Sunday, February 13, 2011

போஸ்ட் மார்ட்டம் : யுத்தம் செய் திரை விமர்சனம்:

மதிப்பெண்:



போஸ்ட் மார்ட்டம் :
யுத்தம் செய் திரை விமர்சனம்:

கருணாநிதியின் இளைஞன் படத்தை பாராட்டும் போதே அயிட்டம் ஷாங்குக்கு மஞ்சள் புடவைதான் மிஷ்கின் தருவார் என்று நினைத்தால், அதையே செய்து முதல்வரின் அன்பை பெற்றிருக்கிறார். பொதுவாகவே மிஷ்கின் படத்தில் இனி நடிப்பவர்கள் செருப்போ ஷுவோ அணிந்துக் கொண்டு வந்தால், தயவு செய்து சுத்தமாக அணிந்து வரவும். ஏனென்றால்.., கேமிரா அதைத்தான் நோக்கும்.

கதை இதுதான்! வரிசையாக ஆண்கள்,பெண்கள் என பலர் காணாமல் போய்க் கொண்டே இருக்கின்றனர். அவர்கள் எங்கு போனார்கள் ? என கண்டுபிடிப்பதுதான் சேரனின் வேலை. அவர் சிபிசிஐடி யாக நடித்திருக்கிறார்.
மர்ம படங்களில் இறுதியாக என்ன நடந்தது என தெரிய வரும்போது, இவ்வளவுதானா? என எண்ணத் தோன்றும். அதுவே தான் இங்கும் நடந்திருக்கிறது.

அதேபோல் இடைவேளை வரை ஒரு எளவும் புரியவில்லை. அப்படியானால் இடைவேளைக்கு மேல் புரிகிறதா? என்று கேட்டால், இடைவேளை வரை பார்த்ததும் மறந்து போய் பேய் போல விழிக்கிறோம். அப்படி ஒரு சொத்தப்பல் திரைக்கதை.

எல்லா படங்களிலும் முகத்தை மூடிக்கொண்டு அழுது தொலைக்கும் சேரன், இ ப்படத்தில் ஆறுதல் தருகிறார். அழவே இல்லை. மிக்க நன்றி சேரன்!
வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் இடங்களும் உண்டு.
இறுதியில் கிழவர்களை மம்மிபோல அலைய வைப்பது கொஞ்சம் சிரிப்பு என்றால், போலீஸ்காரர் ஒருவர் தர்பூசணி பழத்தை வண்டியை நிறுத்தி விட்டு, திருடிக் கொண்டு போவது அவ்வளவு யதார்த்தம். சிரிப்போ சிரிப்பு!
ஒரு பாட்டுக்கு அமீர் நன்றாக நடந்து வந்து சென்றிருக்கிறார்.

எல்லோரையும் சாக அடிக்கும் அந்த டாக்டர் ஃபேம்லி ஆவிகளோ என்று கூட எண்ணத் தோண்றியது.

ஆனால், ஒன்று கதை புரியாமல் இருக்கலாம். சேரன் அழாமல் இருக்கலாம். சண்டைக்காட்சிகளில் ஹீரோ கோழி பிடிக்காமல் இருக்கலாம். கடைசி வரை போரடிக்கமால் உட்கார வைப்பதற்கும் ஒரு திறமை வேண்டும்.

ஒரு காட்சி உண்மையில் எல்லோரையும் நெகிழ வைக்கிறது. சப்வேயில் தனது மகனின் வெட்டப்பட்ட இரு கைகளையும் பார்த்த அந்த தாயின் கதறல் நெகிழ வைக்கிறது. நிச்சயம் அவருக்கு விருது தரலாம். ஒரே காட்சியில் தூள் பண்ணிருக்கிறார். இதுவும் அந்த படத்திற்கான ஒரு ஆறுதல்.!

No comments:

Post a Comment