Friday, June 10, 2011

கொடுமைடா கோவிந்த சாமி!




இதை நிதானமா படிங்க..உங்க கருத்தை தவறாம பதிவு செய்யுங்க!
கள்ளகாதலுக்கு தடையாக இருந்த கணவரை, கள்ளகாதலன் துணையுடன் கழுத்தறுத்து கொன்ற மனைவியை போலீஸார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், கொளத்தூர் அடுத்த வெடிக்காரனூரை சேர்ந்த கணபதி மகன் கூலி தொழிலாளி கோவிந்தன் (37). இவரது மனைவி லட்சுமி. நேற்று முன்தினம் காலை தன் வீட்டு கட்டிலில் கழுத்து அறுப்பட்ட நிலையில் கோவிந்தன் பிணமாக கிடந்தார். கொலை தொடர்பாக விசாரணை நடத்திய கொளத்தூர் இன்ஸ்பெக்டர் சக்ரபாணி (பொறுப்பு) தலைமறைவாக இருந்த கோவிந்தன் மனைவி லட்சுமியை நேற்று கைது செய்து விசாரணை நடத்தினார். லட்சுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமிக்கும் கள்ள தொடர்பு இருந்துள்ளது. அதை பழனிச்சாமி உறவினர் குழந்தை கவுண்டர் கண்டித்துள்ளார். அதனால், 2008ல், கள்ள காதலுக்கு தடையாக இருந்த குழந்தை கவுண்டரை லட்சுமி, பழனிச்சாமி இருவரும் கொலை செய்து, பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி அணையில் வீசி விட்டனர். விசாரணை நடத்திய போலீஸார் லட்சுமியையும், பழனிச்சாமியையும் கைது செய்தனர்.
ஜாமீனில் வெளிவந்த பழனிச்சாமியை மற்றொரு கோஷ்டியினர் கொலை செய்தனர். அதனால், குழந்தை கவுண்டர் கொலை வழக்கில் லட்சுமி விடுதலை செய்யப்பட்டார்.
அதன் பின்னர் லட்சுமிக்கு, வெடிக்காரனுரை சேர்ந்த ராஜாராம் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதை கணவர் கோவிந்தன் கண்டித்துள்ளார். எனவே, குழந்தை கவுண்டரை கொலை செய்தது போல, கள்ள காதலுக்கு தடையாக இருந்த கணவர் கோவிந்தனையும் கொலை செய்ய லட்சுமி முடிவு செய்தார். கடந்த 7ம் தேதி இரவு ராஜராமை, தன் வீட்டுக்கு அழைத்து வந்தாள் லட்சுமி. அப்போது கோவிந்தன் குடி போதையில் கட்டிலில் தூங்கி கொண்டிருந்தார். வீட்டினுள் சென்ற லட்சுமி தூங்கி கொண்டிருந்த கோவிந்தனின் இரு கால்களையும் கெட்டியாக பிடித்து கொண்டாள். ராஜாராம் அங்கிருந்த அரிவாளை எடுத்து வந்து கோவிந்தன், கழுத்தை ஆட்டை அறுப்பது போல அறுத்து கொலை செய்துள்ளார். கோவிந்தன் இறந்தது உறுதி செய்த பின், இருவரும் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர். மேற்கண்ட தகவல் விசாரணையில் தெரியவந்தது. லட்சுமியை நேற்று சிறையில் அடைந்த போலீஸார்,தலைமறைவாக உள்ள லட்சுமியின் கள்ள காதலன் ராஜாராமை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment