Thursday, October 27, 2011

ஏழாம் அறிவு- திரை விமர்சனம்

ஏழாம் அறிவு - கருத்துக்கள் நிறைய இருந்தாலும்,
கமர்ஷியல் கலவைகள் சரியில்லை!

படத்தின் நிறை குறைகளை அலசிப் பார்ப்பதற்கு முன்... ஏழாம் அறிவு படத்தில்... பக்கத்து நாட்டுல என்ன நடந்தது, வீரம் வீரம் என்று சொல்லி என்ன செய்தோம்... கடைசியாக எல்லோரும் செத்தது தானே மிச்சம் என்று ஸ்ருதி சொல்ல... வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் இருக்கு... ஒரு நாட்டோடு ஒன்பது நாடுகள் மோதுவது வீரமல்ல, துரோகம்! என்று சூர்யா பேசும் வசனம் இதயத்தில் இடியாய் பாய்கிறது. இந்த வசனத்தை தைரியமாக உணர்வோடு படத்தில் வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஒரு சல்யூட்!



படத்திற்கு வருவோம்... தற்காப்புக் கலையான குங்ஃபூவில் சிறந்து விளங்குவது சீனா. இந்த கலையை சீன மக்களுக்கு கற்றுக் கொடுத்தவர் புத்த மதத்தை தழுவிய போதி தர்மர் என்பவர். இதில் ஆச்சரியம் என்ன என்றால் போதிதர்மர் ஒரு தமிழர்.

பாரம்பரிய கலைகளை நாம் மறந்துவிட்டோம்... ஆனால் ஒரு தமிழன் கற்றுக்கொடுத்த கலை அறிவை வைத்தே தமிழர்களுக்கு ஆப்பு வைக்க துணிந்து விட்டான் சீனாக்காரன்... இந்த சிக்கலை எப்படி சமாளிக்கபோகிறோம் என்ற கற்பனைக் கலவையே ஏழாம் அறிவு.

கி.பி 6ஆம் நூற்றாண்டில் துவங்குகிறது கதை. பல்லவர்கள் காலத்தில் தான் தென்னிந்தியாவில் புத்த மதமும் தழைத்தோங்கியது. தென் இந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான பல்லவ வம்சத்தை சேர்ந்தவர் ‘போதி தர்மர்’ (போதிதர்மராக அறிமுகமாகிறார் சூர்யா). அச்சமயத்தில் புத்த மதத்தை தழுவிய போதி தர்மர், மகாயான புத்த மதத்தையும் கலை, மருத்துவம், எதிரில் இருப்பவரை தன் வயப்படுத்தும் வர்மக்கலை போன்ற கலைகளை பரப்புவதற்காக சீனாவிற்கு பயணம் மேற்கொள்கிறார் போதி தர்மர்.

போதிதர்மர் சீனா சென்றிருந்த நேரம், சீனா பயங்கரமான தொற்று வியாதியால் பாதிக்கப்படுகிறது. அதில் இருந்து சீன மக்களை காப்பாற்றுகிறது போதிதர்மரின் மருத்துவம். இதனால் அப்பகுதி மக்களால் தெய்வமாகவே வணங்கப்படுகிறார் போதிதர்மர். அப்பகுதி மக்கள் எதிரிகளால் தாக்கப்படும் போதும் தன் வர்மக் கலைகளை பயன்படுத்தி மக்களை காப்பாற்றுகிறார்.

சாவூலின் குங்ஃபு என்ற தற்காப்பு கலையை சீன மக்களுக்கு கற்றுக்கொடுக்கிறார். கலை, மருத்துவம் என அனைத்திலும் சிறந்து விளங்கியவர் போதிதர்மர். அவர் மீண்டும் தன் தமிழகம் திரும்ப விருப்பப்பட்ட போதும், போதிர்மரின் உயிர் சீன மண்ணில் பிரிய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் விருப்பியதால் அவர்கள் கொடுத்த விஷம் கலந்த உணவை உண்டு அங்கேயே தன் உயிரை விடுகிறார் போதிதர்மர்.

பையோ வார் ( உயிர் போர் ) பற்றிய விஷயங்களை நம் தமிழ்படமான ‘ஈ’ படத்தில் பார்த்திருப்போம். ஏழாம் அறிவு படத்தில் இந்தியாவை தாக்க சீனா ரெட் என்கிற பையோ வார் பிளானில் இறங்குகிறது. அதன் தொடக்கமாக சீனாவை சேர்ந்த டோங்லி ( படத்தின் வில்லன் ) என்றவன் தமிழ்நாட்டுக்கு வருகிறான்.


அரவிந்த் ( சூர்யா ) சென்னையில் நடக்கும் பாம்பே சர்க்கஸ் கம்பனியில் வேலைபார்க்கும் சர்க்கஸ் கலைஞர். சர வெடியாக வெடிக்க இருந்த ‘ரிங்க ரிங்கா’ பாட்டு ஊசி வெடியாக மாறிவிட்டாலும்... அதில் சூர்யாவின் சாகசங்களும், அதைவிட மற்ற சர்க்கஸ் கலைஞர்களின் சாகசங்களும் பலே!

ரெட் ஆபரேஷனை தமிழகத்தில் தொடங்க டோங்லி வந்துவிடுகிறான். வந்ததும் அவனது முதல் வேலை, சுபாவை (ஸ்ருதிஹாசன்) கொலை செய்வதுதான். ஏன்?

மறபியல் பொறியாளராக சுபா (ஸ்ருதிஹாசன்). பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்தவர் போதிதர்மர். இப்போது உலகில் பல விளங்க முடியாத நோய்கள் வர தொடங்கிவிட்டது. போதிதர்மரின் டி.என்.ஏ.வை எடுத்து ஆராய்ச்சி செய்து, அதே விதமான டி.என்.ஏ-வை போதிதர்மரின் பரம்பரையில் யாருக்காவது இருக்கும். போதிதர்மரின் டி.என்.ஏ.வை இவருக்கு பொருத்தினால், போதிதர்மரின் கலை, மருத்துவ அறிவு மீண்டும் உலகத்துக்கு கிடைக்கும் என்பது தான் சுபாவின் ஆராய்ச்சி. (இந்த டி.என்.ஏ மேட்டர் Assassin's Creed என்ற ஆங்கில படத்தில் இருந்து உருவப்பட்டதாகவே சொல்லப்படுகிறது...)

சுபாவின் ஆராய்ச்சி விஷயங்களை காசு வாங்கிக்கொண்டு சீனாவுக்கு தெரியப்படுத்துபவர் சுபாவின் பேராசிரியர் ரங்கராஜன்... இந்த சகுனி வேலையால் தான் வில்லன் டோங்லி தமிழ்நாட்டுக்கு வந்து புது வைரஸ் கிரிமியை பரப்பியதோடு... சுபாவை கொல்ல முயர்ச்சி செய்கிறான். போதிதர்மர் பரம்பரையில் வந்தவர் சர்க்கஸ் கலைஞராக இருக்கும் அரவிந்த். அரவிந்தை வைத்து அவருக்கும் தெரியாமலே ஆராய்ச்சியை தொடர்கிறார் சுபா.

சுபாவின் பழக்கத்தை காதலாக எடுத்துக்கொண்டு, அது இல்லை என்ற பின் ரெயில்வே ட்ராக்கில் யம்மா யம்மா சோகப்பாட்டுப் பாடி பின் ஆராய்ச்சியின் முக்கியத்துவம் தெரிந்து சுபாவுக்கு ஒத்துழைப்பு தருகிறார் அரவிந்த்.

போதிதர்மரின் திறமைகள் திருப்பவர... விளைவுகளை சந்திக்கிறான் வில்லன் டோங்லி!

படத்தின் முதல் பாதியில் பல பிரம்மாண்ட காட்சிகளோடு, நாம் அறியாத பல தகவல்களை சொன்னாலும்... பார்வையாளனுக்கும் படத்துக்கும் ஏதோ ஒருவித சம்பந்தம் இல்லாமலே போய்விடுகிறது.

முதல் பாதியில் பழையகால சீன கிராமத்தை காண்பிக்க உழைத்தவர்களுக்கு சபாஷ்! போதிதர்மரால் காப்பாற்றப்படும் சிறுமியின் சிரிப்பும் அதன் பின்னணி இசையும் இதம். சூர்யாவின் வர்மக்கலை வித்தைகளும் ஹீரோயிஸம் கலந்ததாகவே பிரம்மிப்பூட்டியது.

ஆனால் முதல் பாதியில் சூர்யாவுக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் இருக்கிற ரொமான்ஸ் காட்சிகள் எம்.ஜி.ஆர் காலத்து பழைய ஸ்டைல். அந்த யானை சவாரி ரொமான்ஸ் காட்சி புதுசு. காதல் தோல்வி என்று யம்மா யம்மா பாடலில் சூர்யா உருகி உருகி பாடுகிற அளவுக்கு அதற்கு முன்பு இருந்த காதல் காட்சிகள் உருக்கமானதாக அமையவில்லை என்பதே உண்மை.


முதல் பாதியிலும் க்ளைமாக்ஸ் காட்சி தவிர்த்தும் ஹிப்னாடிஸம் ( நோக்கு வர்மம் - எதிரில் இருப்பவர்களை தன் வசம் வசீகரப்படுத்துவது ) என்கிற கலையை வைத்துதான் சண்டை போடுகிறார் வில்லன். ஹிப்னாடிஸம் கலையை உணர்ந்தவர்களாகவே இருந்தாலும், அதை படமாக்கிய விதம் எதோ காமெடித்தனமாகவே இருக்கிறது.

இரண்டாம் பாதியில் லாரி முதல் கார், ஆட்டோ எல்லாம் ரவுண்டுகட்டி பறப்பது தயாரிப்பாளரின் பர்ஸை காலி செய்ததைத் தவிர பிரம்மாண்டம் எதுவும் இல்லை... வீடியோ கேம்ஸ் தான் நினைவுக்கு வருகிறது.

தமிழ் மொழியை குரங்கு என்று ஒருவர் சொல்லிவிட அவரை வார்த்தைகளால் விளாசும் காட்சிக்கு வந்த அபாரமான கைதட்டல், இன்னும் நாம் உணர்வுள்ள தமிழர்களாய் இருக்கிறோம் என்பதை நிரூபிக்கிறது. வெள்ளைக்காரன் இங்க வந்து நம்மை அடிமைப்படுத்தினான், இப்போ நாம அங்க போய் அடிமையாய் இருக்கிறோம் என்ற வசனங்கள் நச்! வசங்களோடு நில்லாமல் ஸ்ருதிஹாசனின் நடிப்புக்கும் கைதட்டல்! வில்லனிடம் போனில் கண்ணீர்விடும் காட்சியில் ஸ்ருதி பின்னிட்டார்.

வில்லன் நடிகர் ஜானி ட்ரி, பார்வையில் மிரட்டுகிறார். க்ளைமக்ஸ் காட்சியில் தான், நிமிர வைக்கிறார் இயக்குனர். பீட்டர் ஹென் அசாத்தியமான சண்டைக்காட்சியாகவே அதை உருவாக்கி இருக்கிறார். அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி விழுது.

ரவி கே.சந்திரனின் ஷாட்டும் ஆண்டனியின் கட்டும் இயக்குனர் சொன்ன சொல் கேட்டிருக்கிறது என்றே சொல்லலாம். இன்னும் என்ன தோழா... பாடலை வீணடிப்பார்கள் என்பது எதிர்பார்த்த விஷயம். நல்லவேளை படத்தின் பின்புலத்தில் வைத்து மகிழ்ச்சி. ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் முன்னந்தி சாரல்..., யம்மா யம்மா..., அவருக்கே உரிய மெலடி ஸ்டைல். ஓரிரு பாடல்கள் அவர் படத்தின் பாடல்களை அவரே ரீமிக்ஸ் செய்தது போல ஒரு உணர்வு.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படங்கள், கருத்துக்களை கமர்ஷியல் கலவையோடு சொல்வது போலவே இருக்கும். இதில் கருத்துக்கள் நிறைய இருந்தாலும், கமர்ஷியல் கலவைகள் சரியில்லை. இந்தக் கூட்டணியில் இன்னொரு கஜினியை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே!

எவ்வளவு எதிர்பார்த்தாலும் அதைவிட மேலே மேலே மேலே இருக்கும் என்று சொன்னார் இயக்குனர். உண்மையை சொன்னால் அவர் சொன்னதை வைத்து எதிர்பார்த்ததைவிட படம் கொஞ்சம் கீழே தான்!

நன்றி - நக்கீரன்.com

Saturday, June 18, 2011

அன்று- ஆனந்த விகடனும் ஜெயமோகன் கட்டுரையும்!


எழுத்தாளர் ஜெயமோகனின் வலைப்பூ தான் இலக்கிய வட்டாரத்தின் சமீபத்திய பரபரப்பு. சர்ச்சைக்கும் ஜெயமோகனுக்கும் அப்படி ஒரு பந்தம். 'கருணாநிதி இலக்கிய வாதியே இல்லை!' என்பது தொடங்கி, 'பெரியார், தமிழ்ப் பண்பாடு பற்றிய ஆரம்ப அறிவுகூட இல்லாதவர்!' என்பது வரை ஜெயமோகனின் தடாலடி ஸ்டேட்மென்ட்கள் பிரபலமானவை. 'இனிமேல் எழுதுவதில்லை' என அறிவித்துவிட்டுக் கொஞ்ச நாள் ஒதுங்கி இருந்த ஜெயமோகன், வலைப்பூ தொடங்கி எழுத ஆரம்பித்ததும் வெடிக்கத் தொடங்கிவிட்டது சர்ச்சை சரவெடி!
'தொப்பி'
அவர் இரு லேகியங்களைத் தவறாமல் உண்பதுண்டாம். ஒன்று, தங்க பஸ்பம்; நிறம் மங்காமல்இருப்பதற்காக. இன்னொன்று, சிட்டுக்குருவி லேகியம்; வீரியத்துக்காக! ஆண் சிட்டுக் குருவிகள் எந் நேரமும் பெண் புடைசூழ இருக்குமாம். ஆயிரக்கணக்கில் ஆண் சிட்டுக் குருவிகளைக்கொண்டு செய்யப்படும் சிட்டுக் குருவி லேகியம் சாப்பிடுவதால், எம்.ஜி.ஆர். வெளிப்புறப் படப்பிடிப்பில் இருந்தால் அவரை மொய்க்கும் பெண் சிட்டுக் குருவிகளை விரட்ட தலைக்கு மேல் வலையைக் கட்டி ஜஸ்டின் தலைமையில் ஒரு குழு தயாராக இருக்குமாம். வதந்திதான்.

'எங்களூரில் காந்தாராவ், கிருஷ்ணா போன்ற தெலுங்கு நடிகர்களுக்குத்தான் செல்வாக்கு. குலசேகரத்தில் இரண்டே தியேட்டர்கள்; ஒன்றில் மலையாளப் படம் என்பதால், எம்.ஜி.ஆர். வேறு வழியில்லாமல் ரசிக்கப்பட்டார். செல்லப் பெயர் தொப்பி. அவர் முதுமையை மறைக்க முகத்தின் மீது பச்சைப் பப்படம் ஒட்டுவதாக கணியான் சங்கரன் சொல்லி எங்க ளூரில் பரவலாக நம்பப்பட்டது. ஆகவே, பச்சைப் பப்படம் என்ற பேரும் சில இடங்களில் புழக்கத்தில்இருந்தது.

லேகியத்தின் பலன்களை நாம் சினிமாவிலும் பார்க்கலாம். எம்.ஜி.ஆர். காதல் காட்சிகளில் மூன்று வகை நடிப்புகளை வெளிப் படுத்துவார். நெளிந்து நின்று கீழு தட்டைக் கடித்து அரைப் புன்னகை யுடன் மேலும் கீழும் பார்ப்பது... கதாநாயகியின் பின்னால் வந்து நின்று அவள் இரு புஜங்களிலும் பிடித்து சரேலென்று ஒரு பக்கமாக விலக்கி கேமராவைப் பார்த்து உதட்டைச் சுழிப்பது. இடையை ஒசித்து ஒசித்துச் செல்லும் (ஷாட் முடிந்த பின் சரோஜாதேவிக்கு இடுப்பில் எண்ணெய் போட்டு சுளுக்கு எடுப்பார்களாமே!) கதா நாயகிக்குப் பின்னால் துள்ளி ஓடுவது... இதைத் தவிரவும் பல சிட்டுக் குருவித்தனங்கள்!

எம்.ஜி.ஆர். தமிழ்ப் பண்பாடு தவறுவதில்லை. (இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பளை) பாட்டில் கதாநாயகியைப் புல் தரையிலும் மணலிலும் போட்டு புரட்டி எடுத்து, மெல்லிசான சேலை உடுத்திருந்தாளென்றால் மழையில் நனையவைத்து, கேமரா பக்கவாட்டில் இருக்கிற தென்றால் முந்தானையைப் பிடித்து இழுத்து, உதட்டைக் கடித்தபடி பின்னால் துள்ளி ஓடி இடை பிடித்து இழுத்து அணைத்து, அவள் கால்கள் நடுவே காலை நுழைத்து ராமன் வில்லை வளைப்பது போல வளைத்து, அவளைப் பூச்செடி களுக்குப் பின்னால் இட்டுச் சென்று, இரு பூக்களை ஒன்றோ டொன்று உரசவைத்து, பாறை மேல் படுக்கவைத்து, மேலேறிப் படுத்து நாஸ்தி செய்தாலும், பாட்டு இல்லாதபோது பண்பாக 'அதெல்லாம் கையானத்துக்கு அப்பம். நீ இப்ப வீத்துக்கு போ!' என்றுதானே அவர் சொல்கிறார்.

எம்.ஜி.ஆர். படத்தில் பாடல்கள் அர்த்தமுள்ளவை. 'ஆண்ட வன் உலகத்தின் முதலாளி... அவனுக்கு நானொரு தொழி லாளி!' அப்படியென்றால் ஏமாற்றலாம். கூலி கேட்டு வையலாம். போஸ்டர் ஒட்டி நாறடிக்கலாம். இது இப்போ தைய சிந்தை. அன்றெல்லாம் பாட்டு புரிவதில்லை. 'தம்பீ நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று...' காஞ்சி என்றால் என்ன? தொடுவட்டியில் வாங்கின சாணித்தாள் பாட்டுப் புத்தகத்தில் பொதுவாகப் பிழைகள் அதிகம். ஆகவே, உள்ளூர் தமிழறிஞரான நான் அதைக் 'கஞ்சியிலே' என்று திருத்தினேன். அப்படியானால் 'படித்தேன்' தவறுதானே? குடித்தேன் என்று ஆக்கியபோது, சுமாராக வந்தது. தேவாசீர்வாதம் புலவர், ''அது செரிதேண்டே மக்கா..! கஞ்சித் தலைவன்னுகூட ஒரு பழைய படம் வந்திட்டுண்டு. ஏழைகளுக்கு அமிருதம்லா கஞ்சி? பதார்த்தகுண சிந்தாமணியிலே என்ன சொல்லியுருக்குண்ணாக்க...'' என்றார்.
எம்.ஜி.யாரின் பேச்சு வேறு எங்களுக்குப் புரிவதில்லை. தீப்பொறி ஆறுமுகம் மேடையில் சொல்லும் நகைச்சுவை ஒன்று உண்டு. ஆசிரியர்கள் போராட்டம் நடந்தபோது, அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்த எம்.ஜி.ஆர். சொன்னாராம்... 'உங்களுக்கெல்லாம் பைப்பு இருக்கு. பம்பு இல்லை.' ஆசிரியர்கள் திக்பிரமை அடித்துப்போய், பேச்சுவார்த்தை முறிந்தே போயிற்று. தலைவர் சொன்னது, 'படிப்பு இருக்கிறது, பண்பு இல்லை' என்று. அதேபோல காதல் வசனங்கள்... ''கமலா, நீ என்னைத் தப்பா புழிஞ்சுக்கிட்டே (அடிப்பாவி) என்னைக் கயமை அய்க்குது. எங்கம்மாவுக்கு நான் ஒரு சத்தியம் செஞ்சு குதித்திருக்கேன்.'' பொன்மொழிகளும் சிக்க லானவை... 'தேய்ஞ்சு செஞ்சா தவழு. தேயாம செஞ்சா தப்பு!' தப்புக்கு தவழ வேண்டாம், பெஞ்சு மேல் ஏறினால் போதுமா? 'அம்மா அப்பி சொல்லாதீங்கம்மா! தை செஞ்சு அப்பி சொல்லாதீங்க. உங்க மகன் ஒருநாளும் அப்பி செய்ய மாட்டான்.' எங்களூரில் அப்பி என் றால், சின்னப்பிள்ளை கொல்லைக் குப் போவது என்றொரு பொருள் உண்டு.

