சில தினங்களுக்கு முன்பு தனியார் டி.வி.யில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒரு கிராமத்திலிருந்து சங்கரி என்ற பெண்மணி கலந்து கொண்டார். சத்துணவு கூடத்தில் சுமார் 27 ஆண்டுகளாக பணியாற்றும் அவருக்கு இரண்டு மகள்கள். இரண்டு ஏக்கர் விவசாய நிலம் இருந்தும் தண்ணீர் வற்றிவிட்டதால் விளைச்சல் இல்லை. கணவருக்கு வேலை இல்லை. ஏழ்மையான குடும்பம். ஆனால் இரு மகள்களையும் நன்றாக படிக்கவைத்து மூத்த மகளுக்கு திருமணத்தையும் முடித்துவிட்டார்கள்.இளைய மகளை வங்கியில் கடன் வாங்கி, உயர் பட்டப்படிப்பு வரை படிக்கவைத்துவிட்டார்கள். படிப்பு முடியும் போதே நல்ல சம்பளத்தில் வேலையும் கிடைக்கும் வாய்ப்பு. மகள் சம்பாதித்து கடனை கட்டிவிடலாம் என்று நிம்மதியாய் இருக்க, தேர்வு முடிந்து வீட்டிலிருந்த மகளுக்கு திடீரென காய்ச்சல். அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்த சில மணி நேரங்களிலேயே உயிர் போய்விட்டது. மூளையில் கட்டி ! விவசாயத்திற்காக அரசாங்கத்தால் கொடுக்கப்படும் கடன்கள், சம்பந்தப்பட்ட விவசாயி அகால மரணம் அடைந்தால் அந்தக் கடன் அரசால் தள்ளுபடி செய்யப்படுகிறது. விவசாயத்தில் வருமானம் இல்லாததாலும், வருமானம் ஈட்டக் கூடிய குடும்பத் தலைவர் மரணம் அடைந்துவிட்டதாலும், அந்த குடும்பத்தை காப்பாற்ற கடன் தள்ளுபடி செய்யும் கொள்கையை அரசு வைத்துள்ளது. ஆனால், கல்வி கடனுக்கு அப்படியில்லை.கல்விக் கடன் பெருபவர்கள் பெரும்பாலும் ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். திடீரென்று ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்துவிட்டால் அந்தக் குடும்பத்தால் கடனை திருப்பி கட்ட இயலுமா? பிள்ளைகள் சம்பாதித்து கடனை அடைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, பெற்றோர்கள் கடன் வாங்கி படிக்க வைக்கிறார்கள். கடன் பெற்ற மாணவனோ, மாணவியோ மரணமடையும் போது அந்த கடனை தள்ளுபடி செய்ய அரசு ஆவணம் செய்யுமா?- நன்றி- மாபெரும் தலைவன் கேஆர் இளங்கோ ப்ளாக்..
No comments:
Post a Comment