு.க முகாம் திடீரென விழித்துக் கொண்டு தி.மு.க தலைமையை வாட்டி எடுக்கவே கிராம மக்கள் மறுபடியும் குழம்பி விட்டனர்.தே.மு.தி,க வந்த புதிதில் தி.மு.கக்கு காட்டிய எதிர்ப்பை கூட இப்போது காட்டுவதில்லை என்பது தான் உண்மை! இது தே.மு.தி.க விற்கு நல்லதல்ல!அதேப்போல பா.ம.கவும் பயந்து போய் பாய்வதா? பதுங்குவதா என்ற குழப்ப நிலையில் உள்ளதால் மக்கள் மன நிலை இப்போது இது தான்!
கூட்டணி இப்படி இருந்தால்..நிலவரம் அப்படி இருக்கும்!
தி.மு,க-காங்கிரஸ் இன்னும் பிற கட்சிகள்:
அ.தி.மு.க , தே மு.தி.க, பா.ம.க ( தேமுதிக கட்சி அதிமுகவில் இருந்தாலும் அரசியலில் நண்பனும் இல்லை, பகைவனும் இல்லை. என்கிற ரீதியில் பாமக வந்தால்..) ம.தி.மு.க, கம்யூனிஸ்டுகள்
இப்படி உறுதியான நிலைப்பாடோடு கூட்டணி அமைந்தால் நிச்சயம் அ.தி.மு.க தான் வெல்லும்! ஆனால், இப்போது ஜெயலலிதா வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் மைனாரிடி வார்த்தையை கருணாநிதி வார்த்தைக்கு வார்த்தை சொல்லுவார். தே.மு.தி.க வேட்பாளர்களை இன்னும் பலமான ஆட்களாக வளர்த்து விட வேண்டும். இப்போது உள்ள நிலைப்படி இருந்தால் எப்படி கூட்டணி வைத்தாலும் விஜய்காந்த் மட்டுமே ஜெயிப்பார். சரி, ரிசல்ட் என்ன தான் வருகிறது?
அ.தி.மு.க கூட்டணி 160 இடங்களை கைப்பற்றலாம்..மீதம் உள்ள 74 இடங்களை தி.மு.க.கைப்பற்றலாம்.
இது இன்றைய நிலைதான்! தேர்தல் வாக்குறுதிகள்.. கொடநாடு ரெஸ்ட், அண்ணன் தம்பி பதவி சண்டை, வெற்று உறுமல், சினிமா பெட்டியை தூக்குபவர்கள், நான் தான் தலைவர் என போராடுபவர்கள்- இதெல்லாம் தூக்கலாக தெரிந்தால் நிச்சயம் தேர்தல் முடிவுகள் மாறலாம்.


(தொடரும்..)

Friday, August 6, 2010

மதராசபட்டினம் திரை விமர்சனம்

மதிப்பெண்:





மிகவும் அற்புதமான படைப்பு என்பதை தவிர எழுத வார்த்தைகள் இல்லை. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்!

Tuesday, July 6, 2010

களவாணி திரை விமர்சனம்



மதிப்பெண் :






களவாணி திரை விமர்சனம்:
இன்றைய காலக்கட்டத்தில் காமெடி மட்டுமே ஜெயிக்கும் என அநியாயத்துக்கு இறங்கி வேலைப்பார்த்திருக்கிறார்கள் இந்த களவாணி பயல்கள்! சுப்ரமணியபுரம் , நாடோடிகள்,பருத்திவீரன், வெண்ணிலா கபடிக்குழு போன்ற படங்களின் பாணியை பார்த்தால் கிராம காமெடிகளை அச்சு அசலாக திரையாக்கி விட்டு ,க்ளைமாக்ஸை சினிமா பாணியில் வைத்து ரசிகர்களின் மூக்கில் சளியை வரவழைத்தார்கள். ஆனால், இந்த களவாணி படத்தில் விஜய் டிவியின் லொள்ளு சபா, சன் டி.வியின் சூப்பர் 10, போன்ற நிகழ்ச்சிகளை வைத்தும், சினிமாக்கள் காலங்காலமாய் செய்ததை நேரடியாக கிண்டலடிக்காமல், மறைமுகமாக சொல்லி ஜெயித்தும் இருக்கிறார்கள். சரி, விமர்சனத்துக்கு வருவோம்! ( ..அப்போ இன்னும் ஆரம்பிக்கவே இல்லையா..!)

ஸ்கூல் போகும் சிறுமிகளை சைட் அடிக்கிறார் ஹீரோ. (பதினொன்னாம் வகுப்புன்னா சிறுமி தானய்யா..) அதில் ஒரு சிறுமி மாட்டிக் கொள்ள, லவ்வோ லவ். இந்த சிறுமி ஹீரோயினின் அண்ணனுக்கும், ஹீரோவுக்கும் ஏற்கனவே பகை. அதனால் வழக்கம் போல கைப்பிடிப்பதில் சிக்கல். அதையும் தாண்டி புனிதமான காதலை எப்படி ஜெயிக்க வைக்கிறார்கள் என்பது தான் கதை.

ஊரில் ரவுடியாக காட்டிக் கொண்டு திரியும் ஹீரோ... கலவரம் நடக்கும், ரத்தம் சிதறும் என்று எதிர் பார்க்கையிலும் எதுவுமே நடக்காமல் உதாறான களவானியாகவே சிரிக்க வைக்கிறார். வில்லன்களுக்கு டாடா சுமோ கொடுத்தாலும், ஹீரோவை காட்டும் போது அம்பாஸிடரில் வருவது ..அப்பாடா படத்தில் இந்த காரை பார்த்து எவ்வளவு நாளாச்சு என்று தோன்றுகிறது.

நண்பர்கள், பஞ்சாயத்தாக வரும் கஞ்சா கருப்பு என எல்லாவற்றிலும் சிரிப்பு இருந்தாலும், வில்லன் சாமி மாலையை கழட்டி வைத்து விட்டு அடிப்பதும், பிறகு மாலையை மாட்டிக் கொள்வதும் தான் அநியாயத்துக்கு சிரிக்க வைக்கிறது. கூடுதலாக சிரிக்க வைப்பது வில்லனின் காமெடியான முகம். 'ஆடிப் போயி ஆவணி வரட்டும், அவன் டாப்பா வருவான்!' என ஹீரோவின் அம்மா சரண்யா சொல்லும் போதெல்லாம், போரடிக்காமல் சிரிக்க வைத்திருப்பது இயக்குனரின் சாமார்த்தியம்! ஹிட்டாகாத பாடல்களை போடுவதை விட சும்மா இருக்கலாம் என நினைத்திருப்பார்கள் போல, அதனால் பாடல்கள் அவ்வளவாக இல்லை எனபது கூடுதல் நிம்மதி. ஹீரோவுக்கு அப்பாவாக வரும் இளவரசின் பாத்திரம் மிக அற்புதம். கடைசி வரை களவானி கதாபாத்திரத்தை மட்டுமே பிடித்துக் கொண்டு பயணிப்பது நல்ல விஷயம். பாசமாக நெஞ்சுறுகி பாராட்டி சீராட்டி வளர்க்கும் மகளை எவனோ ஒருவன், பேசி மடக்கி இழுத்துக் கொண்டு போவதை தமாஷாகவோ, தாறுமாறாகவோ படத்தில் ஹீரோவின் கேரக்டருக்கு சப்போர்ட் ஏத்துவது போல காண்பிப்பது நல்லதல்ல!

Friday, June 18, 2010

தப்பிச்சுகோங்க...!


* ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பார்கள். திடீரென்று இன்றே படம் பார்க்க நினைக்க வைத்த ஊழ்வினை, டிக்கெட் கிடைக்க வைத்து, படம் பார்க்க வைத்து ஊட்டிவிட்டது.* எதையும் வெளிப்படையாக வெளியில் சொல்லாமல், படம் எடுத்து அனைவரையும் ஏமாற்ற நினைக்கும் மணி ரத்னத்தின் ஏமாற்று வேலை இதிலும் தொடர்கிறது. படத்தின் ஆரம்பித்திலேயே சொல்கிறார்கள் - இதில் வரும் சம்பவம் யாரையும் குறிப்பிடுவன அல்லவாம். தைரியமிருந்தால் வெளிப்படையாகச் சொல்லிப் படம் எடுக்கவேண்டும். வெளியில் சொன்னால் அராஜகம் செய்வார்கள் என்று மணி ரத்னம் சொல்ல வாய்ப்பில்லை. ஏனென்றால் ஒரு தடவை கூட அவர் பொதுவில் உண்மையைச் சொல்லிப் படம் எடுத்ததில்லை.
இருவர் படத்துக்கும் தமிழக அரசியலுக்கும் தொடர்பில்லை என்று சொன்னவர் மணி ரத்னம். தளபதி கதைக்கு மகாபாரதத்துக்கு நன்றி கார்டு போடாதவர். இதில் ராமாயணத்துக்கும் நன்றி கார்டு போடாமல் விட்டுவிட்டார்.* கார்த்திக்கை அனுமாருக்கு இணையாகக் காட்ட, முதல் காட்சியிலேயே கார்த்திக்கை குரங்கு போல தவ்வ வைத்தது ‘அட்டகாசமான யுத்தி.’ கார்த்திக்கும் கடைசி வரை தனது குரங்குச் சேட்டையை நடிப்புதான் என்று நம்பி செய்துகொண்டே இருக்கிறார். அதிலும் சீதை ஒரு மரத்தடியில் இருக்கும்போதே மேலே இருந்து அனுமார் பேசும் காட்சி நகைச்சுவையின் உச்சக்கட்டம். அந்த அனுமார்தான் நம்மைக் காப்பாற்றவேண்டும்.* சீதை உலக அழகி என்பதற்காக கிழவி ஆன பிறகும் நடித்துக்கொண்டே இருந்தால் எப்படி? சீதையானாலும் கிழவி அல்லவா! ஒரு சில காட்சிகளில் சரோஜாதேவி போலத் தெரிந்து பல பெரிசுகளின் உயிரை எடுக்கிறார் ஐஸ்வர்யா ராய்.* தமிழ் பேசினால் நடிக்க வராது என்பதை ஐஸ்வர்யா ராய் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.* நடிகர்களின் முகத்துக்கு அருகில் க்ளோஸ் அப் காட்சி வைத்து போரடித்துப் போன மணி ரத்னம், மூக்கு காது கண் என ஒவ்வொன்றுக்கும் க்ளோஸ் அப் காட்சிகள் வைத்து வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்.* வசனம் பாதி புரியவில்லை, மீதி கேட்கவில்லை.* சுஹாசினி ஜெயா டிவியில் பேசுவது போலவே நினைத்துக்கொண்டு தனது இண்டலக்சுவல் பேத்தலை வசனமாகக் கொட்டியிருக்கிறார். இது மணி ரத்னத்துக்கும் பிடித்துப் போன விஷயம் என்பதால் பல இடங்களில் வசனங்கள் பல்லை இழித்துக்கொண்டு நிற்கின்றன.* திடீர் திடீரென மேட்டுக் குடி என்றெல்லாம் வசனம் வருகிறது. ராமாயணம் வழியே தொழிற்சங்க வசனம் எழுதிப் பார்த்திருக்கிறாரோ என்னவோ. கார்டு போடும்போது நன்றி ரிலையன்ஸ் என்றும் அம்பானி என்றும் போடுகிறார்கள். ஓங்குக முதலாளிகளாகப் பார்த்து நடத்தும் தொழிற்புரட்சி.* படம் முழுக்க அருவியின் இரைச்சல். கூடவே ஏ.ஆர். ரகுமானின் பின்னணி இசை இரைச்சல். யாரோ ஒரு பெண்மணி கடைசி வரை படம் முழுக்க ஹோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ எனக் கத்திக்கொண்டே இருக்கிறார். பணம் செட்டில் செய்யவில்லையோ என்னவோ. இசைப்புயலாக நுழைந்த போது சின்ன வயசு என்றார்கள். எத்தனை அனுபவம் வந்தாலும் பின்னணி இசையில் இன்னும் சின்ன வயசாகவே அவர் இருப்பது கொஞ்சம் ஓவர்.* ஒரே ஒரு உருப்படியான பாடலை தேவையற்ற இடத்தில் வைத்து சொதப்பியிருக்கிறார் மணி ரத்னம். வசனமா பாடலா என்று அனைவரும் ஸ்தம்பித்து நிற்கும்படியாக மற்ற வசனப் பாடல்கள் வந்து மறைகின்றன. இது போன்ற படத்துக்கு எதற்குப் பாடல் என்னும் தைரியம் இன்னும் மணி ரத்னத்துக்கு வரவில்லை. படம் கொஞ்சமாவது சம்பாதிக்க வேண்டாமா என்ற எண்ணமாக இருக்கலாம்.