ஆனால், ஒரு ஆச்சர்யம் எனக்கு காத்திருந்தது. இருபதாண்டுகளுக் குப் பின்னால் என்னால் இப்போது ஒரு பழந்தமிழ்ப் படத்தைக்கூடப் பத்து நிமிடம் பார்க்க முடியவில்லை. ஆனால், எம்.ஜி.ஆர். படங்களை பெரும்பாலும் கடைசி வரை பார்க்க முடிகிறது, அம்புலிமாமா கதை படிக்கும் ஆர்வத்துடன்! திரைக்கதை பற்றிக் கற்ற பின், இந்த இரண்டாண்டுகளில் கச்சிதமாகத் திரைக்கதை அமைக்கப்பட்ட படங்கள் என்று கணிசமான எம்.ஜி.ஆர். படங்களைப் பற்றி எண்ணத் தோன்றுகிறது. தமிழில் எடுக்கப்பட்ட மிகச் சிறந்த வணிகத் திரைக்கதை 'எங்க வீட்டுப் பிள்ளை' தான்!'


'திலகம்'

'...சிவாஜியை எங்களூரில் ஆசாரிமார் தவிர்த்துப் பிறருக்குப் பிடிக்காது. வேறு யாருக்காவது பிடித்திருந்தாலும் மதிப்பான நாயர், நாடார் பட்டங்களை இழக்க விரும்பாமல் அமைதி காத்தார்கள். பொதுவாக முக்கியக் கட்டங்களில் பாடித் தொலைக்கிறவர் என்ற குற்றச்சாட்டு பரவல். தங்கை கல்யாணமாகிப் போகும் நேரம் வாசலில் டாக்ஸி காத்திருக்க, விருந்தினர் பஸ்ஸைப் பிடிக்கும் அவசரத்தில் நிற்க, பாசம் பீறிட அவர் பாடுவார். நெஞ்சடைக்கப் பாடாமல் சாக மாட்டார். அன்றெல்லாம் சிவாஜிக்கு காஸ்ட்யூம் அமைக்கும்போதே கக்குவதற்கு கால் லிட்டர் சிவப்பு மையும் தயாராக வைத்திருப்பார்கள்.

சிவாஜி படங்களின் நகைச் சுவையின் உச்சம் சண்டைக் காட்சிகள்தான். 'அவன்தான் மனிதன்' என்ற படத்தில் அவர் சண்டைக் காட்சியில் நடித்த போது, நாக்கைக் கடித்தபடி கையை வெடுக் வெடுக் என்று முன்னால் நீட்டிப் பின்னால் இழுப்பார். 'வைக்கோலு பிடுங்கு கான்' என்று அப்பி தாமோதரன் சொல்ல, அது சிவாஜி பட சண்டைக்கான சொல் ஆகியது. 'சுண்டன் படம் எப்பிடி மச்சினா? நாலு வைக்கோலு இருக்குலே... அதுகொள்ளாம், சிரிக்கவகையுண்டு! பின்ன கடசீ ஸீனிலெ மசி துப்பி சாவுதாரு. அங்கினயும் மனசு தெறந்து சிரிக்கிலாம். ஒருமாதிரி கொள்ளாம் கேட்டியா?'...

உச்சம் 'திரிசூலம்'. அதில் மூன்று நடிப்பு. இரு கதாபாத்திரங்கள் முழுக்க முழுக்க நகைச்சுவை. கிழ சிவாஜிக்குப் பக்கவாட்டில் பார்த்தால் தலைகீழ் தேங்காய்மூடி போலத் தெரியும் தாடி. அவர் கே.ஆர்.விஜயாவை பிரிந்திருப்பார். பிரிவுத் துயர் தாங்காமல் தினம் இரண்டு லார்ஜ் ஏற்றிக்கொண்டு (சிவாஜி காங்கிரஸ்காரர் ஆதலினால் படத்தில் இக்காட்சியைக் காட்ட மாட்டார்கள். ஊகம்தான்!) சாட்டையால் தன்னைத்தானே பளார் பளார் என அடிப்பார். அப்போது எதிர் பார்க்கப்படுவது போலவே உதடுகள் துடிக்கும், கன்னம் அதிரும்...

உச்சகட்ட நடிப்பு... 'பகைவர் களே ஓடுங்கள், புலிகள் இரண்டு வருகின்றன...' என்ற வரிக்கு சின்ன சிவாஜி காட்டும் சைகைதான். தமிழ் நடிப்புலகில் அதற்கு ஈடு இணை ஏதுமில்லை. 'தென்னாட்டு மார்லன் பிராண்டோ' என்று சிவாஜியை இதன் பொருட்டே சொன்னார்கள் என்று நினைக்கிறேன்.

-2008 பிப்ரவரி மாதத்தில் மிகவும் பரபரப்படைந்த கட்டுரை இது. சினிமா வட்டாரம், எழுத்துலகம், பத்திரிகைகள் என அல்லோலகல்லோலப்பட்டது, இக்கட்டுரை.

Friday, June 10, 2011

கொடுமைடா கோவிந்த சாமி!




இதை நிதானமா படிங்க..உங்க கருத்தை தவறாம பதிவு செய்யுங்க!
கள்ளகாதலுக்கு தடையாக இருந்த கணவரை, கள்ளகாதலன் துணையுடன் கழுத்தறுத்து கொன்ற மனைவியை போலீஸார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், கொளத்தூர் அடுத்த வெடிக்காரனூரை சேர்ந்த கணபதி மகன் கூலி தொழிலாளி கோவிந்தன் (37). இவரது மனைவி லட்சுமி. நேற்று முன்தினம் காலை தன் வீட்டு கட்டிலில் கழுத்து அறுப்பட்ட நிலையில் கோவிந்தன் பிணமாக கிடந்தார். கொலை தொடர்பாக விசாரணை நடத்திய கொளத்தூர் இன்ஸ்பெக்டர் சக்ரபாணி (பொறுப்பு) தலைமறைவாக இருந்த கோவிந்தன் மனைவி லட்சுமியை நேற்று கைது செய்து விசாரணை நடத்தினார். லட்சுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமிக்கும் கள்ள தொடர்பு இருந்துள்ளது. அதை பழனிச்சாமி உறவினர் குழந்தை கவுண்டர் கண்டித்துள்ளார். அதனால், 2008ல், கள்ள காதலுக்கு தடையாக இருந்த குழந்தை கவுண்டரை லட்சுமி, பழனிச்சாமி இருவரும் கொலை செய்து, பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி அணையில் வீசி விட்டனர். விசாரணை நடத்திய போலீஸார் லட்சுமியையும், பழனிச்சாமியையும் கைது செய்தனர்.
ஜாமீனில் வெளிவந்த பழனிச்சாமியை மற்றொரு கோஷ்டியினர் கொலை செய்தனர். அதனால், குழந்தை கவுண்டர் கொலை வழக்கில் லட்சுமி விடுதலை செய்யப்பட்டார்.
அதன் பின்னர் லட்சுமிக்கு, வெடிக்காரனுரை சேர்ந்த ராஜாராம் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதை கணவர் கோவிந்தன் கண்டித்துள்ளார். எனவே, குழந்தை கவுண்டரை கொலை செய்தது போல, கள்ள காதலுக்கு தடையாக இருந்த கணவர் கோவிந்தனையும் கொலை செய்ய லட்சுமி முடிவு செய்தார். கடந்த 7ம் தேதி இரவு ராஜராமை, தன் வீட்டுக்கு அழைத்து வந்தாள் லட்சுமி. அப்போது கோவிந்தன் குடி போதையில் கட்டிலில் தூங்கி கொண்டிருந்தார். வீட்டினுள் சென்ற லட்சுமி தூங்கி கொண்டிருந்த கோவிந்தனின் இரு கால்களையும் கெட்டியாக பிடித்து கொண்டாள். ராஜாராம் அங்கிருந்த அரிவாளை எடுத்து வந்து கோவிந்தன், கழுத்தை ஆட்டை அறுப்பது போல அறுத்து கொலை செய்துள்ளார். கோவிந்தன் இறந்தது உறுதி செய்த பின், இருவரும் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர். மேற்கண்ட தகவல் விசாரணையில் தெரியவந்தது. லட்சுமியை நேற்று சிறையில் அடைந்த போலீஸார்,தலைமறைவாக உள்ள லட்சுமியின் கள்ள காதலன் ராஜாராமை தேடி வருகின்றனர்.

Tuesday, June 7, 2011


தினமலருக்கு நன்றி!


Saturday, May 28, 2011

பயபுள்ள நம்பிக்கையை விட்ற கூடாது..!

எவ்வளோ பண்றோம்… இத பண்ண மாட்டோமா…’ என்று தமிழகத்தின் விடிவெள்ளி சொன்ன பொன்மொழி, வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு உன்னத தத்துவம். எப்படி? இந்த தன்னம்பிக்கை கொடுக்கும் கதையை படிங்க…

பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள்.. ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். கருப்பு கோட், நீல சட்டை, புள்ளி போட்ட டையுடன் எல்லாவற்றையும் கவனித்தப்படி ஒரு
பக்கத்தில் உட்கார்ந்திருந்தார், நம்ம கந்தசாமி.

