Thursday, May 5, 2011

அன்று.!

டாக்டர் பிரகாஷ்


டிசம்பர் 2001, அகமதாபாத்தில் நடந்து முடிந்த ஆர்த்தோபீடிக் கான்பரன்ஸில் கலந்துகொண்டு திரும்பி இருந்தேன். முந்தின நாள் இரவு அங்கு ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கினேன். இந்தப் பக்கம் என் மனைவி, அந்தப் பக்கம் நான், நடுவில் என் ஏழு வயது மகள்.

காலை 8.30 மணிக்கு என்னுடைய விமானம் சென்னையில் தரையிறங்கியது. முந்தின நாள் இரவு தான் நான் என் குடும்பத்தோடு கழிக்கும் கடைசி இரவு என்பது அப்போது எனக்கு தெரியாது.

ஆஸ்பத்திரியை நோக்கி காரை ஓட்டிக் கொண்டிருந்தேன். இன்று தான் என்னுடைய க்ளினிக்கில் கடைசியாக பேஷண்டுகளை பார்க்கப் போகிறேன் என்பதையும் உணரவில்லை. போன வாரம் செய்து முடித்த இடுப்பு எலும்பு மாற்று ஆபரேஷன் தான் நான் இறுதியாக ஆபரேஷன் தியேட்டரில் செய்த சிகிச்சை என்பதையும் அறியவில்லை. அதற்கு நான் எவ்வளவு பாடுபட்டு உரு கொடுத்திருந்தேன் தெரியுமா?

மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தபோது இனிமேல் அதற்கு வாய்ப்பே வராது என்று கனவிலாவது நினைத்துப் பார்த்திருப்பேனா? அடுத்த சில வருடங்களுக்கு காரின் ஸ்டீயரிங் வீலை பிடிக்கப் போவதில்லை என்பது தெரியுமா?

போலிஸ் அவிழ்த்துவிட்ட கதைகளை கேட்ட என் மனைவி என்னோடு எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்து விட்டார். விவாகரத்துக்கு விண்ணப்பித்தார். சம்மதித்தேன். கடந்த ஐந்தாண்டுகளில் என் மகளை ஒரு முறை கூட பார்க்கவே இல்லை. நீண்ட தலைமுடியோடு அழகான பெண்ணாக வளர்ந்து விட்டாள் என்று சொல்லக் கேள்வி.

எப்போதும் வேலை, வேலை என்று அலையும் என்னைப் போன்ற ஒருவனால் ஜெயிலில் எப்படிப் பொழுது போக்க முடியும்? கிடைத்த நேரத்தை எல்லாம் எழுதுவதில் செலவிட்டேன். 37 ஆயிரம் பக்கங்களில் 80 புத்தகங்களை எழுதிவிட்டேன்…

- டாக்டர் பிரகாஷ், 12.04.2006

No comments:

Post a Comment