* ராவணன் என்றால் நெகடிவ் கேரக்டர், அதனால் கொஞ்சம் அலட்ட வேண்டும் என்று நினைத்து விக்ரம் அடிக்கும் அலட்டல் தாங்க முடியவில்லை. பக் பக் பக் என்று அவர் என்னவோ செய்யும் காட்சி மனதைப் பிசைகிறது, எப்படி ஒரு நல்ல நடிகரை ஒரே அடியாய் அடித்துப் போட்டுவிட்டாரே மணி ரத்னம் என. அதிலும் ஐஸ்வர்யா ராய் கடைசிக் காட்சியில் அதே போலச் செய்யும்போது, மணி ரத்னத்தின் முகம் கிராஃபிக்ஸில் மறைந்து கே.எஸ்.ரவிகுமார் பக் பக் பக்கெனச் சிரிப்பது படத்தின் ஹைலைட்.* பிரபுவைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. இதில் கண்மை வேறு. என்ன கொடுமை சரவணன் இது என்று அவர் சீரியஸாகப் பேசிய தமிழ் மக்கள் இப்போதும் அவர் சீரியஸாக நடிக்கும்போதெல்லாம் சிரிக்கிறார்கள். இப்படி ஒரு வரம் கேட்டாலும் கிடைக்காதது.* ரஞ்சிதாவுக்கு ’ஒரு சீன்’ கூட இல்லை. ஏன் வந்தார் என்பதே தெரியவில்லை. ஆனாலும் தமிழக மக்கள் விடாமல் கைத்தட்டுகிறார்கள்.* அழகான கதாநாயகி வருகிறார்? என்ன ஆகும் அடுத்து? ஆமாம், காதல்தான். அண்ணன் முரட்டு அண்ணன், என்ன ஆகும் அடுத்து? அதேதான், விக்ரம் கொஞ்சம் முறைப்புடன் கொஞ்சம் சிரிப்புடன் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறார். கல்யாணம் நடக்கிறது, என்ன ஆகும்? நாம் நினைப்பது போலவே ப்ரியாமணியைக் கெடுத்து விடுகிறார்கள். அப்புறம் என்ன ஆகும்? அண்ணன் வீறு கொண்டு எழுந்து, தனிப்பட்ட வன்மம் தீர்க்கக் கிளம்புகிறான். பொதுவுடைமை வசனம் பேச மட்டும் மறப்பதில்லை! இன்னும் எத்தனை நாள்தான் இப்படி பார்ப்பது? அதுவும் மணி ரத்னத்தின் படத்தில்! ஜீரணிக்கவே முடியவில்லை.* இத்தனை நேரம் ஓடிய படத்தில் ஒன்று கூடவா உருப்படி இல்லை? அந்த சந்தோஷத்தை நமக்குத் தருவது சிவன் மட்டுமே.* ஐஸ்வர்யா ராயும், விக்ரமும் எவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கிறார்கள் என்றெல்லாம் உணர்ச்சி வசப்படலாம். அதெல்லாம் எதோடும் ஒட்டாமல் நிற்பது பெரிய குறை.* பிரிதிவிராஜ் ஐஸ்வர்யா ராயை நினைத்து உருகிறார். ஆனால் ஐஸ்வர்யா ராய் உருகுவதையெல்லாம் காண்பிக்கவில்லை. எங்கே பின்னர் ஐஸ்வர்யா ராய் விக்ரமை நினைத்து உருகுவது போல் காண்பித்தால் மக்கள் நெளிவார்கள் என்று இயக்குநர் நினைத்துவிட்டாரோ என்னவோ. ஆனால் திடீரென்று என் கணவர் கடவுளுக்கும் மேல் என்றெல்லாம் பேசுகிறார் ஐஸ்வர்யா ராய். அங்கே ஏன் கடவுள் வந்தார், ஏன் கடவுள் சிலை வந்தது என்பதற்கெல்லாம் ஒரு லாஜிக்கும் இல்லை. ஒரே ஒரு காரணம், சுஹாசினி தனது இண்டெலக்சுவலைக் காட்டவேண்டும் என்பது மட்டுமே!* மணி ரத்னம் இப்படி பழங்காலக் கதையை மார்டனாக எடுக்கிறேன் என நினைத்துக்கொண்டு, பாதி கேட்காத வசனத்தைப் பேசிகொண்டு, சுஹாசினியை வசனம் எழுத வைத்துக்கொண்டு, ஐஸ்வர்யா ராயை நடிக்க வைத்துக்கொண்டிருந்தால், இனியும் காணச் சகிக்காது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தைரியமாக வெளியில் உண்மையைச் சொல்லிப் படம் எடுக்க முன்வரவேண்டும். இல்லை என்றால் காதல் கதையை எடுப்பதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். ஒரு நேரத்தில் இரண்டு மொழிகளில் எடுப்பதால், சில காட்சிகளில் வரும் நடிகர்கள் தமிழ் முகமாக இல்லாமல் இருப்பது பெரும் அந்நியத் தன்மையை ஏற்படுத்துகிறது.* ராவணன் என்று படம் வருகிறது. எப்படியும் சீதை ராவணனுடன் சேர்ந்து விடுவாள் என்று நினைத்து, கலை சுதந்திரத்தை ஆதரிக்கவேண்டும் என்றெல்லாம் முன்முடிவுகளுடன் சென்றேன். படத்தைப் பார்த்தால், சீதை மீண்டும் ராமனுடனே ஓடினால் கூட சந்தோஷப்பட முடியாத அளவு உள்ளது.