உள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார். வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார். பிறகு, நன்றி தெரிவித்தார். சிக்கீரம் முடிக்கணும், சிம்பிளா வைக்கணும்ன்னு முடிவு பண்ணினார்..

முதலில் தொழில்நுட்ப அறிவை சோதிக்க வேண்டும் என்று விரும்பி ஒரு கேள்வி கேட்க நினைத்தார். எப்படியும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் டெக்னாலஜி தெரிந்துதான் வந்திருப்பார்கள். அதனால், இப்படி கேட்டார்.

“உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா தெரியும்? தெரியாதவர்கள் மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.”

2000 பேர் இடத்தை காலி செய்தார்கள்.

நம்ம கந்தசாமிக்கும் ஜாவா தெரியாதுதான். இருந்தும் போகலையே!

“இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல. எதுக்கு போய்கிட்டு? என்னத்தான் நடக்குது பார்ப்போம்” என்றபடி அங்கேயே இருந்து விட்டார்.

அடுத்த கேள்வி, “உங்களில் யாரெல்லாம் நூறு பேருக்கு மேல் ஆட்களை நிர்வகித்து இருக்கிறீர்கள்? அவர்கள் மட்டும் இருக்கலாம்.”

இன்னொரு 2000 வெளியே கிளம்பியது.

கந்தசாமி - “நான் ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாதே? என்ன செய்யலாம்? சரி, அடுத்த கேள்வியை கேட்கலாம்.”

இன்னும் ஆயிரம் பேர் இருக்கிறார்களா? என்று நினைத்துக்கொண்டு பில் கேட்ஸ் கேட்டார், “மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து…”.

சொல்லி முடிக்கும் முன்பே, 500 இருக்கைகள் காற்று வாங்கியது.

”அதையெல்லாம் படிக்க நமக்கு எங்க நேரம் இருந்தது?” பெருமூச்சுவிட்டபடி பில் கேட்ஸையே பார்த்து கொண்டிருந்தார், கந்தசாமி.

ஐரோப்பிய மொத்த கண்டத்திற்கு முழுமையான தலைமை பதவியாச்சே? கண்டம் முழுக்க சுற்ற வேண்டி இருக்குமே? எத்தனை மொழிகள் தெரிந்திருக்கும் என்று பார்ப்போம் என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

“உங்களில் யாருக்கெல்லாம் செர்போ-க்ரோட் மொழி தெரியும்?” - செர்போ-க்ரோட், உலகில் அரிதாக பேசப்படும் மொழி.

இப்ப, அரங்கில் இரண்டே பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் யாரென்று உங்களுக்கு தெரியும்.

அது, “எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?” என்ற நினைப்பில் நம்ம கந்தசாமி.

ஆனாலும், மனசுக்குள் பயம்தான். மூன்று பேரும் ஒரு வட்ட டேபிளை சுற்றி உட்கார்ந்தார்கள். இருவரையும் பார்த்தார், பில் கேட்ஸ்.

டிக் டிக்… டிக் டிக்… டிக் டிக்…

“ஏன்ப்பா, இப்படி பார்க்குற? சீக்கிரம் ஏதாவது கேளுப்பா… ” - மனசுக்குள் கந்தசாமி.

”இப்ப, நீங்க ரெண்டு பேர் தான் இந்த மொழி தெரிந்தவர்கள் இருக்குறீர்கள். செர்போ-க்ரோட் மொழியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பற்றி, அதன் தொழில்நுட்ப திறன் பற்றி விவாதம் செய்யுங்க.”

கந்தசாமி அமைதியாக, பக்கத்தில் இருந்த இன்னொருத்தனை பார்த்தார். சின்ன வயசுக்காரன். நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு உட்கார்ந்திருந்தான். மூளைக்காரன் போல!

கந்தசாமி ஆரம்பித்தார்.

மெதுவாக, ”தம்பிக்கு எந்த ஊரு?” - கேட்டது தமிழில்.

“தூத்துக்குடி பக்கம். நீங்க?……

Tuesday, May 17, 2011

அழகர்சாமியின் குதிரை: திரை விமர்சனம்.

அழகர்சாமியின் குதிரை:

ஒரு சிறுகதையை திரைக்கதையாக கொண்டு வரும் போது, நாடகத்தனமோ சிறுகதை தனமோ இருக்கக் கூடாது.
ஒரு குதிரை, மற்றும் குதிரைக்காரன், பெண் , ஊர் , திருட்டு என சிறுகதை வடிவத்தை அப்படியே திரையிட்டால் படத்தை யாரால் பார்க்க முடியும். மிகவும் கடுப்படித்தது. கதையை எழுதிய பாஸ்கர் சக்திக்கும் இயக்கிய சுசீந்தரனுக்கும் கடுமையான கண்டிப்புக்கள். காசு கொடுத்து உட்கார்ந்த எனக்கு தானே தெரியும் வேதனை.
மற்றபடி கதையை சொல்லி மதிப்பெண் இடுவதற்கு ஒன்றுமில்லை. நன்றி!

Saturday, May 7, 2011

அன்று !


வீரப்பன்!



கர்நாடக மாநிலம், சாம்ராஜ் மாவட்டத்தில் அமைந்துள்ள கோபிறந்தத்தை சொந்த ஊராகக் கொண்ட வீரப்பனின் உடல், அவரது மனைவியின் ஊரான தமிழ்நாடு, மூலக்காடு கிராமத்தில் அவரது மனைவி,வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன்,சகோதரி முனியம்மா மற்றும் பிள்ளைகள் வித்யாராணி,பிரபா ஆகியோர் முன்னிலையில் புதைக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் நடந்தேறியுள்ளன.

வீரப்பனின் சொந்த ஊரில் பாதுகாப்பு குறைவாக இருப்பதாகவும், பெருந்திரளான மக்கள் கூட்டம் கூடியிருந்ததாகவும் தெரிவித்திருந்த காவற்துறையினர், வீரப்பனின் உடலை அங்கு கொண்டு செல்ல அனுமதி மறுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அவரது மனைவியின் சொந்த ஊரான மூலக்காடு பகுதியில் உடலை எரிப்பதற்காக எடுத்துச்சென்ற போதும், அவரது உறவினர்கள் மற்றும் அரசியல் பிரமுகரின் தலையீட்டால் அவரது உடல் புதைக்கப்பட்டுள்ளது.

தனது சொந்த ஊரில் வீரப்பனை இறுதியாக அவரது 15 வயதில் ஒரு தடவை பார்த்திருப்பதாக அந்த ஊரைச்சேர்ந்த இருவர் கூறியுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினரின் கெடுபிடிகள் காரணத்தால் வீரப்பன் தனது சொந்த ஊருக்கு செல்வதை தவிர்த்து வந்துள்ளார்.

எனினும்,வீரப்பனுக்கு ஆதரவானவர்கள் என்ற போர்வையில் இவ்வூரைச் சேர்ந்த பலரை அதிரடிப்படையினர் அடித்தே கொன்றிருப்பதாக ஊரைச் சேர்ந்தவர்கள் சாட்சியளித்துள்ளனர்.

ஊர் சம்பந்தப்பட்ட எந்தவொரு பிரச்சினையையும் ஆள்வைத்து முடிவெடுப்பதே வீரப்பனின் வழக்கமாக இருந்ததாக அவரோடு பணியாற்றிய முன்னாள் சகா கோவிந்தன் கருத்து தெரிவித்திருக்கும் அதே வேளை,

அதிரடிப்படையினரின் கெடுபிடிகளுக்குப் பயந்து வீரப்பனின் இழப்பினால் ஏற்பட்டிருக்கும் துயரத்தை மக்கள் மறைத்துக் கொண்டுள்ளதாகவும் ஊடகம் ஒன்றின் பேட்டியின் போது தெரிவித்துள்ளார்.

வீரப்பனின் இளைய மகள் பிரபா இது தான் முதற் தடவையாக தனது தந்தையின் முகத்தை நேரடியாக பார்த்திருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இனியாவது எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள் என்று வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தமிழக காவற்துறையினருக்கு உருக்கமான வேண்டு கோள் ஒன்றினை விடுத்துள்ள போதும்,

வீரப்பனின் மனைவிக்குச் சொந்தமான பணம்,சொத்துக்களை முடக்கி வைத்தும் அவர்களை பின்தொடர்ந்து அவர்கள் வாழ்க்கையினை இழுபறி நிலையில் வைத்திருக்கும் தமிழக காவற்துறை இது பற்றி முன்னேற்றகரமான எந்தெவொரு அறிக்கையையும் வழங்கவில்லை.

இதே வேளை, வீரப்பனின் குடும்பத்தாருக்கு எந்த வித நிவாரணமோ,இழப்புகளோ வழங்கப்படமாட்டாது என்று தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • -2004 ஆம் ஆண்டு வெளியான செய்தி


Thursday, May 5, 2011

அன்று.!

டாக்டர் பிரகாஷ்


டிசம்பர் 2001, அகமதாபாத்தில் நடந்து முடிந்த ஆர்த்தோபீடிக் கான்பரன்ஸில் கலந்துகொண்டு திரும்பி இருந்தேன். முந்தின நாள் இரவு அங்கு ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கினேன். இந்தப் பக்கம் என் மனைவி, அந்தப் பக்கம் நான், நடுவில் என் ஏழு வயது மகள்.

காலை 8.30 மணிக்கு என்னுடைய விமானம் சென்னையில் தரையிறங்கியது. முந்தின நாள் இரவு தான் நான் என் குடும்பத்தோடு கழிக்கும் கடைசி இரவு என்பது அப்போது எனக்கு தெரியாது.