நன்றி- இட்லி வடை.பிளாக்ஸ்பாட் .




Thursday, June 17, 2010

நல்லா இருக்குய்யா உங்க நியாயம்?

சில தினங்களுக்கு முன்பு தனியார் டி.வி.யில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒரு கிராமத்திலிருந்து சங்கரி என்ற பெண்மணி கலந்து கொண்டார். சத்துணவு கூடத்தில் சுமார் 27 ஆண்டுகளாக பணியாற்றும் அவருக்கு இரண்டு மகள்கள். இரண்டு ஏக்கர் விவசாய நிலம் இருந்தும் தண்ணீர் வற்றிவிட்டதால் விளைச்சல் இல்லை. கணவருக்கு வேலை இல்லை. ஏழ்மையான குடும்பம். ஆனால் இரு மகள்களையும் நன்றாக படிக்கவைத்து மூத்த மகளுக்கு திருமணத்தையும் முடித்துவிட்டார்கள்.இளைய மகளை வங்கியில் கடன் வாங்கி, உயர் பட்டப்படிப்பு வரை படிக்கவைத்துவிட்டார்கள். படிப்பு முடியும் போதே நல்ல சம்பளத்தில் வேலையும் கிடைக்கும் வாய்ப்பு. மகள் சம்பாதித்து கடனை கட்டிவிடலாம் என்று நிம்மதியாய் இருக்க, தேர்வு முடிந்து வீட்டிலிருந்த மகளுக்கு திடீரென காய்ச்சல். அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்த சில மணி நேரங்களிலேயே உயிர் போய்விட்டது. மூளையில் கட்டி ! விவசாயத்திற்காக அரசாங்கத்தால் கொடுக்கப்படும் கடன்கள், சம்பந்தப்பட்ட விவசாயி அகால மரணம் அடைந்தால் அந்தக் கடன் அரசால் தள்ளுபடி செய்யப்படுகிறது. விவசாயத்தில் வருமானம் இல்லாததாலும், வருமானம் ஈட்டக் கூடிய குடும்பத் தலைவர் மரணம் அடைந்துவிட்டதாலும், அந்த குடும்பத்தை காப்பாற்ற கடன் தள்ளுபடி செய்யும் கொள்கையை அரசு வைத்துள்ளது. ஆனால், கல்வி கடனுக்கு அப்படியில்லை.கல்விக் கடன் பெருபவர்கள் பெரும்பாலும் ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். திடீரென்று ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்துவிட்டால் அந்தக் குடும்பத்தால் கடனை திருப்பி கட்ட இயலுமா? பிள்ளைகள் சம்பாதித்து கடனை அடைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, பெற்றோர்கள் கடன் வாங்கி படிக்க வைக்கிறார்கள். கடன் பெற்ற மாணவனோ, மாணவியோ மரணமடையும் போது அந்த கடனை தள்ளுபடி செய்ய அரசு ஆவணம் செய்யுமா?

- நன்றி- மாபெரும் தலைவன் கேஆர் இளங்கோ ப்ளாக்..

விபரீத விளம்பரங்களை அரசே ஆமோதிக்கலாமா?


ஜெயலலலிதா அரசு இருக்கும் போதே, சிகரெட் தொடர்பான புகைக்கும் பொருட்களுக்கு பொது இடத்தில் தடை விதிக்கப்பட்டது. ஆனால், ஏனோ அதை விற்பதற்கு, தமிழ்நாட்டில் எங்கேயும் தடை கிடையாது. இது மட்டுமில்லாமல், புகையிலை சம்பந்தமான பான்பராக்,ஹான்ஸ், மானிக்சந்த் போன்ற குட்கா அயிட்டங்களை கடைகளில் விற்பதற்கே அதிமுக அரசு தடை செய்தது. இதனால் மாநகராட்சி சம்மந்தமான ஆட்கள், திடீர்திடீரென கடைகளில் ஆய்வு செய்வதும் குட்கா அயிட்டங்கள் விற்பவர்களுக்கு, ஆயிரக்கணக்கில் அபராதம் விதிப்பதும் நடந்தது. இதில் ஆய்வு செய்கிறேன் பேர்வழி என்று, லஞ்ச லாவண்யமும் புகுந்து விளையாடியது. ஆனால், இன்றைய நிலையே வேறு.. அந்த குட்கா அயிட்டங்களை தமிழக அரசே சென்னை போன்ற மாநகரங்களில் அரசு பேருந்துகளின் பின்னால், போர்டு வைத்து விளம்பரம் செய்கிறது. (உதாரணம் : சாந்தி சூப்பர் என்கிற விளம்பர போர்டு) இதில் உள்ள நியாயம் மக்களுக்கு புரியாமல் விழிக்கிறோம். அரசுகள் மாறிப் போனால் போதை பொருட்கள் பேதையாகிவிடுமா? போதை பொருட்களை விற்பனை செய்வது தவறு என்கிற வாதம் ஒரு பக்கம் இருந்தாலும், அதை குறைந்தது விளம்பர படுத்தாமலவாது இருக்கலாமே! மக்கள் மனதில் நஞ்சை விதைக்கும் விளம்பரங்கள் நிறுத்தப்படுமா?

திருட்டு பசங்க..!