ஆஸ்பத்திரியை நோக்கி காரை ஓட்டிக் கொண்டிருந்தேன். இன்று தான் என்னுடைய க்ளினிக்கில் கடைசியாக பேஷண்டுகளை பார்க்கப் போகிறேன் என்பதையும் உணரவில்லை. போன வாரம் செய்து முடித்த இடுப்பு எலும்பு மாற்று ஆபரேஷன் தான் நான் இறுதியாக ஆபரேஷன் தியேட்டரில் செய்த சிகிச்சை என்பதையும் அறியவில்லை. அதற்கு நான் எவ்வளவு பாடுபட்டு உரு கொடுத்திருந்தேன் தெரியுமா?

மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தபோது இனிமேல் அதற்கு வாய்ப்பே வராது என்று கனவிலாவது நினைத்துப் பார்த்திருப்பேனா? அடுத்த சில வருடங்களுக்கு காரின் ஸ்டீயரிங் வீலை பிடிக்கப் போவதில்லை என்பது தெரியுமா?

போலிஸ் அவிழ்த்துவிட்ட கதைகளை கேட்ட என் மனைவி என்னோடு எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்து விட்டார். விவாகரத்துக்கு விண்ணப்பித்தார். சம்மதித்தேன். கடந்த ஐந்தாண்டுகளில் என் மகளை ஒரு முறை கூட பார்க்கவே இல்லை. நீண்ட தலைமுடியோடு அழகான பெண்ணாக வளர்ந்து விட்டாள் என்று சொல்லக் கேள்வி.

எப்போதும் வேலை, வேலை என்று அலையும் என்னைப் போன்ற ஒருவனால் ஜெயிலில் எப்படிப் பொழுது போக்க முடியும்? கிடைத்த நேரத்தை எல்லாம் எழுதுவதில் செலவிட்டேன். 37 ஆயிரம் பக்கங்களில் 80 புத்தகங்களை எழுதிவிட்டேன்…

- டாக்டர் பிரகாஷ், 12.04.2006

Wednesday, April 20, 2011

அன்பார்ந்த தமிழக மக்களே ஒரு அவசரம்!


அன்பார்ந்த வாசகர்களே , ஒவ்வொரு வருடமும் பிரபல ஆங்கில இதழான டைம் இதழின் 2011 ஆம் ஆண்டின் சிறந்த 100 மனிதர்கள் பட்டியல்ல ஒரு ஆளா வந்து “நான் ரொம்ப நல்லவன்”னு பேர் எடுக்க கிளம்பிட்டாப்ல ராஜபக்ஷே. உலக அளவுல நான் ரொம்ப நல்லவன்னு அங்கீகாரம் வாங்க துடிக்கிற அவனுக்கு தமிழர்களாகிய நாம எல்லாரும் எதிரா ஓட்டு போட்டு அவனோட முகத்துல கரிய பூசணும். அதுக்கு நீங்க பண்ண வேண்டியது இதுதான். கீழே உள்ள லிங்கில் Select " No " என்று தேர்வு செய்யுங்கள். http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.html?xid=fb-time100
வாக்களித்தால் நன்றி!

Monday, March 14, 2011

வேடிக்கை மனிதர்கள்

ஒருநாள் எங்கள் அலுவலகத்துக்கு மணியார்டர் கொடுக்க வந்த தபால்காரர் சொன்ன தகவல் ஆச்சர்யம் அளித்தது. ஒரு ஆள் தினமும் ஏழு ரூபாய் மணியார்டர் எங்கேயோயிருந்து அனுப்புவாராம். அவர் அனுப்பும் பெறுநரில் ஆள், வீடு எதுவும் கிடையாதாம்!
சரி மணியார்டரை திருப்பி அனுப்பி விடலாம் என்று பார்த்தால் அனுப்புனர் முகவரியும் அதேதானாம்.
ஆக அந்த தொகை அரசாங்கத்திற்கு சென்று விடுகிறது.
இப்படி இதுவரை ஒருலட்ச ரூபாய் போல அனுப்பியிருக்கிறார். அந்த முகம் மற்றும் முகவரி தெரியாத நபர்.
இந்த லட்சணத்தில் ஒருநாள் எதேச்சையாக ஏழு ரூபாய் அனுப்ப..இந்த தபால் காரர் வேலை செய்யும் அலுவலகத்துக்கே அந்த ஆசாமி வர.., எல்லோரும் பிடித்துக் கொண்டனர் போல!
அந்த ஆளுக்கு அறுபது வயது இருக்கலாமாம்! அந்த பழைய முகவரியும் ஏழு ரூபாயும் மனதில் பதிந்து விட்டது போல!
பாவம் தாய்க்கோ தாரத்துக்கோ அனுப்பும் எண்ணம் மட்டுமே இருப்பதால் அந்த முகவரிக்கு ஏழு ரூபாய் சென்றுக் கொண்டே இருக்கிறது.
இந்த தபால்காரர்கள் பணம் அனுப்பின பிச்சிடுவேன் என மிரட்டினால் வேறு தபால்நிலையத்துக்கு போய் அனுப்பி விடுகிறாராம்.
இந்த ஏழு ரூபாய் நோட்டால் பெரிய பேஜாராகி இருக்கிறது அந்த தபால் நிலையம்.
ஆனால், அவரின் மனதில் பதிந்த அந்த ஏழு ரூபாயை யாரால் அழிக்க முடியும்.
ஆண்டவன் எனக்கு இரண்டு கருணைய காட்ட வேண்டும். ஒன்று அந்த நபரை காப்பாற்ற வேண்டும். இன்னொன்று அந்த நபரை நான் பார்க்க வேண்டும்.

Sunday, February 13, 2011

போஸ்ட் மார்ட்டம் : யுத்தம் செய் திரை விமர்சனம்:

மதிப்பெண்:



போஸ்ட் மார்ட்டம் :
யுத்தம் செய் திரை விமர்சனம்:

கருணாநிதியின் இளைஞன் படத்தை பாராட்டும் போதே அயிட்டம் ஷாங்குக்கு மஞ்சள் புடவைதான் மிஷ்கின் தருவார் என்று நினைத்தால், அதையே செய்து முதல்வரின் அன்பை பெற்றிருக்கிறார். பொதுவாகவே மிஷ்கின் படத்தில் இனி நடிப்பவர்கள் செருப்போ ஷுவோ அணிந்துக் கொண்டு வந்தால், தயவு செய்து சுத்தமாக அணிந்து வரவும். ஏனென்றால்.., கேமிரா அதைத்தான் நோக்கும்.

கதை இதுதான்! வரிசையாக ஆண்கள்,பெண்கள் என பலர் காணாமல் போய்க் கொண்டே இருக்கின்றனர். அவர்கள் எங்கு போனார்கள் ? என கண்டுபிடிப்பதுதான் சேரனின் வேலை. அவர் சிபிசிஐடி யாக நடித்திருக்கிறார்.
மர்ம படங்களில் இறுதியாக என்ன நடந்தது என தெரிய வரும்போது, இவ்வளவுதானா? என எண்ணத் தோன்றும். அதுவே தான் இங்கும் நடந்திருக்கிறது.

அதேபோல் இடைவேளை வரை ஒரு எளவும் புரியவில்லை. அப்படியானால் இடைவேளைக்கு மேல் புரிகிறதா? என்று கேட்டால், இடைவேளை வரை பார்த்ததும் மறந்து போய் பேய் போல விழிக்கிறோம். அப்படி ஒரு சொத்தப்பல் திரைக்கதை.

எல்லா படங்களிலும் முகத்தை மூடிக்கொண்டு அழுது தொலைக்கும் சேரன், இ ப்படத்தில் ஆறுதல் தருகிறார். அழவே இல்லை. மிக்க நன்றி சேரன்!
வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் இடங்களும் உண்டு.
இறுதியில் கிழவர்களை மம்மிபோல அலைய வைப்பது கொஞ்சம் சிரிப்பு என்றால், போலீஸ்காரர் ஒருவர் தர்பூசணி பழத்தை வண்டியை நிறுத்தி விட்டு, திருடிக் கொண்டு போவது அவ்வளவு யதார்த்தம். சிரிப்போ சிரிப்பு!
ஒரு பாட்டுக்கு அமீர் நன்றாக நடந்து வந்து சென்றிருக்கிறார்.

எல்லோரையும் சாக அடிக்கும் அந்த டாக்டர் ஃபேம்லி ஆவிகளோ என்று கூட எண்ணத் தோண்றியது.

ஆனால், ஒன்று கதை புரியாமல் இருக்கலாம். சேரன் அழாமல் இருக்கலாம். சண்டைக்காட்சிகளில் ஹீரோ கோழி பிடிக்காமல் இருக்கலாம். கடைசி வரை போரடிக்கமால் உட்கார வைப்பதற்கும் ஒரு திறமை வேண்டும்.

ஒரு காட்சி உண்மையில் எல்லோரையும் நெகிழ வைக்கிறது. சப்வேயில் தனது மகனின் வெட்டப்பட்ட இரு கைகளையும் பார்த்த அந்த தாயின் கதறல் நெகிழ வைக்கிறது. நிச்சயம் அவருக்கு விருது தரலாம். ஒரே காட்சியில் தூள் பண்ணிருக்கிறார். இதுவும் அந்த படத்திற்கான ஒரு ஆறுதல்.!

Saturday, February 12, 2011

உருப்படுமா அந்த நாடு!

அண்ணாச்சி!



கேரளா தமிழக மக்களுக்கு எதிராக உள்ளது என்ற பேச்சு உண்மை தானா?
நிச்சயமாக !

கேரளாவில் இப்போது அரிசி இரண்டு ரூபாயாம்..!ஆணை பிறப்பித்துள்ளார்கள்

என்ன கொடுமை பாருங்கள்..இங்குள்ள அரிசி கடத்தல் வியாபாரிகளுக்கெல்லாம் துரோகம் செய்து விட்டார்களே..உருப்படுமா அந்த நாடு..!

Thursday, February 3, 2011

கறுப்பு பணத்தின் கதை !(கறுப்பு பணம்னா கறுப்பாதானே இருக்கும்?)


கறுப்பு பணத்தின் கதை

ராஜீவ் காந்தி தனது அரசியல் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு தன்னை ஒரு நேர்மையாளராகக் காட்டிக்கொள்ள முற்பட்டதுதான். அவரது அரசியல் பிரவேசத்தின்போது அட்டையில் அவரது படத்தைப் போட்டு மிஸ்டர். க்ளீன் (திருவாளர் பரிசுத்தம்) என்று வர்ணிக்காத பத்திரிகைகளே இந்தியாவில் இல்லை எனலாம். அரசியலில் அவர் தோற்றுப் போனதற்கும் இதுதான் காரணம்.

ராஜீவ் காந்தியால் தான் ஏற்படுத்திக்கொண்ட அந்த மக்கள் மத்தியிலான நன்மதிப்பை, காப்பாற்றிக்கொள்ள முடியாமல் போனதுதான் அவரது தோல்விக்கு முக்கியக் காரணம்.

ஆனால், இந்திரா காந்தி, ராஜீவைப் போன்றவரல்லர். உங்கள் அரசில் ஊழல் தலைவிரித்தாடுகிறதே என்று கேட்டபோது, ‘உலகமெல்லாம் நடப்பதுதான்’ என்று அலட்டிக் கொள்ளாமல் பதில் அளித்தவர் அவர். இது நடந்தது 1983-ம் ஆண்டில்.

இந்திரா காந்தி இப்படிப் பேசியது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. நாட்டின் பெரிய பொறுப்பில் உள்ள ஒருவர், ஊழல் சகஜமான ஒன்றுதான் என்று கூறினால், ஊழலை எப்படி ஒழிப்பது என்று தில்லி உயர் நீதிமன்றத்தின் நேர்மையான நீதிபதி ஒருவர் வேதனைப்பட்டார். ஆனால், இந்திராவின் இந்தப் பேச்சு அவருக்குச் சாதகமாகவே அமைந்தது. ஆம். தம்மைப் பரிசுத்தமானவர் என்று கூறிக்கொள்ளாத ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி என்ன ஆகிவிடப்போகிறது என்கிற மனநிலை எதிர்க்கட்சிகளுக்கு வந்துவிட்டது. அதன் பிறகு இந்திரா மீது எப்போதும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழவேயில்லை.

இப்படி அரசியலில் எதார்த்தமாக இருந்த இந்திராவுக்கு நேர் எதிரானவராக ராஜீவ் நடந்து கொண்டார். தம்மை திருவாளர் பரிசுத்தம் என்று கூறிக்கொள்வதில் அவர் பெருமையடைந்தார். அதனால் ஏற்படப்போகும் அபாயங்கள் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை. விளைவு, போபர்ஸ் பீரங்கி பேரத்தில் நடந்த முறைகேடுகள் அம்பலமாகி, 1989-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ஆட்சி பறிபோயிற்று.

உண்மையிலே நேர்மையானவராக இல்லாதபோது, திருவாளர் பரிசுத்தமாகக் காட்டிக் கொள்வது கூடாது என்பதுதான் இதனால் அறியப்பட்ட அரசியல் பாடம். இந்தப் பாடத்தை சோனியா காந்தி தெரிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. இல்லாவிட்டால், ஊழலைப் பற்றிப் பேசும்போது இந்திராவின் பாதுகாப்பான வழியைத் தேர்ந்தெடுக்காமல், ராஜீவின் அபாயகரமான வழியை சோனியா தேர்ந்தெடுப்பாரா?

அலாகாபாத் கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், ‘ஊழலைப் பொறுத்துக்கொள்ள மாட்டேன்’ என்று ஆவேசமடைந்தார். அத்துடன் விடவில்லை. ஒருவாரம் கழித்து தில்லியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிலும் தன்னைப் பரிசுத்தமானவராகவும், எந்தவித ஊழல் கறையும் படியாதவராகவும் காட்டிக்கொள்ள அவர் முற்பட்டார். ‘ஊழலை வேரறுக்க வேண்டும்’ என்று கட்சித் தொண்டர்களுக்கு அறிவுரை கூறியதுடன், தேசத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் ஊழலுக்கு எதிராக உடனுக்குடன் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும் முழங்கினார். இந்த முழக்கம் 25 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ராஜீவ் காந்தி பேசியதைத்தான் நினைவுப்படுத்துகிறது.

இருப்பினும், ராஜீவுக்கும் சோனியாவுக்கும் இடையே இரு முக்கிய வேறுபாடுகளைக் குறிப்பிட முடியும். தம்மை ‘திருவாளர் பரிசுத்தம்’ என்று ராஜீவ் கூறிக் கொண்டபோது, அவருக்கு எதிராக எந்த ஊழல் புகாரும் இருக்கவில்லை. அதனால், ஊழல் புகாரிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவர் இப்படிப் பேசினார் என்று கூற முடியாது. ஆனால், இப்போது காமன்வெல்த் விளையாட்டு, ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடுகள், 2ஜி ஸ்பெக்ட்ரம் என ஒன்றன்பின் ஒன்றாகக் காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் பட்டியல் வளர்ந்துகொண்டே போகிறது. இந்த நிலையில், ஊழலைப் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா கூறிவருவது முரண்சுவையாக அல்லவா இருக்கிறது.

இரண்டாவது வேறுபாடு, எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் அரசியல் வாழ்வைத் தொடங்கிய ராஜீவ், போபர்ஸ் ஊழல் வெளியாகும்வரை எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் இருந்தார். இதற்கு நேர் எதிராக சோனியா மீது ரகசியமான ஸ்விஸ் வங்கிக் கணக்குகள், போபர்ஸ் கமிஷன் என நம்பத் தகுந்த ஊழல் புகார்களும், அவருக்கு எதிரான அதிர்ச்சியளிக்கும் ஆவணங்களும் வெளியாகியிருக்கின்றன.

சோனியாவின் குடும்பம் லஞ்சம் பெற்றதாக பிரபல சுவிஸ் பத்திரிகையில் ரஷியப் புலனாய்வுச் செய்தியாளர் ஆதாரத்துடன் எழுதிய கட்டுரைக்கு சோனியாவோ, அவரது குடும்பத்தினரோ எந்த மறுப்பும் இதுவரை தெரிவிக்கவில்லை. செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது வழக்குத் தொடுக்கவும் இல்லை. பின்னணி இப்படி இருக்கையில், ‘திருடன், திருடன்’ என்று திருடனே கத்திக் கொண்டு தப்பி ஓடுவதுபோல, ஊழலைப் பொறுக்க மாட்டேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார் சோனியா என்பதுதான் வேடிக்கை.



2.2 பில்லியன் டாலர் கதை

1991-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி சுவிட்சர்லாந்தின் ‘ஸ்வீசர் இல்லஸ்ட்ரேட்’ இதழ் சோனியாவைப் பற்றி அதிர்ச்சிகரமான கட்டுரை ஒன்றை வெளியிட்டது. ராஜீவ் காந்தி உள்ளிட்ட 12-க்கும் அதிகமான அரசியல்வாதிகளின் ரகசியங்கள் அதில் அம்பலமாகின. போபர்ஸ் பேரத்தில் கிடைத்த லஞ்சப் பணத்தை ஸ்விஸ் வங்கியில் ராஜீவ் பதுக்கி வைத்திருக்கிறார் என்று அந்தக் கட்டுரையில் பகிரங்கமாகக் கூறப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டு ஏதோ போகிறபோக்கில் கூறப்பட்டதல்ல. குற்றச்சாட்டைக் கூறிய ஸ்வீசர் பத்திரிகையும் சாதாரணமானதல்ல. 2.15 லட்சம் பிரதிகள் விற்கும், 9.17 லட்சம் வாசகர்களைக் கொண்ட பிரபலமான பத்திரிகை. சுவிட்சர்லாந்தில் ஆறில் ஒருபங்கினர் இதை வாசிப்பதாகப் புள்ளிவிவரம் இருக்கிறது. இப்படித் தரமான ஒரு பத்திரிகைதான் ராஜீவ் மீதும் சோனியா மீதும் ஆதாரத்துடன் குற்றம்சாட்டியது.

ரஷியாவின் உளவு அமைப்பான கேஜிபியின் ஆவணங்களை மேற்கோள்காட்டி, ‘இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா ரகசிய வங்கிக் கணக்கில் 2.5 பில்லியன் சுவிஸ் ஃபிராங்க் (2.2 பில்லியன் அமெரிக்க டாலர்) பணத்தை மைனரான தனது மகனின் பெயரில் வைத்திருக்கிறார்’ என்று ஸ்வீசர் கூறியது. அந்தவகையில் பார்த்தால், ராகுலுக்கு 18 வயது பூர்த்தியாவதற்கு முன்பே, அதாவது 1988-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன்பே, இந்த 2.2 பில்லியன் டாலர் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டிருக்க வேண்டும். இந்தப் பணம் இந்திய மதிப்பில் ரூ.10 ஆயிரம் கோடிக்குச் சமம்.

வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை ஸ்விஸ் வங்கிகள் அப்படியே முடக்கி வைப்பதில்லை. வாடிக்கையாளர்களின் சார்பில் பல்வேறு வகைகளில் அந்தப் பணம் வங்கியால் முதலீடு செய்யப்படுவது வழக்கம். நீண்டகாலப் பங்குப் பத்திரங்களில் அந்த லஞ்சப் பணம் முதலீடு செய்யப்பட்டிருந்தால், 2009-ம் ஆண்டில் அந்தப் பணம் ரூ. 42,345 கோடியாகப் பெருகியிருக்கும். அமெரிக்கப் பங்குகளில் முதலீடு செய்திருந்தால் ரூ. 58,365 கோடியாக வளர்ந்திருக்கும். இரண்டிலும் சரிபாதி என்ற வகையில் முதலீடு செய்திருந்தால் ரூ. 50,355 கோடியாகியிருக்கும்.

இந்தப் பணத்தை 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தத்துக்கு முன்பு எடுத்திருந்தால் ரூ. 83,900 கோடி கிடைத்திருக்கும். இதில் எந்த வகையில் கணக்கிட்டாலும் சோனியாவின் குடும்பத்துக்கு ரூ. 43,000 கோடியிலிருந்து ரூ. 84,000 கோடிக்குள் ஏதோ ஒரு அளவில் பெரும் பணம் இருக்கிறது என்பது மட்டும் தெளிவு.