திடீரென அவசர வேலைக் காரணமாக செல்லும் பயணிகளுக்காக, இரயில்வே துறையில் தக்கல் முறை நடைமுறைப் படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த தக்கல் முறையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் பதிவு செய்ய முடியும்.இதன் மூலம் பதிவு செய்பவர்களுக்கு சாதாரண கட்டணத்தை விட கூடுதல் கட்டணமாக ரயில்வே துறை வசூலிக்கும். ஆனால், இந்த முறையில் காலை எட்டு மணிக்கு திறக்கும் தக்கல் டிக்கெட் கவுண்டர் அரை மணிநேரத்துக்குள்ளேயே, விற்று தீர்ந்து விடும். நீங்கள் சாதாரண ஒரு ஆளாக இருப்பின், நிச்சயமாக தக்கல் முறையில் ரிசர்வ் செய்ய முடியாது. காரணம், இன்னும் இன்னும் கூடுதலாக வசூலித்துக் கொண்டு , டிக்கெட் வாங்கித் தர புரோக்கர்கள் செயல்படுகிறார்கள். அதுவும் மாம்பலம் ரயில்வே நிலையத்தில் காலை எட்டு மணிக்கு திறக்கும் முன்பதிவு மையத்துக்கு,இரவு ரயில்வே சர்ட்டர் கதவை சாத்தும் பொழுதே, புரோக்கர்கள் இடத்தை ஆக்கரமித்து படுத்துக் கொள்கின்றனர். நீங்கள் இரவு மூன்று மணிக்கு போனால் கூட கூட்டம் நிரம்பி வழியும். அரை மணிநேரத்தில் எல்லா இடங்களிலும் புக்கிங் செய்வதால், மாம்பலம் ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் புரோக்கர்கள் மட்டுமே வாங்கியிருப்பர். மீதமுள்ள சகபயணிகள் டிக்கெட் இல்லாமல் திரும்பி போக வேண்டியது தான். இது தினமும் நடக்கும் பிஸினஸ். இதனால் நேரடியாக வந்து டிக்கெட் வாங்கும் நடுத்தர வர்க்கம் மிகவும் பாதிப்படைகிறது.‘ஊருக்கு செல்லும் பயணியா நீங்கள்?’ என்று அடையாள அட்டைகளை காண்பிக்க சொல்லி பரிசோதித்து விட்டு அவர்களுக்கு மட்டும் டிக்கெட் கொடுத்தால், நல்லது. இல்லையென்றால் புரோக்கர்களின் கொடி மட்டுமே பறக்கும். ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

படிக்க வைக்க பயமா இருக்கு?


கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரமாக ஆகிவிட்டன " என்று எழுதினார் கருணாநிதி அவர்கள். கோவில்கள் என்பதற்கு பதிலாக நாம் தனியார் பள்ளிகள் என்று போட்டு கொள்ளலாம்.பள்ளிகளின் கட்டணத்தை முறை படுத்தி, அரசின் அறிவிப்பு வெறும் பேச்சளவில் அல்லது அறிக்கை அளவிலேயே உள்ளது என்பது கண்கூடு. இப்படி ஒரு விஷயம் இருப்பதையே பல தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது காட்டிக்கொள்ளவில்லை.தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை பற்றி அரசுக்கு அறிவிக்க முறையாக இதுவரைக்கும் ஒரு "ஹெல்ப் லைன்" வசதி ஏன் தொடங்கப்படவில்லை என்று தெரியவில்லை.தனியார் பள்ளிகள் பற்றி நான் கண்ட, கேட்ட, பார்த்த விஷயங்களை பற்றி இங்கே எழுதிகிறேன். கூடவே பெற்றோர்களின் அறியாமை பற்றியும் நாம் பார்ப்போம்.1 . ஒரு தனியார் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்காக ரூ. 50 ஆயிரம் கட்டணம் வாங்கினார்கள். ஆனால், பில் ஏதும் தரவில்லை. கட்டட நிதி என்று சொல்லி இருக்கிறார்கள்.2 . ஒரு பள்ளியில், குழந்தையை சேர்க்க வந்த பெற்றோர்களிடம் தனியாக இன்டர்வீயு நடத்தி, அவர்கள் இருவரும் கண்டிப்பாக டிகிரி படித்து இருக்கவேண்டும் என்றவர்கள்,, அவர்களின் சான்றிதழ் களை வாங்கி சோதனை செய்தும் இருக்கிறார்கள்.3 . சேர்க்கையின் போது, அரசின் அறிவிப்பை சுட்டி காட்டிய பெற்றோரை, கடுமையாக மிரட்டி இருக்கிறது ஒரு பள்ளியின் நிர்வாகம்.4 . சென்னையில் உள்ள பத்மா சாரங்கபாணி பள்ளியில் வசூலிக்க படும் கட்டணத்தில், ஒரு மாணவன் BE படித்துவிடலாம் என்று சொன்னார் ஒரு நண்பர். பெற்றோர்கள் இங்கு நடைபெறும் கொள்ளையை எதிர்த்து சாலைமறியலில்இறங்கினார்கள்.5 . மற்றொரு பள்ளியில், நாங்கள் கட்டணத்தை குறைக்க மாட்டோம், விருப்பம் இல்லை என்றால் உங்கள் குழந்தைகளை கூட்டி கொண்டு போங்கள் என்று வெளிப்படையா அறிவித்துஇருக்கிறார்கள்.6 . ஒரு நாளிதழில் வந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு, ஒரு மிக பெரிய தொகை கொடுத்து, ஒரு பள்ளியில் இருந்து இன்னொரு பள்ளிக்கு ஒன்பதாவது படிக்கும் தனது மகனை மாற்றினார் ஒருவர். அதற்க்கு அவர் சொன்ன காரணம், " இங்கே கோச்சிங் சரியில்லை சார், வரும் வருஷம் டென்த் ஆச்சே "என்றார்.7 . ஒன்பதாவது படிக்கும் போதே பத்தாம் வகுப்புக்கும், பிளஸ் ஒன் படிக்கும் போதே பிளஸ் டூ படிப்பிற்கும் சிறப்பு டியுஷன்களை தொடங்கிவிடுகிறார்கள் பெரும்பாலான பெற்றோர்கள். நிறைய மார்க் வாங்க வேண்டுமே என்கிறார்கள்.8 . பள்ளி செல்லும் நேரம் தவிர, குறைந்தது ஆறு மணிநேரம் டியுஷன்களில் செலவு செய்கிறார்கள் பத்தாம் மற்றும் பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள். பள்ளி கட்டணத்துக்கு இணையாக இதற்கும் செலவு செய்கிறார்கள்பெற்றோர்கள்.9 . ஒரு புகழ் பெற்ற தனியார் பள்ளியில் தம் குழந்தைகள் படிப்பதையே இன்று உள்ள படித்த மற்றும் படிக்காத பெற்றோர்கள் விரும்புவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.இவர்கள் அனைவரின் முகத்திலும் தண்ணிரை தெளித்து, அவர்களின் மயக்கத்தை போக்கி இருக்கிறார் ஜாஸ்மின் என்ற மாணவி.திருநெல்வேலியில், ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்யும் ஏழை தந்தை, படிக்காத தாயார் என்ற சூழ்நிலையில் வளர்ந்து ஒரு பெரும் சாதனை நிகழ்த்தி இருக்கிறார் ஜாஸ்மின்.நெல்லை டவுன் அருகே உள்ள கல்லணை எம்.பி. ல் மாநகராட்சி பள்ளியில் படித்து, பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று இருக்கிறார் ஜாஸ்மின். இதில் அனைவரும் கவனிக்க வேண்டிய மற்றும் ஒரு விஷயம்...இவர் தனியாக டியுஷன் எதுவும் படிக்கவில்லை என்பதே.தஞ்சை அருகே உள்ள ஒரு கிராமத்தில், அரசு பள்ளியில், தமிழ் மீடியத்தில் படித்த என் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் இன்று ஜப்பானில் உள்ள ஒரு நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறார். இன்னொருவர், முழுக்க முழுக்க மெரிட் அடிப்படையில் படித்து, நாகை அரசு மருத்துவமனையில் டாக்டராக இருக்கிறார்.ஊட்டி கான்வென்டில் படித்து வீணா போனவர்களும் இருக்கிறார்கள்,மிக சாதாரண அரசு பள்ளியில் படித்து சாதித்தவர்களும் இருக்கிறார்கள்."முயற்சியும், ஈடுபாடும் மட்டுமே நான் வெற்றி பெற காரணம் " என்கிறார் சாதனை மாணவி ஜாஸ்மின்.படிக்கிற பிள்ளைகள் எங்கு இருந்தாலும் படிக்கும் என்பதற்கு இந்த உதாரணங்கள் போதும்தானே?


நன்றி- இட்லி வடை.காம்