கேஜிபி ஆவணங்கள்

சோனியா மீதான இரண்டாவது ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டு இன்னும் கடுமையானது. யெவ்ஜீனியா அல்பேட்ஸ் என்கிற ரஷியப் புலனாய்வு எழுத்தாளர் எழுதிய ‘தி ஸ்டேட் வித்இன் ஏ ஸ்டேட்: தி கேஜிபி அண்ட் இட்ஸ் ஹோல்ட் ஆன் ரஷியா – பாஸ்ட், பிரசன்ட், ப்யூச்சர்’ என்ற புத்தகத்தில் இந்தக் கடுமையான குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தன.

‘அரசியல் காரணங்களுக்காக கேஜிபியிடம் இருந்து நேரு குடும்பம், அதாவது ராஜீவ் காந்தியின் குடும்பம் லஞ்சம் பெற்றது’ என்று அந்தப் புத்தகத்தில் அல்பேட்ஸ் கூறியிருக்கிறார்.

கேஜிபி ஆவணங்களை மேற்கோள்காட்டி அந்தப் புத்தகத்தில் வரும் ஒரு செய்தி: 1982-ம் ஆண்டில் கேஜிபி தலைவராகப் பொறுப்பேற்ற விக்டர் செப்ரிகோவ் கையெழுத்திட்டிருக்கும் கடிதமொன்றில், ‘இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் மகனுடன் சோவியத் யூனியனின் கேஜிபி, நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கிறது. சோவியத் யூனியனின் வர்த்தக அமைப்புகள், பிரதமர் குடும்பத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வணிக நிறுவனங்களுக்கு அளித்த வாய்ப்புகள் மூலம் கிடைத்த நன்மைகள் குறித்து ஆர்.காந்தி மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தவகையில் கிடைத்த பணத்தை ஆர்.காந்தியின் கட்சிக்காகப் பயன்படுத்துவதாக அவர் ரகசியமாகத் தெரிவித்திருக்கிறார்’ (பக்.223)

இன்னொன்றையும் அல்பேட்ஸ் அம்பலப்படுத்தியிருக்கிறார். ‘ராஜீவ் காந்தியின் குடும்ப உறுப்பினர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, சோனியாவின் தாயார் பவுலா மைனோ ஆகியோருக்கு அமெரிக்க டாலர்களில் பணம் அளிப்பதற்கு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவிடம் அனுமதி கோரி செப்ரிகோவ் கடிதம் எழுதியிருக்கிறார்’ என்று அந்தப் புத்தகத்தில் அல்பேட்ஸ் தெரிவித்திருந்தார்.

இந்தப் புத்தகம் வெளியாவதற்கு முன்பே ரஷியாவின் பல ஊடகங்கள் இந்த விவகாரத்தை அம்பலப்படுத்தியிருந்தன. இவற்றைக் கொண்டு 1992-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி தி ஹிந்து நாளிதழ், ‘ராஜீவ் காந்தி குடும்பத்துக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு லாபகரமான வர்த்தக ஒப்பந்தங்களை வழங்கும் ஏற்பாடுகளைச் செய்வதில் கேஜிபி ஈடுபட்டிருப்பதை ரஷியாவின் உளவுத்துறை ஒப்புக்கொண்டிருக்கிறது’ என்று செய்தி வெளியிட்டது.

இந்திய ஊடகங்கள்

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதால், சுவிஸ் மற்றும் ரஷியாவில் அம்பலமான சோனியாவின் ஊழல்கள் தொடர்பாக இந்திய ஊடகங்கள் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, காங்கிரஸின் தலைவர் பதவியை சோனியா ஏற்பாரா, மாட்டாரா என்ற கேள்விக்குள்ளேயே இந்திய ஊடகங்கள் முடங்கியிருந்தன.

ராஜீவின் மரணத்துக்கு முன்பாக, 1988 டிசம்பர் 31-ம் தேதி ஸ்டேட்ஸ்மேன் இதழில் பிரபல கட்டுரையாளர் நூரானி எழுதிய கட்டுரையில் ஸ்வீசர் மற்றும் அல்பேட்ஸ் அம்பலப்படுத்திய மோசடிகளைக் குறிப்பிட்டிருந்தார். 2002-ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி அன்று ஸ்வீசர் இதழ் மற்றும் அல்பேட்ஸின் புத்தகங்களின் முக்கியப் பக்கங்களைத் தனது இணையதளத்தில் சுப்பிரமணியன்சுவாமி வெளியிட்டிருந்தார். ராஜீவுக்கு 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் வங்கிக் கணக்கு இருப்பதை உறுதி செய்யும் ஸ்வீசர் இதழ் அனுப்பிய மின்னஞ்சலும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்தது. அந்தப் பிரதியின் அசல் படியையும் சுப்பிரமணியன் சுவாமிக்கு ஸ்வீசர் இதழ் அனுப்பியிருந்தது.

‘ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் பணத்தை மீட்க காங்கிரஸ் உரிய நடவடிக்கை எடுக்கும்’ என்று 27.04.2009 அன்று மங்களூரில் சோனியா பேசியதற்கு பதிலளிக்கும் வகையில், 29.04.2009 அன்று ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் நான் எழுதிய கட்டுரையிலும் இதுதொடர்பான அனைத்து விவரங்களையும் தெளிவுபடுத்தியிருந்தேன். ஸ்விஸ் வங்கியில் முறைகேடாகப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவரே, அதை மீட்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்போகிறேன் என்று பேசுவது எப்படி என அந்தக் கட்டுரையில் கேள்வி எழுப்பியிருந்தேன்.

இதற்கு முன்பாக 15.06.2006 அன்று பிரபல பத்திரிகையாளர் ரஜீந்தர் பூரி இதுபற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதேபோல், 27.12.2010 அன்று இந்தியா டுடே இதழில் சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்ட பணம் எங்கே என்று ராம்ஜேட்மலானி கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆக, இந்திய ஊடகங்கள் சோனியாவின் ஊழல்கள் பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கின்றன என்பது தெளிவாகிறது.

அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எழுப்பப்பட்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் அமல் தத்தா இதுபற்றி 7.12.1991-ம் ஆண்டில் கேள்வி எழுப்பினார். ஆனால், அப்போதைய மக்களவைத் தலைவர் சிவராஜ் பாட்டீல் இதற்கு அனுமதிக்கவில்லை.



மௌனமே குற்றச்சாட்டுக்கு ஆதாரம்

1991-ம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்து, ரஷிய, இந்திய ஊடகங்கள் திரும்பத் திரும்பக் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு சோனியாவும் ராகுலும் எந்தவகையிலும் பதிலளிக்கவில்லை. அவர்களது பதில் வெறும் மௌனமாகத்தான் இத்தனை ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. எதிலும் சிக்கிக் கொள்ளக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கையுடன் இப்படி மௌனமாக இருப்பது அவர்கள் மீதான சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது.

ராஜீவ் காந்திக்கு வந்த ஊழல் பணத்தை ராகுல் பெயரில் சோனியா ஸ்விஸ் வங்கியில் ரகசியமாகப் பதுக்கி வைத்திருக்கிறார் என்று ஸ்வீசர் இதழ் கூறியபோது, அந்தக் குற்றச்சாட்டை எந்த வகையிலும் இருவரும் மறுக்கவில்லை. ஸ்டேட்ஸ்மேன் இதழில் நூரானியின் கட்டுரை வெளியானபோது, அந்த இதழ் மீதோ நூரானி மீதோ, தாயும் மகனும் வழக்குத் தொடுக்கத் தயாராக இல்லை. எல்லா ஆவணங்களையும் சுப்பிரமணியன் சுவாமி தனது இணையதளத்தில் வெளியிட்டபோது அதையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. எனது கட்டுரை எக்ஸ்பிரஸ் இதழில் வந்தபோது என் மீது வழக்குத் தொடுக்கத் துணியவில்லை. தி ஹிந்துவும், டைம்ஸ் ஆப் இந்தியாவும் கேஜிபி பணப்பட்டுவாடா குறித்து செய்தி வெளியிட்டபோது ரஷியாவே அதிர்ந்தது. அப்போதும் சோனியாவும் ராகுலும் எதுவும் நடக்காததுபோல்தான் இருந்தார்கள். இப்படி எப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் மோசடிகள் அம்பலப்படுத்தப்பட்டாலும் சோனியாவும் ராகுலும் மௌனம் சாதிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், சோனியாவின் விசுவாசிகள் அப்படி இருக்கவில்லை. 2007-ம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் இதழில் அல்பேட்ஸின் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த சோனியாவின் ஊழல் குறித்த முழுப் பக்க விளம்பரம் ஒன்று வந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சோனியா ஆதரவாளர் ஒருவர் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், சோனியாவுக்கே வழக்குத் தொடரத் துணிவில்லாதபோது, இந்த வழக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது. அந்த வழக்குக்கூட அவதூறு வழக்காகத்தான் இருந்ததே தவிர, 2.2 பில்லியன் குற்றச்சாட்டை எதிர்க்கவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சோனியா நேர்மையானவர், ஸ்வீசர் இதழும் அல்பேட்ஸின் புத்தகமும் கூறுவதுபோல அவர் கேஜிபியிடம் பணம் பெறவும் இல்லை, ஸ்விஸ் வங்கிக் கணக்கும் இல்லை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். குற்றச்சாட்டுகள் எழும்போது அதற்கு மறுப்புத் தெரிவித்திருக்க வேண்டாமா? நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்க வேண்டாமா?

ஒரு நேர்மையானவர், பழிச் சொல்லுக்கு அஞ்சுபவர் இப்படி மௌனமாகவா இருப்பார்?
மொரார்ஜி தேசாய் ஒரு சிஐஏ ஏஜென்ட் என்று புலிட்சர் பரிசுபெற்ற சேமௌர் ஹெர்ஷ் எழுதியபோது, 87 வயதான மொரார்ஜி கொதித்து எழுந்தார். அவதூறு வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது 93 வயதாகியிருந்த மொரார்ஜிக்கு பதிலாக முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸிங்கர் ஆஜராகி, அவருக்கும் சிஐஏவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார். தம்மீது இல்லாத பழியைச் சொன்னால் தள்ளாத வயதிலும்கூட இப்படித்தான் கடுஞ்சினம் கொள்வார்கள். அதுதான் நேர்மையாளர்களின் குணம்.

ஆனால், சோனியாவிடமும் ராகுலிடமும் இருந்து இதுபோன்ற பதிலடி வரவில்லை. இத்தனைக்கும் இவர்கள் இன்னமும் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிடவில்லை. மொரார்ஜிபோல தள்ளாத முதியோரும் இல்லை. அப்படியிருந்தும் ஏன் இந்த மௌனம்?

இதுவே ராகுலும் சோனியாவும் இல்லாமல் அத்வானியும் மோடியுமாக இருந்தால் நமது ஊடகங்கள் பேசாமல் இருந்திருக்குமா? இதைத் தலைப்புச் செய்தியாக்கி விவாதப் பொருளாக்கி இருக்காதா? இல்லை, சோனியாவின் கைப்பாவையாக இயங்கும் இந்த அரசு அவர்கள் இருவரையும் சும்மா விட்டிருக்குமா?

ரூ. 20.80 லட்சம் கோடி கொள்ளை

சோனியாவின் குடும்பத்துடன் விவகாரம் முடிந்துவிடவில்லை. இவர்களுடைய பணமும் அதில் அடக்கம் என்பதால் ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் பணத்தை மீட்க அரசு முயற்சி எடுக்கத் தயங்குகிறது. அதனால், நாட்டுக்கு அவர்களால் ரூ. 20.80 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவைத் தவிர, மற்ற எல்லா நாடுகளும் விழித்துக்கொண்டு, தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை மீட்கும் முயற்சியில் இறங்கிவிட்டன. ஆனால், இந்தியா மட்டும் இந்தக் கள்ளப் பணத்தை மீட்பதில் ஆர்வம் காட்டாமல் சுணங்கியிருக்கிறது.

2009-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் 500 பில்லியன் முதல் ரூ. 1.4 டிரில்லியன் வரையிலான கறுப்புப் பணத்தை மீட்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எல்.கே. அத்வானி உறுதியளித்தார். முதலில் அவ்வளவு பணம் இருக்காது என காங்கிரஸ் மறுத்தது. நாடு முழுவதும் கறுப்புப் பண விவகாரம் பரபரப்பான பிறகுதான் மன்மோகனும் சோனியாவும் சுதாரித்தார்கள். தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தததும், வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை மீட்போம் என்று மிகத் தாமதமாக உறுதியளித்தார்கள்.

ஜிஎப்ஐ என்கிற கறுப்புப் பணத்தை மீட்கும் பணியில் ஈடுபடும் ஒரு சர்வதேசத் தன்னார்வ அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி 462 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 20.8 லட்சம் கோடி) கறுப்புப் பணம் இந்தியர்களால் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது. ’1948 முதல் 2008 வரை வரி ஏய்ப்பு, ஊழல், லஞ்சம், குற்றச்செயல்கள் மூலமாக 213 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தை இந்தியா இழந்திருக்கிறது’ என்று ஜிஎப்ஐ குறிப்பிட்டுள்ளது. இதில் எந்தக் கணக்கின்கீழ் சோனியா குடும்பத்தில் 2.2 பில்லியன் டாலர் கணக்கு வரும் என்பதை நாமே ஊகித்துக் கொள்ள வேண்டியதுதான்.

இதுபோக, 2ஜி, காமன்வெல்த் என இப்போதைய ஊழல்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இவர்களது பதுக்கல் தொகை இன்னும் பல மடங்காக இருக்கக்கூடும். இப்படி சோனியாவின் குடும்பமே வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும்போது, அவர்கள் எப்படி மற்றவர்களின் பணத்தை மீட்பதற்கு நடவடிக்கை எடுப்பார்கள். அப்படியானால், இந்தக் குடும்பத்தால், இந்தியாவுக்கு ரூ. 20.80 லட்சம் கோடி நஷ்டம்தானே!

கொள்ளையர்களுக்குப் பாதுகாப்பு

வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்பதில் அரசுக்கு அக்கறையில்லை என்பதற்குப் பல ஆதாரங்கள் இருக்கின்றன. லிக்டென்ஸ்டைன் வங்கியில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களின் பட்டியலை ஜெர்மன் நாட்டு அதிகாரிகள் 2008 பிப்ரவரியில் சேகரித்தார்கள். அரசுகள் விரும்பினால் அந்தந்த நாட்டைச் சேர்ந்த கள்ளக்கணக்கு வைத்திருப்போரின் பட்டியலை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஜெர்மன் அதிகாரிகளுக்குக் கிடைத்த பட்டியலில் சுமார் 250 இந்தியர்களின் பெயர்கள் இருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்தப் பட்டியலைத் தருகிறோம் என்று ஜெர்மன் அதிகாரிகள் வெளிப்படையாகச் சொன்ன பிறகும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதைப் பெறுவதில் ஆர்வம் காட்டவேயில்லை. லிக்டென்ஸ்டைன் வங்கியில் லாக்கர் வசதி வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்களைப் பெறுவதற்கு இந்திய நிதியமைச்சகமும் பிரதமர் அலுவலகமும் நடவடிக்கை எடுக்கவில்லை என ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ இதழ் ஆதாரப்பூர்வமாகச் செய்தி வெளியிட்டது.

விவகாரம் பூதாகரமாவதைப் புரிந்துகொண்ட அரசு, கள்ளக்கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலைப் பெற முன்வந்தது. ஆனால், வெளிப்படையாக அல்ல. ஜெர்மனியுடன் செய்து கொண்ட வரி ஒப்பந்தத்தின் வழியாக வெளிப்படையாகப் பெற்றால், அந்த விவரங்கள் ஊடகங்களில் வெளியிட வேண்டிவரும். அப்படியில்லாமல், ஒப்பந்தத்தின் வழியாக விவரங்களைப் பெற்றால், அவை ரகசியமானவையாக வைக்கப்படும். ஊடகங்களுக்குத் தரவேண்டியது இல்லை.

வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் விவரத்தை நாட்டு மக்கள் அறிந்துகொள்ளக் கூடாது என்பதில் மத்திய அரசுக்கு இருக்கும் அக்கறையைப் புரிந்துகொள்வதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா, என்ன?

மத்திய அரசின் மெத்தனத்தால் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு ஆதாரமும் இருக்கிறது. ஹசன் அலி என்ற குதிரை வியாபாரி ஸ்விஸ் வங்கியில் ரூ. 1.5 லட்சம் கோடி வைத்திருப்பதை வருமான வரித்துறை கண்டுபிடித்தது. இதையடுத்து அவருக்கு ரூ. 71,848 கோடி வரி விதிக்கப்பட்டது. என்ன நடந்ததோ, இந்த வழக்கு இப்போது குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது.

விவரங்களைக் கேட்டு சுவிஸ் அரசுக்கு எழுதப்பட்ட கோரிக்கை வேண்டுமென்றே தவறாக எழுதப்பட்டது. அதனால், தேவையான விவரங்கள் கிடைக்கவில்லை. உண்மையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த பலர் ஹசன் அலிக்கு நெருக்கமானவர்களாக இருப்பதே இந்த வழக்கு மூடப்பட்டதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஹசன் அலியை விசாரித்தால் இன்னும் எத்தனையோ பேரை விசாரிக்க வேண்டுமே!

ஒரு குடும்பமும், அவர்கள் சுருட்டிக் கொண்டுபோய் வெளிநாட்டு வங்கியில் வைத்திருக்கும் பணமும்தான் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டுக்கொண்டு வருவதைத் தடுக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை. இப்படிப் பல ஆயிரம் கோடி பணத்துக்குச் சொந்தக்காரர்கள், வெறும் ரூ. 3.63 கோடி வைத்திருப்பதாகவும், கார்கூட இல்லை எனவும் தேர்தல் உறுதிமொழிப் பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஒருவேளை இத்தாலியர்கள் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வித்தையைக் கற்றுத் தேர்ந்தவர்களோ என்னவோ?

இந்தியாவில் ஊழல் அதிகரித்து வருவதாகச் சோனியா வருத்தப்படுகிறார்; ஊழல்வாதிகளுக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று ராகுல் கோபப்படுகிறார். ஆமென்!

-ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி
தினமணி

Wednesday, February 2, 2011

அண்ணாச்சி !



இந்த கேரக்டர் பெயர் அண்ணாச்சி..இந்த அண்ணாச்சியிடம் தான் நாம் அரசியல் உரையாடல்களை உறவாடப் போகிறோம்.

இப்படித்தான் இருக்கப்போகுது..நையாண்டி..! சாம்பிளுக்கு இதோ..!

"இந்த ஊர்ல சாப்பாடு சூப்பரு"ன்னு சேலம் மாநாட்டுல பிரேமலதா விஜயகாந்த் கேட்டாங்களே இதைப்பற்றி..?

''எனக்கென்னவோ அவங்க பொய் பேசமாட்டாங்கன்னு தான் தோணுது..சாப்பாடு நல்லாயிருக்கும்னுதான் படுது..உங்களுக்கென்ன சந்தேகம்.."

Thursday, January 27, 2011

அட்றா..அட்றா..நாக்கு முக்க..!நாக்கு முக்க.!

வருது தேர்தல்...அடைங்க ஆறுதல்..! நம்ம வாசகர்களுக்கு ஒரு தமாஸான தமாஸ் காத்திருக்கு..! நம்ம வாக்காளர்கள் அப்புறம் வேட்பாளர்களை நினைச்சு நினைச்சு மட்டுமில்லாம.., படிச்சு..படிச்சும் சிரிங்க..!...


விரைவில் அறிவிப்பு ..வெயிட் ப்ளீஸ்..!